» »250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க

250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க

Posted By: Udhaya

ஆண்டவன் குடி கொண்டுள்ள ஆலயங்களில் நிலவும் தெய்வீகத் தன்மை நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொன்மைமிக்க ஆலயங்களின் அமைவிடம் கட்டுமானம் ஆகியவையும் அவற்றில் நிலவக்கூடிய விண்காந்த சக்தி மின் காந்த சக்தி ஆகியவை நம் மனம் தூய்மை அடையவும் வாழ்க்கை வளம் பெறவும் உதவுகிறது. தென்னகத்தில் அமைந்துள்ள காளகஸ்தி கோயிலை பற்றி காண்போம் வாருங்கள்.


சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

 எங்குள்ளது?

எங்குள்ளது?

காளஸ்திநாதர்-ஞானம்மன் ஆலயமானது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்து உள்ளது. தேனியிலிருந்து பேருந்தில் கம்பம் செல்லும் வழியில் சுமார் ஒன்றறை மணி நேர பயணத்தில் உத்தமபாளையத்தை அடையலாம். உத்தமபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவிலை அடைந்து விடலாம்.

 பழமை

பழமை

ஆலயமானது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. வருடம் முழுவதும் வற்றாத தூய்மையான சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது. தென் காளஹஸ்தி என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் காளஸ்திநாதர் தாயார் ஞானாம்பிகை ஆவர்.

தென் காளஹஸ்தி

தென் காளஹஸ்தி

உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளத்தீஸ்வரர்- ஞானாம்பிகை கோவில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகிறது. ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ளது போல் தென்புறம் கண்ணப்பர் சன்னதியும், ராகு, கேது கிரகங்கங்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. இதனால் தான் இக்கோவிலை பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று பெருமையுடன் அழைக்கின்றனர்.

1008 லிங்கம்

1008 லிங்கம்

இக்கோவிலில் ஒரே லிங்கத்தில் சிறிய வடிவில் 1008 லிங்கம் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த காட்சி இக்கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

தூண்கள்

தூண்கள்


இக்கோவிலில் சுமார் 250 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் ராமாயணம், மகாபாரத காட்சிகளை காண முடிகிறது. மேலும் திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் நிகழ்ச்சிகளும் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் சிறப்பம்சம்:

ஆலயத்தின் சிறப்பம்சம்:

இங்கு ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித் தனியே சன்னதிகள் அமைந்துள்ளன. ஞாயிறு தோறும் ராகு கால நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ராகு கேது தோஷம் நீங்க

ராகு கேது தோஷம் நீங்க

பொதுவாக ஜாதகத்தில் ராகு கேது சாதகமற்ற நிலையில் அமர்ந்திருந்து வாழ்க்கையில் பலவித தடை தாமதம் சிரமங்களை அனுபவிப்பவர்கள் இங்கு சென்று வழிபட்டால் மூன்று மாதத்திற்குள் வேண்டிக் கொண்ட விஷயம் நடைமுறைக்கு வரும் என்பது பலன் அடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மதுரையிலிருந்து உத்தமபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோயில். தேனி, சின்னனூர் வழியாக உத்தமபாளையத்தை அடையலாம்.

Read more about: travel, temple, madurai, theni