» »ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்! வாங்க

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்! வாங்க

Written By: Udhaya

சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. புட்டப்பர்த்தி நகரின் வரலாறு சத்ய சாய்பாபாவின் பிறப்பு மற்றும் வாழ்கையோடு ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது. அதாவது 'இடையர்களின் பூமி' என்ற பொருளில் கொல்லப்பல்லி என்று அறியப்பட்டு வந்த புட்டப்பர்த்தி நகரம் முன்பு ஒரு சிறிய விவசாய கிராமமாக இருந்து வந்தது. இங்குதான் அவதரித்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா. இதுதான் நாம் காணப்போகும் அவதாரத் தலம்....

ஆன்மீக சக்தி

ஆன்மீக சக்தி

ஆன்மீக சக்தி

சத்யநாராயன் ராஜுவின் வியக்கத்தக்க ஆற்றலையும், அதீத ஆன்மீக சக்தியையும் கண்டுணர்ந்த மக்கள் அவரை சீரடி சாய் பாபாவின் மறுபிறப்பாகவே ஏற்றுக் கொண்டனர். இதற்கு பின்பு சத்ய சாய் பாபா அகிம்சை, அமைதி, அன்பு, நேர்மை, உண்மை உள்ளிட்ட தன்னுடைய கொள்கைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அளித்த போதனைகள் அனைத்தையும் உலகமே உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது.

j929

 உலகத் தரம்

உலகத் தரம்


ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் 1950-ஆம் ஆண்டு பிரஷாந்தி நிலையம் என்ற ஆஸ்ரமம் நிறுவப்பட்ட பின்பு புட்டப்பர்த்தி நகரம் உலகத் தரம் மிக்கதாக மாற்றமடைந்தது. இதற்கு பிறகு விமான நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் என்று அனைத்தும் சேர்ந்து புட்டப்பர்த்தி நகரை இந்தியாவின் எந்த ஒரு நவீன நகரத்துக்கும் இணையாக விளங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

Williampfeifer

முக்கிய சுற்றுலாப் பகுதிகள்

முக்கிய சுற்றுலாப் பகுதிகள்

புட்டப்பர்த்தி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக ஹனுமான் கோயில், வில்லேஜ் மசூதி மற்றும் சாய் பாபாவின் தாத்தா கொண்டம ராஜுவால் கட்டப்பட்ட சத்யபாமா கோயில் ஆகியவை அறியப்படுகின்றன. அதோடு மற்றுமொரு சத்யபாமா கோயில் புட்டப்பர்த்தியிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் சாய் பாபாவின் அண்ணன் சேஷம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது.

Nikhilb239

சிவன் கோயில்

சிவன் கோயில்

இவைதவிர நீங்கள் புட்டப்பர்த்தி வரும் போது சத்ய சாய் பாபா பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலை கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. மேலும் சித்ராவதி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வரம் கொடுக்கும் மரம் பயணிகள் மற்றும் சாய் பாபாவின் பக்தர்கள் மத்தியில் வெகுப்பிரபலம்.

Herry Lawford

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

புட்டப்பர்த்தியின் பிரஷாந்தி நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ சத்ய சாய் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர புட்டட்பர்த்தியிலிருந்து 131 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் செப்டம்பரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்கள் புட்டப்பர்த்தி நகருக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் உகந்த பருவங்களாகும்.

T.sujatha

Read more about: travel, temple