» »கடவுளும் பேயும் ஒரே குகையில் காட்சி தரும் அதிசயம் எங்கே தெரியுமா?

கடவுளும் பேயும் ஒரே குகையில் காட்சி தரும் அதிசயம் எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா அப்போ பேயை நம்புறீங்களா நம்பிக்கை இருந்தாலும் இல்லைனாலும் இந்த கட்டுரைய முழுசா படிப்பீங்க. ஏன்னா

சென்னையில் அமைந்துள்ள சாய்பாபா கோயில்கள்

நாங்க சொல்லப்போற விசயம் அந்தமாதிரி. தெரியுமா ? கடவுளும் அமானுஷ்ய சக்தியும் ஒரே இடத்தில் காட்சி தரும் அரிய நிகழ்வு பெங்களூரு அருகே நடந்து வருகிறது.

இதை காணவேண்டுமா? வேறு வழியில்லை நீங்கள் நேரடியாகச் செல்லவேண்டும். வாங்க போகலாமா?

 நெல்லி தீர்த்த சோமேசுவரர் கோயில்

நெல்லி தீர்த்த சோமேசுவரர் கோயில்


நெல்லி தீர்த்த சோமேசுவரர் கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

 பழமை

பழமை

இது 1487ம் ஆண்டிலேயே கட்டப்பட்ட குகைக் கோயில் என்பதால் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

 அமானுஷ்யம்

அமானுஷ்யம்

அதுமட்டுமல்ல இதன் அமானுஷ்ய நிகழ்வுகள் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருவதை சில சமயம் பயமுறுத்திப் பார்க்கிறது.

 சிவனின் கோட்டை

சிவனின் கோட்டை


இது சிவனின் கோட்டை ஆதலில் இந்த குகைக்குள் இருக்கும் பேய் நம்மை எதுவும் செய்யாது என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள். ஆனால் 6 மணிக்கு மேல்....

 இருள்சூழ் கோட்டை

இருள்சூழ் கோட்டை


முற்றிலும் இருள் சூழ்ந்த இந்த கோயிலுக்கு தீப்பந்தம் உதவியுடன் செல்லமுடியும். இந்த குகைக்கோயில் 200மீட்டர் வரை நீண்டுள்ளது.

 ஆறுமாதம் கடவுளுக்கு ஆறு மாதம் பக்தர்களுக்கு

ஆறுமாதம் கடவுளுக்கு ஆறு மாதம் பக்தர்களுக்கு

ஒரு வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே இங்கு பக்தர்கள் செல்லமுடியும். அப்படியானால் மீதி ஆறு மாதம் இங்கு என்னென்ன நடக்கும் தெரியுமா?

 முற்றிலும் ஈரப்பதம்

முற்றிலும் ஈரப்பதம்


இந்த குகை வருடம் முழுவதும் ஈரப்பதத்துடன்தான் காணப்படுகிறது. இதன் வழியாக செல்லும்போது நம்மீது படும் காற்று குளிர்ந்த நிலையில் வீசுகிறது.

 நெல்லி தீர்த்தம்

நெல்லி தீர்த்தம்


இங்கு பாயும் நதியின் ஒரு பகுதி குகைக்குள் வழிந்தோடுகிறது. இது தித்திப்பாகவும் நெல்லிக்கனி சுவையுடையதாகவும் இருக்கிறது.

இதை நெல்லித் தீர்த்தம் என்கின்றனர். இதன் பெயரிலேயே இந்த கோயிலும் அழைக்கப்படுகிறது.

 புராதானம்

புராதானம்

அசுரர் கதைகள் பல கேட்டிருப்பீர்கள். அதைத் தொடர்ந்தே இந்த கதையும் இருக்கிறது. முனிவர் இட்ட சாபத்தால் உருமாறிய அசுரனை அழிக்க சிவபெருமான் வந்ததாக கூறுகின்றனர்.

 மாமன்னரின் ஆவி

மாமன்னரின் ஆவி

இந்த பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் ஒருவர் இந்த கோயிலுக்கு தவறாமல் வருகை தந்து பூசை செய்வாராம். இங்கு நுழைவது ஒன்றும் அவ்வளவு எளிதி கிடையாது. எவ்வளவு கடினம் என்பதை பாருங்கள்.

 ஒரு ஆள் அளவு

ஒரு ஆள் அளவு

ஒரு ஆள் நுழையும் அளவே இதன் வாசல் இருக்கும். அதற்குள் நுழைந்து சென்றால் கும்மிருட்டில் எதையும் பொருட்படுத்தாது செல்லவேண்டும்.

பின்னர் உயிருக்கே உலை வைக்கும் சில கடினமான பகுதிகளையும் கடக்கவேண்டுமாம்.

 சாலிக்ராம படிகங்கள்

சாலிக்ராம படிகங்கள்

சாலிக்ராம படிகங்கள் எனப்படும் அரிய வகை கற்களால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

 சிறு குளத்தின் மர்மங்கள்

சிறு குளத்தின் மர்மங்கள்

இந்த குளத்தில் இறங்கி குளித்துவிட்டு போனால் உங்களுக்குள் ஒரு பலம் வருமாம். அப்படியே கோயிலுக்குள் செல்லும்போது கடவுளின் அருள் கிட்டுமாம்.

 பேய் தாக்காத அதிசயம்

பேய் தாக்காத அதிசயம்

இந்த குளத்தில் இறங்கிவிட்டு நீரைத் துடைக்காமல் அப்படியே செல்பவர்களுக்கு எதும் ஆகவில்லை என்கிறார்கள் இங்குள்ளவர்கள். புனித நீர் பேயிடம் இருந்து காப்பாற்றுவதாகவும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

 மன்னரின் ஆவி

மன்னரின் ஆவி

ஏற்கனவே குறிப்பிட்டுள்ள மாமன்னரின் ஆவி இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இவர் தீவிர சிவபக்தராக இருந்தாலும், ஆவியான பின் இங்கு வரும் பக்தர்களை துன்புறுத்தி வந்திருக்கிறார்.

 இரவு நேரங்களில்

இரவு நேரங்களில்

இந்த குகைக்கு இரவு நேரங்களில் யாரும் வருவதில்லை. வருடத்தில் ஆறு மாதம் சிவபெருமானுக்கு முனிவர்கள் பூசை செய்வார்களாம். அப்போது அமானுஷ்ய சக்திகள் இங்கு வரும் பக்தர்களை மிரட்டுமாம். இதையெல்லாம் கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இந்த ஒரு விசயம் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

 வியப்பில் ஆழ்த்தும் அந்த விசயம்

வியப்பில் ஆழ்த்தும் அந்த விசயம்

இந்த குகைக்குள் நண்டு, பாம்பு, பன்றிகள் ஆகியவை இருக்கின்றன. இவை கடவுளின் வாகனங்களாக அறியப்படுகின்றன. இங்குள்ள பாம்புகள் கடித்தாலும் பக்தர்களுக்கு ஏதும் ஆவதில்லை என்பது மிகவும் வியப்பாக உள்ளது.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மங்களூரு அருகேயுள்ள மூடப்பிடரியில் தான் இந்த கோயில் உள்ளது.

எடப்பாடா எனும் ஊரை மங்களூருவிலிருந்து எளிதாக அடையலாம். அங்கிருந்து வெறும் 8 கிமீ யில் உள்ளது இந்த குகைக் கோயில்.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்