» »மிளகை பயிராக மாற்றும் மிளகீஸ்வரர் - எங்கிருக்கிறார் தெரியுமா?

மிளகை பயிராக மாற்றும் மிளகீஸ்வரர் - எங்கிருக்கிறார் தெரியுமா?

Written By: Udhaya

மிளகீஸ்வரர் என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் இந்த ஈஸ்வரர் கோயில் திருப்பூரின் அமைந்துள்ளது. திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் காலமான பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது ஆகும். அதற்குப் பின்பு சோழர்களால் இக்கோவிலின் உள்ளே பல்வேறு மண்டபங்களும் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலில் நடக்கும் அதிசயம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 கட்டிடக்கலை

கட்டிடக்கலை

தமிழ்நாட்டுக் கோவில் கட்டிடக் கலைக்குச் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கட்டப்பட்டுள்ள இரு விமானங்களில் ஒன்று இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் மற்றொன்றுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

Sailko

கல்வெட்டுக்களில்

கல்வெட்டுக்களில்


ஐந்து லிங்கங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. இந்தக் கோவில் பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பினும் இக்கோவில் கட்டப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் சிவபெருமான் வழிபடப்பட்ட தலமாக இவ்விடம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

wiki

இரு கோயில்கள்

இரு கோயில்கள்


60 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இந்த கோயிலை புணரமைக்க முடிவு செய்து கோயில் அஸ்திவாரத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டதாம். கோயில் கற்களைப் பிரித்து பார்த்தபோது இந்த கோயிலைப் போலவே அதே மாதிரி ஒரு கோயில் கீழே இருந்ததாம். கற்கோயிலுக்கு மேல் ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

Sailko

சுக்ரீவன்

சுக்ரீவன்

திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பாளையம் என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. ராமனுக்கு உதவிய சுக்ரீவன் இந்த கோயிலில் சிவபெருமானை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த கோயில் சுக்ரீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

Ramachandra

 தோற்றம்

தோற்றம்

இந்த கோயிலின் தோற்றம் 8ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்ற பேச்சும் உள்ளது,. இத்தலத்தின் மூலவராக சுக்ரீவன் இருக்கிறார். வலப்புறம் ஆவுடைநாயகி அருள்பாலிக்கிறார்.

எந்த கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது. மூலவர் சன்னதிக்கு எதிரே பத்ரகாளி அம்மன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்ஸ பைரவா ஆகியோரது சன்னதிகள் உள்ளன.

, Sailko

 அக்னி லிங்கம்

அக்னி லிங்கம்

இந்த கோயிலில் நிலம், நீர் , காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. மேலும் மூலவரே அக்னிலிங்கமாக காட்சியளிக்கிறார்.

சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் அடியில், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

பயிறாக மாறிய மிளகு

பயிறாக மாறிய மிளகு


மிளகு வியாபாரி இந்த கோயிலின் வழியாக செல்லும்போது, சொன்ன பொய்யின் காரணமாக அவர் வைத்திருந்த மிளகு அனைத்தும் பயிராக மாறிவிட்டதாம். இதனால் அவர் மிகவும் சோகமானார். பின் இறைவனிடம் வேண்டியதும் மிளகு திரும்ப வந்ததாக தொன்னம்பிக்கை கதைகள் கூறப்படுகிறது.

Unknown

இரண்டு நந்திகள்

இரண்டு நந்திகள்

இந்த கோயிலில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக இரண்டு நந்திகள் உள்ளன. இந்த நந்திகளில் ஒன்று காதறுந்த நிலையில் இருக்கிறது. இதுதான் கோயிலின் முன்பக்கம் இருக்கும் நந்தி ஆகும். கோயிலின் மற்றொரு புறம் இருக்கும் நந்தி நல்ல நிலையில் உள்ளது.

Unknown

Read more about: travel, temple