உலகப்புகழ் கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து நடந்தது. இதனால் பெரும் சேதம் உண்டாகியது. இதையடுத்து அந்த கோயிலின் பசுபதீசுவரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இப்படி சென்னை அருகே திருவாலங்காடு எனும் இடத்தில் கோயில் ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில்தான் வேலூர் சத்துவாச்சேரியில் இரண்டு தேர்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்துள்ளன. இதனால் பக்தர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இப்படி பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் வெறுமனே ஆலயங்கள் மட்டும் அல்ல. தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களும்கூட. பொதுவாகவே உள்ளூர் பக்தர்கள் இந்த கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுகிறார்கள். இந்த கோயிலில் சென்று வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதும் தொன்னம்பிக்கை.

எங்குள்ளது
வேலூர் நகரத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இடம் சத்துவாச்சேரி. இது கும்பகோணத்தைப் போல சிறிய வகை கோயில் நகரமாகும். இங்கு திரும்பும் திசையெல்லாம் சிறிய பெரிய கோயில்கள் கண்ணில் தென்படும். வேலூருக்கு வருபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய தலமாகும்.

இருக்கும் கோயில்கள்
இந்த பகுதியில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. தண்டுமாரியம்மன் கோயில், விநாயகர் கோயில், கைலாசநாதர் கோயில், கங்கை அம்மன் கோயில், பிள்ளையார்கோயில், ஆதி பராசக்தி கோயில், அய்யப்பன் கோயில், மா சக்தி விநாயகர்கோயில், வலபுரிவிநாயகர்கோயில், திகாம்பர் கோயில், ராமர் கோயில், சாய்பாபா கோயில் என எக்கச்சக்க கோயில்கள் அமைந்துள்ளன.

சுற்றுலா அம்சங்கள்
இந்த பகுதியில் பாலாறு எனும் நதி ஓடுகிறது. இங்குள்ள பகுதிகளை செழிப்படையச் செய்து வங்கக்கடலில் சென்று கலக்கிறது பாலாறு. வேலூர் கோட்டை, சிவன் கோயில், ஜமாதி மலை, தீர்த்தகிரி என நிறைய இடங்கள் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.

ஜலகண்டேஸ்வரர் கோயில்
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தலங்களுள் இந்த சிவன் கோயிலும் ஒன்று. இங்கு சிவபெருமான் ஜலகண்டேசுவரராக அருள்பாலிக்கிறார்.
வேலூர் கோட்டையின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது. இதன் ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. இது அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டது. வலப்புறம் குளம் ஒன்றையும், இடப்புறம் திருமணமண்டபம் ஒன்றையும் கொண்டுள்ளது.
Vaikoovery

சன்னதிகள்
இந்த கோயிலில் விநாயகர், வெங்கடேசப்பெருமாள், வள்ளி தெய்வயானையுடன் முருகர், மாதேஸ்வரி, துர்க்கையம்மன், சரஸ்வதி, லட்சுமி, கால பைரவர், சனீஸ்வரர் என நிறைய கடவுள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Ssriram mt

சுப்ரமணிய சுவாமி கோயில்
500 வருடங்கள் பழமையான இந்த கோயில் வேலூர் அருகே அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம் இதுவாகும்.
மாசி மாதம் நடைபெறும் உற்சவம், வைகாசி விசாகம் ஆகிய நிகழ்வுகள் இங்கு சிறப்பானதாகும்.
Ssriram mt

தலச் சிறப்புகள்
இந்த கோயில் காலை 6 மணி முதல் 12மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த கோயிலில் முருகன் வள்ளி, தெய்வயானையுடன் காட்சிதருகிறார். இங்கு வருபவர்கள் முதலில் அருணகிரிநாதரை வழிபட்டுவிட்டு பின்புதான் முருகரை வழிபடுகின்றனர்.
Ssriram mt

மார்கபந்தீஸ்வரர்
1300 வருடங்கள் பழமையான சிவாலயம் இதுவாகும். இந்த கோயிலில் சிவபெருமான் சிவலிங்கமாக இருந்து அருள்பாலிக்கிறார்.
இங்கு விநாயகர், முருகர், தட்சணாமூர்த்தி, பைரவர்,விஷ்ணு, சரஸ்வதி, பிரம்மா உள்ளிட்ட பல தெய்வங்கள் இருக்கின்றனர்.
சிவராத்திரி, வைகாசி விசாகம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி மாதம் ஒரு நாளில் மட்டும் சூரிய கதிர்கள் சரியாக மூலவரின் மீது விழுகின்றன. இங்குள்ள நேரம் காட்டும் கல் துல்லியமாக மணியை காட்டுகிறது.
indiancolumbus

2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?
2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?

முகமது கஜினி 18 முறை படையெடுத்தது எந்த கோயிலில் கொள்ளையடிக்க என்று உங்களுக்கு தெரியுமா?
முகமது கஜினி 18 முறை படையெடுத்தது எந்த கோயிலில் கொள்ளையடிக்க என்று உங்களுக்கு தெரியுமா?



Click it and Unblock the Notifications




