Search
  • Follow NativePlanet
Share
» »சிக்கிம்மில் சாகசங்கள் செய்யப்போலாமா?

சிக்கிம்மில் சாகசங்கள் செய்யப்போலாமா?

சிக்கிம்மில் சாகசங்கள் செய்யப்போலாமா?

By Udhaya

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள். அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்?

 அரிடார்

அரிடார்

இயற்கை அழகு, மற்றும் தொன்மையான வரலாற்றுக்கு பெயர் பெற்ற `அரிடார்', கிழக்கு சிக்கிமின் ஒரு பகுதியாக உள்ளது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த இடம், அமைதியான, மற்றும் அழகான இயற்கை காட்சிகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அமைதியான ஏரிகள், பசுமையான காடுகள், மற்றும் செழித்த நெல் வயல்கள் தரும் மனதிற்கு இனிய காட்சியானது, நீங்கள் சொர்கத்தில் உள்ளீர்கள், என்று உணரச் செய்யும். இந்த இடத்தின் கண்ணுக்கினிய காலைக்காட்சியானது, உங்கள் மனதை விட்டு என்றும் அகலாது.

Sikkimonline

யூக்சோம்

யூக்சோம்


மேற்கு சிக்கிம் பகுதியின் கேய்ஜிங் மாநகராட்சியில் அமைந்துள்ள யூக்சோம் நகரம் பல சமயஞ்சார்ந்த தலங்களை கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். அதுமட்டுமல்லாமல் மலை ஏறுதல் மற்றும் நடை பயணம் மேற்கொள்பவர்களிடமும் இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. யூக்சோம் நகரம்தான் இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமின் முதல் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. கி.பி.1642 ஆம் ஆண்டு சிக்கிமை ஆண்ட முதல் சோக்யல் (சமயஞ்சார்ந்த அரசர்), ப்ஹுண்ட்சோக் நம்க்யலால் இது அறிவிக்கப்பட்டது. சோக்யல்கள் சிக்கிமை கிட்டத்தட்ட 333 வருடங்கள் ஆண்டனர்.

Kothanda Srinivasan

 சிக்கிமின் மிகவும் அழகிய கிராமம்

சிக்கிமின் மிகவும் அழகிய கிராமம்


சிக்கிமில் உள்ள இந்த சிறிய நகரம், மிகவும் அழகிய, மற்றும் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும். புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆய்வாளரான ' ஜோசப் டால்டன் ஹூக்கர்', `இமாலயன் ஜர்னல்' என்ற பத்திரிக்கையில் வெளியிட்ட தன்னுடைய கட்டுரையில், 'சிக்கிமின் மிகவும் அழகிய கிராமம்' என்று லாசுங்க்கை புகழ்ந்துள்ளார். இதன் அடுக்கு நீர்வீழ்ச்சிகள், தூய நீரோடைகள், மற்றும் பரந்த கண்ணுக்கினிய ஆப்பிள் தோட்டங்கள் ஆகியன மிகவும் புகழ் பெற்றவை. இவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது.

Jaiprakashsingh

 ரவங்க்லா

ரவங்க்லா

உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இவ்விடம் தென் சிக்கிம் பகுதியில் மிகவும் பிரபலம். இது கடல் மட்டத்தில் இருந்து 7000 அடி உயரத்தில் உள்ளது. இஞ்சி மற்றும் பெரிய ஏலக்காய் போன்றவற்றை கொண்டு விவசாயம் செய்யும் ஒரு சிறிய வர்த்தக சந்தையாக இருந்த இவ்விடம் சமீபத்தில் வர்த்தக மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

இயற்கை அழகை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கு அடர்ந்த காடுகள் மலைகள் மற்றும் அழகான தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட ரவங்க்லா ஒரு சொர்க்க பூமி. நகர வாழ்க்கையின் நெரிசலில் இருந்து தப்பித்து கிராமப்புர மண்வாசனையை அனுபவிக்க இவ்விடம் ஏதுவானதாக இருக்கும். போரோங், ராலாங், ஹாட் ஸ்பிரிங், புத்தர் பார்க், தெமி தேயிலை தோட்டம், கியுசிங் கிராமம் போன்ற இடங்கள் இங்கு ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

Devsutapabublu

 லெக்சிப்

லெக்சிப்

மேற்கு சிக்கிமில் உள்ள சிறு நகரமான லெக்சிப் கடந்த சில ஆண்டுகளாக புகழ் பெற துவங்கியுள்ளது. இந்த அழகிய நகரம் மேற்கு சிக்கிமின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிக்கிமில் நீர்மின் சக்தியை உருவாக்கும் பொருட்டாக கட்டப்பட்ட முதல் அணைக்கட்டான ரங்கிட் அணைக்கட்டு லெக்சிப்பில் தான் உள்ளது. இந்த அணைக்கட்டில் சேகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு 'ரங்கிட் வாட்டர் வேல்டு' என்ற பொழுதுபோக்கு பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Bhattaraibinod3

 லாச்சென்

லாச்சென்


வட சிக்கிம் மாவட்டத்தில் தற்பொழுது பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிவரும் லாச்சென் பகுதி அமைதியின் இருப்பிடமாக அறியப்படுகிறது. லாச்சென் என்பதற்கு 'மிகப்பெரிய கணவாய்' என்று பொருள். இங்கு கண்ணுக்கினிய காட்சிகளும், அடர்ந்த காடுகளும் பயணம் செய்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையப்பெற்றுள்ளன. காங்டாக்கில் இருந்து லாச்சென் 129 கிமீ தொலைவில், குருடோங்மர் ஏரியையும், சோப்தா பள்ளத்தாக்கையும் நோக்கி அமைந்திருக்கின்றது.

Bundesarchiv

ட்சோங்கு

ட்சோங்கு

செவன் சிஸ்டர்ஸ் அருவி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். கிராமத்தின் மேடுகளில் ஏறி ஏழைக்காய் வயல்களுக்கு நடுவே இருக்கும் அழகான சந்துகளில் பயணம் செய்வதை அனுபவியுங்கள். டீஸ்டா நதியோரம் மீன்பிடித்து இளைப்பாறி, பாசிங்டம் அருகே உள்ள அழகான மூங்கில் பாலத்தில் நடந்து செல்லுங்கள். உள்ளூரில் விளையும் மூலிகைகள் மூலமாக லெப்காக்கள் அளிக்கும் அழகான சிகிச்சைகளை கற்றுக்கொள்ள மறவாதீர்கள். இந்த இடங்கள் அனைத்தும் சிக்கிமுக்கு நீங்கள் செல்லும் சுற்றுலாவை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்றிவிடும்.

 ஜோர்தாங்க்

ஜோர்தாங்க்

கலிம்பாங்க், சிலிகுரி மற்றும் டார்ஜிலிங்கிலிருந்து பெல்லிங்க் செல்லும் வழியில், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள ஜோர்தாங்க், ரங்கீத் நதிக்கு மேலே, மலையடிவாரத்தில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ஜோர்தாங்கை சில கிலோமீட்டர்கள் கடந்து சென்றால், சுற்றுலாப்பயணிகளைக் கவரும், வெந்நீர் ஊற்றுக்களைக் காணலாம். ஜோர்தாங்கில் கொண்டாடப்படும் மகே மேளா என்னும் விழா, நீங்கள் ஜனவரி மாதங்களில் இப்பகுதியில் இருந்தால் அவசியம் கண்டு களிக்கவேண்டிய ஒரு விழாவாகும்.

Edwn112

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X