» »தமிழ்ச்சங்க கடவுளா ராமபிரான்? புறநானூறு சொல்லும் செய்தி என்ன?

தமிழ்ச்சங்க கடவுளா ராமபிரான்? புறநானூறு சொல்லும் செய்தி என்ன?

Written By: Udhaya

கடுந்தெறல் ராமனுடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு என்று புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா? நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்! #Travel2Temple 3

இதை சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வரும் பக்தாள்கள் ராமபிரான் தமிழ்ச்சங்க கடவுள் என்றும் புறநானூற்றில் அவர் பாடல் இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். உண்மை என்ன என்பதை நாம் தமிழகத்தில் உள்ள ராமர் கோயில்களுக்கு சென்று அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். மேலும் ஒவ்வொரு ராமர் கோயிலிலும் என்னென்ன அம்சங்கள் தமிழோடு தொடர்புடையது என்பன பற்றியும் காண்போம்.

பெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...

தமிழகத்தில் எங்கெல்லாம் கோயில் இருக்கிறது

தமிழகத்தில் எங்கெல்லாம் கோயில் இருக்கிறது


ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்பது பல்வேறு சங்பரிவாரங்களின் நீண்டநாள் கோரிக்கை. அதே நேரத்தில் தமிழகத்தில் ராமர் கோயிலே இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு... தமிழகத்தில் எங்கெல்லாம் ராமர் கோயில் இருக்கிறது என்பது தெரியுமா? சென்னை மதுராந்தகத்தில் ஒரு ராமர் கோயில் உள்ளது. பொழிச்சலூர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலத்திலும் தலா ஒரு ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

Vishwaroop2006

அருள்மிகு ராமர், சீதை, லட்சுமண கோயில் , மதுராந்தகம்

அருள்மிகு ராமர், சீதை, லட்சுமண கோயில் , மதுராந்தகம்


சென்னையிலிருந்து 50கிமீ தொலைவில் மதுராந்தகத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரு சிறப்பு உள்ளது. அதாவது, இந்த கோயிலின் கடவுளான ராமர் சிலை, சீதையுடன் கைக்கோர்த்த கோலத்தில் இருக்கிறது. இந்த கோயிலில் பக்தர்கள் அதிகம் பேர் வந்து வழிபடுகிறார்கள். ராம நவமி நாளில் மிகவும் சிறப்பான வழிபாடு நடத்தப்படுகிறது.

Ssriram mt

ராமாஜனேய கோயில், பொழிச்சலூர்

ராமாஜனேய கோயில், பொழிச்சலூர்


அனுமன் கோயிலாகக் கட்டப்பட்டு பின் ராமர் சிலையும் சீதையின் சிலையும் வைக்கப்பட்டு ராமர் கோயிலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த கோயில். ஆஞ்சநேயர் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள எந்திரம் எனும் தகடு மிகவும் சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு செல்பவர்கள் இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் என்பது நம்பிக்கை.

World8115

 ராமபக்தர் ஆஞ்சநேயர் கோயில்

ராமபக்தர் ஆஞ்சநேயர் கோயில்

சைதாப்பேட்டையில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில். ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்த அனுமான், தங்கள் காதலையும் சேர்த்துவைப்பார் என நம்பிக்கையுடன் இந்த கோயிலுக்கு படையெடுக்கின்றனர் இளைஞர்கள் சிலர். அடையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும்.

ଜଗଦୀଶ ଉତ୍ତରକବାଟ

கோதண்டராமர் கோயில்

கோதண்டராமர் கோயில்

மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள இந்த கோதண்டராமர் கோயில் ராம பக்தர்கள் மத்தியில் மிகச் சிறப்பானதாகும். பட்டாபிராமர் மற்றும் பிராட்டி வடிவில் அருளும் ராமரும் சீதையும் இந்த கோயிலின் முக்கிய தெய்வங்களாவர். இது 150 வருடங்கள் பழமையான தெய்வம் என்று நம்பப்படுகிறது.

Dineshkannambadi

கோதண்டபாணி ராமர் கோயில்

கோதண்டபாணி ராமர் கோயில்

சேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ராமர் கோயில் கோதண்டபாணி ராமர் கோயில் ஆகும். இது மிகவும் பழமையான கோயில் என்று நம்பப்படுகிறது. சேலம் அருகே இந்த கோயில் அமைந்துள்ள இடத்துக்கு அயோத்யப்பட்டினம் என்று பெயராம். இது ராமனின் சொந்த ஊரான அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது. ராமநவமி அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஒரே கல்லில் செய்யப்பட்ட கோபுரம், இதன் அழகை காட்டுகிறது. கலைநுட்ப வேலைப்பாடுகள் நிறைய கொண்டுள்ள இந்த கோயிலில் தூண்களைத் தட்டினால், இசை ஒலிகள் எழும்புகின்றன. இந்த செயல் உலகிலேயே தமிழர்கள் கட்டிய கோயிலில் தான் இருப்பதாகவும். இதனால் ராமர் தமிழர்களின் கடவுள் எனவும் கூறுகின்றனர் பக்தாஸ்....

