Search
  • Follow NativePlanet
Share
» »மார்கழி மாதம் மகாவிஷ்ணு அருள் கிடைக்க பஞ்சரங்கதலங்களுக்கு போங்க!

மார்கழி மாதம் மகாவிஷ்ணு அருள் கிடைக்க பஞ்சரங்கதலங்களுக்கு போங்க!

மார்கழி மாதம் மகாவிஷ்ணு அருள் கிடைக்க பஞ்சரங்கதலங்களுக்கு போங்க!

மார்கழி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் பெரும்பாலும் விஷ்ணு தலங்களைத் தேர்ந்தெடுத்து செல்வார்கள். உங்கள் வாழ்வில் வளம் வேண்டி பயணம் செய்பவர்கள், இந்த கோயில்களுக்கு போனால் முழுப் பலன் கிடைக்கும்.

ஸ்ரீரங்கப்பட்டினம்

ஸ்ரீரங்கப்பட்டினம்


ஆதி அரங்கம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கப்பட்டினம் கர்நாடக மாநிலத்தின், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இது காவிரி ஆற்றங்கரையில் தீவாக அமைந்துள்ளது. ரங்கநாதரும், ரங்கநாயகியும் இங்கு தெய்வங்களாக அருள்புரிகின்றனர்.

Vinu raj

வரலாறு

வரலாறு

மேலக்கங்கர் அரச படைத்தலைவர் திருமலையா என்பரால் 984ம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டிணம் தீவை ராமானுஜருக்கு தானமாக வழங்கினார்.

PP Yoonus

தெய்வங்கள்

தெய்வங்கள்

கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

Chitra sivakumar

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மைசூருவிலிருந்து 22கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கப்பட்டிணம்.

மைசூரு - யாதவகிரி வழியாக செல்லும்போது நிறைய கோயில்களையும், ரயில் மியூசியம் உட்பட நிறைய சுற்றுலாப் பகுதிகளையும் ரசிக்கமுடியும். இதுதான் சிறந்த வழியாகும். மாற்று வழியாக மோஹல்லா கோட்டை, டோரா வழியாகவும் செல்லலாம்.

 திருவரங்கம்

திருவரங்கம்


மத்திய அரங்கம் எனப்படும் திருவரங்கம் தமிழகத்தின் திருச்சிமாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவரங்கம் அரங்கநாதர் கோயில் உலகப் புகழ் பெற்றதாகும். 108 வைணவத்தலங்களுள் ஒன்றாகும்.

Ajay Goyal

அமைப்பு

அமைப்பு


அரங்கநாதசுவாமி கோயில் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.

600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும். 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் தென்னிந்தியாவிலேயே பெரியது.

Soldierhustle

 தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

அரங்கநாதர், ரங்கநாயகி, நம்பெருமாள் உள்ளிட்ட பல தெய்வங்களை கொண்ட இந்த கோயிலில், சந்திரத் தீர்த்தம் உட்பட 8 தீர்த்தங்கள் உள்ளன.

Planemad

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருச்சியிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. இது காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து 9கிமீ தூரத்தில் உள்ளது.

 கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

பஞ்சரங்கத் தலங்களுள் அப்பாலரங்கம் தலம் இதுவாகும். இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது.

இது 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். திருப்பேர் நகர் என்பது இந்த ஊரின் மற்றொரு பெயராகும்.


பா.ஜம்புலிங்கம்

 எப்படிச் செல்லலாம்?

எப்படிச் செல்லலாம்?

அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படும் இந்த தெய்வம் இருக்கும் அப்பாலரங்கத்துக்கு தஞ்சாவூரிலிருந்து ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்


கும்பகோணம் நகரில் அமைந்துள்ள சாரங்கபாணி கோயில் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகும்.

கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும்.

Rsmn

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கும்பகோணத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். அருகிலேயே பிரம்மா கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்

திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.

Krishna Kumar

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X