Search
  • Follow NativePlanet
Share
» »ஆவியான கடல் நீர், வாழத் தகுதியற்ற தேசம்...

ஆவியான கடல் நீர், வாழத் தகுதியற்ற தேசம்...

இந்தியாவில் வறட்சி மிகுந்த மாநிலம் என்றாலும் பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கும் புதையல் நகரம் குஜராத். இத்தகைய பாலைவனப் பகுதியில் நம் மனதைக் கொள்ளைகொள்ளும் சுற்றுலாத் தலங்களும் உள்ளது வியக்கவைக்கிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பறந்துவிரிந்திருக்கும் இந்திய தேசத்தில் புதிர் நிறைந்த புவியமைப்புகள் ஏராளமாக உண்டு. அறிவியலுக்கு விளங்காத இயற்கை அதிசயங்களும், அமானுசிய பிரதேசங்களும், ஆன்மீக தலங்களும் இந்தியாவில் நிறையவே இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் குஜராத் மாநிலத்தில் இருக்கும் உப்புப் பாலைவனமான ரன் ஆப் கட்ச்.

பாலைவனம்

பாலைவனம்


பொதுவாக, பாலைவனம் என்றாலே மண் குவியல்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்த பாலைவனத்தில், மணலை விடவும் உப்புப் படுகைகளே அதிகமாக காணப்படுன்றன. இடையிடையே உப்பு ஓடைகளும் கடல் படிமங்களும் ரன் ஆப் கட்சில் நிறைந்திருக்கின்றன. இதில் வியக்கத்தக்க விசயம்,
உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் உப்பு பாலைவனங்களில் இதுவும் ஒன்று.

Leamington boy

ரன் ஆப் கட்ச்

ரன் ஆப் கட்ச்


குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 7,505.22 சதுர கிலோ மீட்டர் பறந்துவிரிந்திருக்கும் உப்புப்படிந்த, உயிர்வாழ்வதற்கு சற்றும் வழியில்லாத இடம் தான் இந்த ரன் ஆப் கட்ச் என்னும் உப்பு பாலைவனமாகும்.

Nagarjun Kandukuru

பெயர்க் காரணம்

பெயர்க் காரணம்


இந்தியில் ரன் என்றால் பாலைவனம் என்று பொருள். கட்ச் என்ற இடத்தில் இது இருப்பதால் ரன் ஆப் கட்ச் என்று அழைக்கப்படுகிறது. மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு முன்பாக இந்த இடத்தை பற்றி தெரிந்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Nagarjun Kandukuru

கஹரகோடா

கஹரகோடா


கட்ச் வளைகூடாவின் முனையில் பாகிஸ்தானின் சிந்து நதியை ஒட்டியபடி இருக்கும் இந்த பாலைவனத்தின் நுழைவு வாயிலாக இருப்பது சுரேந்தரநகர் மாவட்டத்தில் இருக்கும் கஹரகோடா என்ற கிராமமாகும்.

Mohammed Shafiyullah

காணாமல் போன கடல்

காணாமல் போன கடல்


இப்போது உப்பு நிறைந்த பகுதியாக இருக்கும் இந்த ரன் ஆப் கட்ச் ஒரு காலத்தில் கடலால் சூலப்பட்டிருந்ததாகும். பின்னர் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் காரணமாக இந்த நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து 15 மீட்டர் அளவுக்கு உயர்ந்து கடலோடு தொடர்பை இழந்து, அந்த கடல் நீர் ஆவியானதன் காரணமாக உப்பு பாலைவனம் உருவாகியுள்ளது.

Bhargavinf

ஹிமாச்சல் - ராஜஸ்தான்

ஹிமாச்சல் - ராஜஸ்தான்


ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆரம்பித்து தற்போது ராஜஸ்தானில் முடிவடையும் காஜ்ஜர் என்ற ஆறு இந்த ரன் ஆப் கட்ச் வரை பாய்ந்ததற்கான ஆதாரங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு ஒரு காலத்தில் பசுமைமிக்க பகுதியாக இது இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Payal Mehta

பயணிகளை ஈர்க்கும் பாலைவனம்

பயணிகளை ஈர்க்கும் பாலைவனம்


வறட்சி நிறைந்த மனிதர் வாழ தகுதியற்ற பாலைவனப் பகுதியாக இது இருந்தாலும் இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களுக்காகவே குஜராத் மாநில அரசால் ரன் உத்சவ் என்ற திருவிழாவும் இப்பகுதியில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்விழாவில் குஜராத்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், உணவு விருந்து, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

Ranjith Kumar Inbasekaran

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


குஜராத்தில் இருந்து ராஜ்கோட் வழியாக மோர்பி, புஜ் சென்று அங்கிருந்து ரன் ஆப் கட்சை அடையலாம். இப்பகுதீக்கு பேருந்துவசதிகள் குறைவு, தனியார் வாகனங்கள் மூலம் சென்றடையலாம்.

Nagarjun Kandukuru

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X