Joshri

மறைக்கப்பட்ட அதிசயம்

மறைக்கப்பட்ட அதிசயம்


இந்த கோயில் கட்டப்பட்டு மிகவும் அறிவியல் ரீதியாக கணித்து வருடத்தின் ஒரு நாள் மட்டும் கோயிலுக்குள் சூரிய ஒளி விழுமாறு செய்யப்பட்டிருந்தது. அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்ரா பௌர்ணமி நாள் தான். ஆனால் இந்த கோயிலைச் சுற்றி கட்டடங்கள் எழுப்பப்பட்டதால் அந்த அதிசய நிகழ்வு இப்போது நிகழ்வதில்லை.

Sriniketana

கடவுள்கள்

கடவுள்கள்

இந்த கோயிலில் மூலஸ்தானத்துக்கு அருகில் துவார பாலகர்களும், அதற்கடுத்து ஆஞ்சநேயர், சத்ருக்கனன், பரதன், ராமன், சீதை, லட்சுமணன், சுக்ரீவன், விபீஸ்ணன் என வரிசையாக வீற்றிருக்கிறார்கள்.

Bhaskaranaidu

பிரார்த்தனை

பிரார்த்தனை


குழந்தையின்மை, திருமணத் தடை, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம், மேலும் இந்த கோயிலில் நேர்த்திக்கடனாக திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.
Krishna Jakkinapalli

 கோதண்ட ராமர் கோயில்

கோதண்ட ராமர் கோயில்


கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ஒரு கோயில் ஆகும். ராமேஸ்வரம் கோயிலிலிருந்து வெறும் 13கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். ராமன் இலங்கைக்கு செல்லும் முன்பு இந்த இடத்தில் இளைப்பாறினார் என்றும் கூறப்படுகிறது. இதோ கோயிலில் பரதன், ராமன், சீதை, லட்சுமணன், சுக்ரீவன் ஆகியோரும் இருக்கின்றனர்.

Kashyap Kondamudi

விபீஷணன்

விபீஷணன்

விபீஷணன் ராவணனின் சகோதரன். ராவணன் சீதையை கவர்ந்தது தவறு என்று ராமனின் பக்கம் சாய்ந்ததால், இலங்கையைப் பெற்றான். அவனுக்கு முடி சூடிய ராமனுக்கு இந்த இடத்தில் கோயில் ஒன்றை கட்டியுள்ளான் விபீஷணன். அந்த கோயில்தான் இந்த கோதண்டராமர் கோயில் ஆகும். இந்த கோயிலின் உற்சவ மூர்த்திகள் ராமர், லட்சுமணன், சீதை ஆகும்.

Sriniketana

விழாக்கள்

விழாக்கள்


இந்த கோயிலின் முக்கிய விழாக்களான, ராமலிங்க விழா, வைகுண்ட ஏகாதசி விழா, ராமநவமி, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் உற்சவம் நடைபெறுகிறது. விழாக்களில், ராமாயண காட்சிகள் நடத்திக்காட்டப்படுகிறது.
.
Ssriram mt

முடிகொண்டான் கோதண்டராமர்

முடிகொண்டான் கோதண்டராமர்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ராமருக்காக கட்டப்பட்டது. திருவாரூரிலிருந்து 15கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 20கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த கோயில்.
பா.ஜம்புலிங்கம்

கோலவிழி ராமன் கோயில்

கோலவிழி ராமன் கோயில்

கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவெல்லியங்குடி கிராமத்தில் இருக்கும் ராமர் கோயில் கோலவிழி ராமன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. 108 கோயில்களில் ஒன்றாக கருதப்படும் ராமர் கோயில், கும்பகோணம் நகரிலிருந்து 17கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கோயில் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோயில் தென்னிந்தியாவில் ராமருக்காக கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும்.

பா.ஜம்புலிங்கம்

 நெடுங்குளம் யோக ராமர் கோயில்

நெடுங்குளம் யோக ராமர் கோயில்

திருவண்ணாமலையிலிருந்து 55கிமீ தூரத்தில் அமைந்துள்ள அருள்மிகு யோக ராமர் கோயில், இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட கோயில். வேறெந்த கோயிலுக்கும் இந்த சிறப்பு இல்லை. அதாவது அமர்ந்திருக்கும் நிலையில் அற்புதமான கலையில் கட்டப்பட்ட கோயில் இதுவாகும். இந்த கோயிலையும் விஜயநகர பேரரசர்கள் கட்டியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் இருக்கும் அனுமான் சிலையும் மிக வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தனது நெஞ்சில் வலது கையில் வைத்துக்கொண்டு, கண்களை மூடிய படி அந்த சிலை உள்ளது.

பா.ஜம்புலிங்கம்

 வரலாறு

வரலாறு

வரலாற்றின்படி, முருகரே தமிழ்கடவுள் என்றும், ராமர் அயோத்தியின் கடவுள் என்றும் நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் யாரோ சிலர் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி ராமர் தமிழ் சங்கக் கடவுள் என்று புரளியை கிளப்பி வருகிறார்கள். அதற்கான சான்றுகள் என்று எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் காட்டிய மேற்கோள்கள் எல்லாம் புறநானூற்றிலும் காட்டப்பட்ட மேற்கோள்கள்தானே தவிர்த்து ராமருக்காக தமிழ் சங்ககால நூல்கள் எதுவும் இல்லை.

பா.ஜம்புலிங்கம்

Read more about: travel temple tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்