» »நாகலாந்து காட்டுக்குள்ள ஒரு அழகிய பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 7

நாகலாந்து காட்டுக்குள்ள ஒரு அழகிய பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 7

Written By: Udhaya

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே அமைந்திருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேசம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையாக வாழும் அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன. முற்றிலும் மாறுபட்ட நாகலாந்து மண்ணிற்கு ஒரு முறை பயணம் செய்தீர்கள் என்றால் காலம் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு பரவசமூட்டும் நினைவுகளை திரும்ப எடுத்துக்கொண்டு வரலாம்.

உண்மையில் இயற்கையை வர்ணிக்க மனித மொழிக்கு சக்தியே இல்லை என்பதை நாகாலாந்து வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள். நாட்டின் மிகச்சிறிய மாநிலமான நாகாலாந்து ஒரு மர்மமான பூமியாகவும் நெடுங்காலமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆழமான பாரம்பரிய கலாச்சாரம் வேரூன்றியிருக்கும் இந்த மாநிலம் தனது விருந்தினர்களை ஒருபோது பிரமிக்க வைக்க தவறுவதேயில்லை. 'இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் அளவுக்கு இம்மாநிலத்தின் இயற்கை வனப்பு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றிருக்கிறது. சுருங்கச்சொன்னால் நாகாலாந்து சுற்றுலா என்பது வேறொன்றுமில்லை - அது இயற்கைச்சுற்றுலாதான். அதாவது மாசுபடாத கன்னிமை மாறாத இயற்கையின் வனப்பை அருகிருந்து தரிசிக்கும் அற்புதச்சுற்றுலா.

கைஃபைர்

கைஃபைர்


கைஃபைர் நகரத்தில் ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம், சலோமி மற்றும் மிமி குகைகள் போன்றவை பார்க்க வேண்டிய முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. லவர்ஸ் பாரடைஸ் மற்றும் சுக்காயப் ராக் கிலிஃப் போன்றவையும் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். கைஃபைர் நகரத்திற்கு அருகிலுள்ள சிமி கிராமத்தில் பயணிகள் வவாடே நீர்வீழ்ச்சி மற்றும் ட்வின் ஸ்டோன்ஸ் அல்லது கம்பீட்டிங் ஸ்டோன்ஸ் எனப்படும் பாறை அமைப்புகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். மேலும், சிஃபி எனும் இடத்தில் பழைய சங்தம் பழங்குடி கிராமம் ஒன்றையும் பார்க்கலாம். இங்கு நிங்த்சலோங் எனும் பிரசித்தமான ஒற்றைப்பாறை சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Official website

 ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம்

ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம்

கைஃபைர் மாவட்டத்தில் உள்ள இந்த ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம் இயற்கை ரசிகர்களுக்கும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற சுற்றுலா அம்சமாகும். இந்த சரணாலயத்தில் சிறுத்தைகள்,புலிகள், காட்டு எருமைகள், ஹூலாக் கிப்பன் மற்றும் மிதுன் போன்றபல வகை விலங்கினங்கள் வசிக்கின்றன. நாகலாந்து பகுதியின் பிரசித்தமான பறவையான இருவாட்சி இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. 642 ஹெக்டெர் பரப்பளவில் இந்த காட்டுயிர் சரணாலயம் பரந்து விரிந்துள்ளது. மேலும் இது மியான்மார் நாட்டின் சர்வதேச எல்லையை ஒட்டியும் அமைந்திருக்கிறது.


Thomas Tolkein

கோஹிமா

கோஹிமா


நாகா மக்கள் வசித்து வரும் பிற பகுதிகளைப் போலவே, வரலாற்றின் பெரும்பாலான பக்கங்களில் கோஹிமாவும் தனித்தே இருந்து வந்தது. 1840-ல் இங்கு வந்த பிரிட்டிஷார் நாகா பழங்குடியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பை தான் சந்திக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் பிரிட்டிஷ் நிர்வாகத்தினர் கோஹிமாவை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்து வந்த நாகா மலைப்பகுதிகளுக்கான நிர்வாக தலைமையிடமாக உருவாக்கினார்கள்.

Khamo88

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவே இந்த நகரம் கண்கவரும் அழகை காணும் இடமெல்லாம் கடை விரித்திருக்கிறது. கூர்மையான சிகரங்கள், வானைக் கிழித்துக் கொண்டு செல்லும் மேகங்கள், மூடுபனி நிரம்பிய காற்று ஆகியவற்றைக் கொண்டு கோஹிமா சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது. மாநில அரசு அருங்காட்சியகம், கோஹிமா மிருகக்காட்சி சாலை, ஜாஃபு சிகரம் ஆகியவை உலகம் முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கோஹிமாவை நோக்கி கவர்நதிழுக்கும் இடங்களாகும். ட்சுகோவ் பள்ளத்தாக்கு மற்றும் ட்சுலெகீ ஓடை ஆகியவை நீங்கள் கோஹிமாவில் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய பிற இடங்களாக உள்ளன.

Sharada Prasad CS

கோஹிமா விலங்கியல் பூங்கா

கோஹிமா விலங்கியல் பூங்கா


மலையேற்றம் செய்து நாகாலாந்தின் தாவர மற்றும் விலங்கு வகைகளை கண்டு மகிழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது. நாகாலாந்து மாநிலத்தின் பறவையாக அறிவிக்கப் பட்டுள்ள டிராகோபான் பறவையை இந்த மிருகக்காட்சி சாலையில் காண முடியும்.

மிகவும் அரிய வகை பறவையான இவற்றில் 500 மட்டுமே இன்றளவில் உயிருடன் உள்ளன. இது மட்டுமல்லாமல், மாநில அரசின் விலங்காக உள்ள 'மிதுன்' வகை காட்டெருமைகளும் கோஹிமா விலங்கியல் பூங்காவில் உள்ளன.

பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை கொண்டுள்ள இந்த பூங்காவில் கோல்டன் லாங்கூர் மற்றும் ஆசிய கருப்புக் கரடிகளையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

Kalyanvarma

பெக்

பெக்

பெக் மாவட்டம் `சக்ஹெஸாங்க்', `போச்சுரி' போன்ற பழங்குடி இன மக்களின் இருப்பிடமாக உள்ளது. இதில் ஆச்சர்யமாக போச்சுரி பழங்குடி இனம் என்பது `சோக்ரி', `ஹிஸா', மற்றும் `சாங்' ஆகிய மூன்று துணை பழங்குடியினரின் கலவையாக உள்ளது. இவற்றை தவிர பெக் பள்ளத்தாக்கில் பல அரிய வகை மல்லிகைகள் காணப்படுகின்றன. பெக் பல்வேறு விலங்குகள் மற்றும் தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது. இங்கு `ப்ளிதின் ட்ராகோபன்' என்கிற அரிய வகை ஃபீசன்ட் காணப்படுகிறது. மேலும் இங்கு குதோன்யே, துரின்யே, துர்ஹின்யே, நுகுன்யே, துக்ஹான்யே, மற்றும் சுக்ருன்யே போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

Jackpluto

பெரன்

பெரன்

பேரய்ல் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் பெரன் மாவட்டம் இயற்கையன்னையின் தனிப்பெரும் கருணை பெற்ற இடமாகும். இந்த மாவட்டத்தில் அடர்த்தியான தாவரங்கள் மற்றும் ஆர்ப்பரிக்கும் ஆறுகள் மற்றும் வித்தியாசமான விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை உங்களால் காண முடியும். இந்த வளமான தாவரங்களால் இப்பகுதி மித வெப்ப மண்டலத்துடன் கலந்த வகையான காடுகளை கொண்டிருக்கிறது. கரும்பு மற்றும் மூங்கில் தாவரங்களை பெருமளவு கொண்டிருக்கும் இந்த காடுகளில், பைன், யூகலிப்டஸ் மற்றும் பல்வேறு வகையான காட்டு ஆர்கிட் பூக்களையும் காண முடிகிறது. கனிம வளம் நிரம்பிய மாவட்டமாக இருக்கும் இந்த மாவட்டம், இந்த காரணங்களுக்காக இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளது. இந்த நகரத்தை சுற்றியிருக்கும் முக்கியமான சுற்றுலா தலங்களாக ன்டாங்கி தேசிய பூங்கா, பவோனா மலை, கிஸா மலை, பென்ரூ மற்றும் புயில்வா கிராமத்திலுள்ள குகைகள் ஆகியவை உள்ளன.

Jim Ankan Deka

ன்டாங்கி தேசிய பூங்கா

ன்டாங்கி தேசிய பூங்கா

மலைகள், மலை முகடுகள் மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த பூங்கா முகாமிடுவதற்கும் மற்றும் சாகசம் செய்வதற்கும் மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. இந்த தேசிய பூங்காவில் நீங்கள் காணும் காட்டெருமைகள் (மிதுன்) மற்றும் ஹுலுக் கிப்பன்கள் ஆகியவற்றை நாகலாந்தில் மட்டும் தான் காண முடியும். இவை மட்டுமல்லாமல், புலிகள், காட்டு நாய்கள், தேவாங்கு கரடிகள் மற்றும் பறக்கும் அணில்கள் ஆகியவற்றையும் இந்த பூங்காவில் காண முடிவதால் இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. கறைபடாத இயற்கை அழகுடன் விரிந்திருக்கும் இந்த பூங்கா காண்பவரின் கண்களுக்கு அழகை மெருகேற்றி காட்டுகிறது.

Murari Bhalekar

ஸுந்ஹிபோடோ

ஸுந்ஹிபோடோ


நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள `ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் `மோகோக்சுங்க்', மாவட்டமும், மேற்கில் `ஓக்ஹா' மாவட்டமும் அமையப்பெற்றுள்ளன. ஸுந்ஹிபோடோ என்பது `ஸுந்ஹிபோ', மற்றும் `டோ' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். ஸுந்ஹிபோ என்பதற்கு `பூக்கும் புதர்' என்பது பொருள். இந்த செடி வெள்ளை இலைகளுடன், கடற்பாசி போன்ற காதுகளுடன் சாறு மிகுந்து காணப்படும். அந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். டோ என்பதற்கு `மலையின் மேல்' என்று பொருள். ஸுந்ஹிபோடோ என்பது ஒரு ஸூமி வார்த்தையாகும்.

P Jeganathan

லுமாமி கிராமம்

லுமாமி கிராமம்

லுமாமி கிராமம், ஸுந்ஹிபோடோ மாவட்டத்தின் துணைப்பிரிவான `அகுலுடோ'வில் அமைந்துள்ளது. ஸுந்ஹிபோடோ மட்டுமே இந்த மாவட்டத்தில் உள்ள ஒரே நகரமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். எனவே, இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. டிஸு, டொயாங்க் மற்றும், ஸுதா போன்ற ஆறுகள் ஸுந்ஹிபோடோவின் வழியே பாய்ந்து செல்கின்றன. மேலும், ஸுந்ஹிபோடோ நாகாலாந்தின் ஆறாவது மிக பெரிய நகராக விளங்குகிறது. மற்றைய ஐந்து நகரங்களாவன: திமாபுர், கோஹிமா, மொகொக்சுங்க், ஒக்ஹா, மற்றும் டுஇன்சாங்க்.

P Jeganathan

Read more about: travel, forest, nagaland