» »பீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்

பீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்

Written By: Udhaya

பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம் போன்றவற்றின் உன்னத கேந்திரமாக திகழ்ந்திருந்தது. பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவுக்கு அருகில் முறையே 5ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா ஆகிய கல்விக்கூடங்கள் இன்றைய பல்கலைக்கழக முறைக்கு ஒரு முன்னோடியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கல்வி மையங்கள் சர்வதேச அளவிலும் அக்காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றான ராஜ்கிர் பற்றி இந்த பதிவில் காண்போம்.

 பீகார்

பீகார்

ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில் இணைக்கிறது பக்திபூர்.

Hideyuki KAMON

 பள்ளத்தாக்கு

பள்ளத்தாக்கு

ராஜ்கிர் ஒரு அழகிய பள்ளத்தாக்கில் உள்ளதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் கூரைகளாக எழில் கொஞ்சும் மலைகள் திகழ்ந்து வருகின்றன. ராஜ்கிர் நகரத்தில் புத்தரை பற்றியும் புத்த மதத்தை பற்றியும் எண்ணிலடங்கா கதைகள் பேசப்படுகின்றன.

Aryan paswan

 நினைவுச் சின்னங்கள்

நினைவுச் சின்னங்கள்


ராஜ்கிர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள் ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இது சுற்றுலா வருபவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அஜட்ஷத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

LRBurdak

 பிரம்மகுந்த்

பிரம்மகுந்த்


ராஜ்கிர் சுற்றுலாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது பிரம்மகுந்த். பிரம்மகுந்த் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வெந்நீர் ஊற்றாகும். இதை காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

Aryan paswan

ஜெயின் மற்றும் புத்த மதங்கள்

ஜெயின் மற்றும் புத்த மதங்கள்

கௌதம புத்தரும், மஹாவீரும் தங்கள் வாழ்க்கையின் அதிக நாட்களை இங்கே கழித்துள்ளதால் இந்த இடத்தை ஜெயின் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ராஜ்கிர் என்றால் ராஜக்ரிஹா என்று அர்த்தமாகும். அதாவது ராஜாவின் வீடு என்று பொருளாகும். இது ஜரசந்தா என்ற பேரரசரின் கதையையும் அவர் பாண்டவர்களிடம் நடத்திய போரை பற்றியும் விளக்கும். மேலும் கௌதம புத்தர் மற்றும் மஹாவீரரின் வாழ்க்கை பயணத்திற்கு சாட்சியாக விளங்குகிறது ராஜ்கிர்.

myself

சப்ட்பர்னி

சப்ட்பர்னி

ஜெயின் மற்றும் புத்த மதத்தின் வளர்ச்சியை பற்றிய முக்கிய நிகழ்வுகளை வெளிக்காட்டும் அட்டவணையாக விளங்குகிறது ராஜ்கிர் சுற்றுலா. புத்த மதத்தின் அவை முதன் முதலாக கூடியது இங்குள்ள சப்ட்பர்னி குகையில் தான். புத்த மதத்தின் வளர்ச்சியும் புகழும் ராஜ்கிர்ரை புத்தமத செயல்பாடுகளின் மையமாக மாற்றியது.

myself

 புத்தமத சுற்றுலா மண்டலம்

புத்தமத சுற்றுலா மண்டலம்

ஒட்டு மொத்த புத்தமத சுற்றுலா மண்டலத்துக்கும் ராஜ்கிர் சுற்றுலா ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது. மேலும் இதர புத்த மத புனித ஸ்தலங்களுடன் இணைப்பில் உள்ளது. நலந்தாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கிர் நகரம், புத்தமதத்தின் மற்றொரு புனித ஸ்தலமாகும்.

myself

ராஜ்கிர்ரின் திருவிழாக்கள்!

ராஜ்கிர்ரின் திருவிழாக்கள்!

ராஜ்கிர் நடன மஹோத்சவா திருவிழா தான் ரஜ்கிர்ரில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவாகும். ராஜ்கிர் மக்கள் இத்திருவிழாவை பக்தி பாடல்கள், வாத்திய இசை, நாட்டுப்புற நடனம், நாடகங்கள் மற்றும் மரபுசார்ந்த நடனங்களுடன் ஆத்மபூர்வமாக கொண்டாடுவார்கள்.

Photo Dharma

மகர சங்கராந்தி

மகர சங்கராந்தி

பௌஸ் மாதம் முடியும் போது ஜனவரி 14-ஆம் தேதியை ஒட்டி ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது புனித நீராடி இனிப்பு கொடுத்து மகிழ்வார்கள் மக்கள். மற்றொரு முக்கியமான திருவிழாவாக விளங்குகிறது மலமாசா மேகா. இது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.

myself

 ராஜ்கிர்ரின் வானிலை

ராஜ்கிர்ரின் வானிலை


ராஜ்கிர்ரில் கோடைக்காலம் இளஞ்சூடாகவும், குளிர் காலம் லேசான குளிருடனும் இருக்கும். அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் ராஜ்கிர்ருக்கு சுற்றுலா வருவதே உகந்த பருவமாகும்.

Michael Eisenriegler

ராஜ்கிர்ரை அடைவது எப்படி?

ராஜ்கிர்ரை அடைவது எப்படி?

ராஜ்கிர்ரில் இரயில் நிலையம் இருக்கிறது, ஆனால் விமான நிலையம் கிடையாது. அதனால் இங்கு வருவதற்கு முன்கூட்டியே திட்டமிடுதல் நல்லது. சாலை வழியாக இங்கு வரும் பாதையும் நன்றாகவே உள்ளது. ஓய்வெடுக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் சிறந்த இடமாக விளங்குகிறது ராஜ்கிர்.

:BPG

 சிறப்பு

சிறப்பு

இயற்கை வளத்துடன் இருக்கும் ராஜ்கிர், இன்றைய நவீனமயமாக்களின் பாதிப்பின்றி திகழ்வது தனிச் சிறப்பு. அமைதியாக ஓய்வெடுத்து உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த இடமாக இருக்கும். இங்கே வெந்நீர் ஊற்றான பிரம்மகுந்த் இருப்பதால் இது குளிர்கால ரிசார்டாகவும் விளங்குகிறது.

myself

Read more about: travel, temple, bihar