» »சத்ய சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமிக்கு ஒரு பயணம் செல்வோமா?

சத்ய சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமிக்கு ஒரு பயணம் செல்வோமா?

Posted By: Udhaya

சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. புட்டப்பர்த்தி நகரின் வரலாறு சத்ய சாய்பாபாவின் பிறப்பு மற்றும் வாழ்கையோடு ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது. அதுபற்றியும் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

 கொல்லப்பள்ளி

கொல்லப்பள்ளி

'இடையர்களின் பூமி' என்ற பொருளில் கொல்லப்பள்ளி என்று அறியப்பட்டு வந்த புட்டப்பர்த்தி நகரம் முன்பு ஒரு சிறிய விவசாய கிராமமாக இருந்து வந்தது. அப்போதுதான் சத்யநாராயன் ராஜு என்ற பெயரில் அவதரித்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா. அதன் பிறகு அவரின் வியக்கத்தக்க ஆற்றலையும், அதீத ஆன்மீக சக்தியையும் கண்டுணர்ந்த மக்கள் அவரை சீரடி சாய் பாபாவின் மறுபிறப்பாகவே ஏற்றுக் கொண்டனர். இதற்கு பின்பு சத்ய சாய் பாபா அகிம்சை, அமைதி, அன்பு, நேர்மை, உண்மை உள்ளிட்ட தன்னுடைய கொள்கைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அளித்த போதனைகள் அனைத்தையும் உலகமே உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது.


commons.wikimedia

 பிரஷாந்தி நிலையம்

பிரஷாந்தி நிலையம்

ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் 1950-ஆம் ஆண்டு பிரஷாந்தி நிலையம் என்ற ஆஸ்ரமம் நிறுவப்பட்ட பின்பு புட்டப்பர்த்தி நகரம் உலகத் தரம் மிக்கதாக மாற்றமடைந்தது. இதற்கு பிறகு விமான நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் என்று அனைத்தும் சேர்ந்து புட்டப்பர்த்தி நகரை இந்தியாவின் எந்த ஒரு நவீன நகரத்துக்கும் இணையாக விளங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

T.sujatha -

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

புட்டப்பர்த்தி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக ஹனுமான் கோயில், வில்லேஜ் மசூதி மற்றும் சாய் பாபாவின் தாத்தா கொண்டம ராஜுவால் கட்டப்பட்ட சத்யபாமா கோயில் ஆகியவை அறியப்படுகின்றன. அதோடு மற்றுமொரு சத்யபாமா கோயில் புட்டப்பர்த்தியிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் சாய் பாபாவின் அண்ணன் சேஷம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது.

J929 .

சிவன் கோயில்

சிவன் கோயில்


இவைதவிர நீங்கள் புட்டப்பர்த்தி வரும் போது சத்ய சாய் பாபா பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலை கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. மேலும் சித்ராவதி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வரம் கொடுக்கும் மரம் பயணிகள் மற்றும் சாய் பாபாவின் பக்தர்கள் மத்தியில் வெகுப்பிரபலம்.

T.sujatha

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

புட்டப்பர்த்தியின் பிரஷாந்தி நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ சத்ய சாய் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர புட்டட்பர்த்தியிலிருந்து 131 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் செப்டம்பரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்கள் புட்டப்பர்த்தி நகருக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் உகந்த பருவங்களாகும்.

பிரஷாந்தி நிலையம்

பிரஷாந்தி நிலையம்

'அமைதியின் உறைவிடம்' என்ற அர்த்தத்தில் பிரஷாந்தி நிலையம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்தை தேடி உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியையும், நிம்மதியையும் நாடி வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு ஆஸ்ரமத்தின் சபா மண்டபத்தில் இருந்தவாறு சாய் பாபா தரிசனம் அளிப்பார். 1950-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எண்ணற்ற நவீன வசதிகள் அமைந்துள்ளன. மேலும் இந்த ஆஸ்ரமம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு மற்றும் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது.

ஹனுமான் கோயில்

ஹனுமான் கோயில்

ஹனுமான் கோயில் அல்லது ஆஞ்சநேய சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் கோயில் கோருபுரம் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை அடையும் போது சத்ய சாய் பாபாவால் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஒன்று உங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பை அளிப்பது போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஹனுமான் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் காலடியில் ஒரு சிறு குளம் உள்ளது. இந்த சிறிய குளம் ஆஞ்சநேயேரின் கண்ணீராகவும், இராமபிரான் மீது அவர் வைத்திருந்த பக்தியை பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

Williampfeifer

வில்லேஜ் மசூதி

வில்லேஜ் மசூதி


ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அறிவுரையின் பேரில் வில்லேஜ் மசூதி 1978-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வில்லேஜ் மசூதி எழுப்பப்பட்டுள்ள இடத்தில் இஸ்லாமிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்த இடத்தை முன்னர் தோண்டிய பொழுது சில விபரீதமான விபத்துகளும், துர்சம்பவங்களும் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே பாபாவின் அறிவுறுத்தலின் படி கட்டப்பட்ட இந்த மசூதியில் கெட்ட சம்பவங்கள் அல்லது விபத்துகள் நடப்பது நின்று போயிற்று.

wiki

சத்யபாமா கோயில்

சத்யபாமா கோயில்


சத்யபாமா கோயில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பாட்டனார் கொண்டம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 3 அடி உயர சத்ய பாமா விக்கிரகமும், பல்வேறு கிருஷ்ண பகவானின் உருவங்களையும் நீங்கள் பார்க்கலாம். சத்யபாமா கோயில் உருவானதற்கு பின் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. அது இந்த பகுதியில் சிறப்பாக கூறப்படுகிறது.

J929

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்