» »இந்த கோடை காலத்தில் உங்கள் மனைவியுடன் மகிழ்ந்திருக்க நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்

இந்த கோடை காலத்தில் உங்கள் மனைவியுடன் மகிழ்ந்திருக்க நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்

Written By: Bala Latha

தில்லியிலிருந்து ராணிகேட் 370 கி.மி தொலைவிலும் 8 மணி நேர பயணத்தில் அடையும் வகையிலும் அமைந்துள்ளது. ராணிகேட் என்பதன் பொருள் அரசியின் புல்வெளி என்பதாகும். இந்த பயண வழிகாட்டியை படிப்பதன் மூலம் நீங்கள் 3 நாட்கள் தில்லியிலிருந்து பயணத்தை திட்டமிடலாம்.

கரும்பை தின்ற அதிசய கல் யானை எங்கே தெரியுமா? 

ராணிகேட், சரியாக சொல்வதானால் "அரசியின் புல்வெளி" என்றும் உத்தரகாண்ட் பகுதியில் கொண்டாடப்படும் சுற்றுலாத்தலமாக உள்ளது. ராணிகேட்டின் பெரும் சிறப்பே அங்கிருந்து பகட்டான இமயமலையின் அழகை ரசிக்க முடியும். ராணிகேட் ஒரு ராணுவ பாசறை நகரமாகும். இந்திய ராணுவத்தை சேர்ந்த குமான் மற்றும் நாகா படைப்பிரிவின் தாயகம் ஆகும்.


குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

கடல் மட்டத்திலிருந்து 1829மீ உயரத்தில் அமைந்துள்ளது. பனி படர்ந்த இமயமலையின் அற்புதமான காட்சியையும் அளிக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தேனிலவு தம்பதிகளை தவிர்த்து பிற வகையான பார்வையாளர்களும் கண்டுகளிக்க வேண்டிய சுற்றுலாத்தலமாகும். சாகச விரும்பிகளை கவர்ந்து இழுக்கும் வண்ணம் சிறிய மற்றும் பெரிய மலையேற்ற வழிகள் உண்டு.திருவிதாங்கூர் மர்மங்களை போட்டுடைக்கும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

 

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

நம்பிக்கை

நம்பிக்கை

புகழ்பெற்ற நம்பிக்கையின்படி அரசர் சுகர்தேவின் மனைவி அரசி ராணி பத்மினி, இந்த பகுதியின் மீது கொண்ட காதலால் தன் இல்லமாக மாற்ற விரும்பியதால் ராணிகேட் என பெயர் பெற்றது.

கரும்பை தின்ற அதிசய கல் யானை எங்கே தெரியுமா?

பின்பு பிரிட்டிஷ் அரசாங்கம் ராணிகேட்டை மலைவாஸ்தலமாக தன் படைகளுக்காக மேம்படுத்தி, 1869இல் படைப்பிரிவை .நிறுவியது.

மேலும் படியுங்கள்: தில்லியிலிருந்து கௌசானிக்கு ஒரு வார இறுதிப்பயணம்.


ராணிகேட் பனிநிலை சார்ந்த தட்பவெப்பநிலை கொண்டது. கோடைகாலங்கள் (ஏப்ரல் - ஜூன் ) மிதமானதாகவும், குளிர்காலங்கள் ( நவம்பர் - பிப்ரவரி ) குளிராகவும் இருக்கும். ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். குளிர்காலங்களில் பனிப்பொழிவு இருக்கும்.


தொடங்குமிடம் : தில்லி


சேருமிடம் : ராணிகேட், உத்தரகாண்ட்.


வருகை தர சிறந்த காலம்: மார்ச் முதல் அக்டோபர் வரை.


பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

தில்லியிலிருந்து ராணிகேட்டை அடையும் வழிகள்:

தில்லியிலிருந்து ராணிகேட்டை அடையும் வழிகள்:

விமானம் மூலம்: 119 கிமீ தொலைவில் உள்ள பன்ட்நகர் விமான நிலையம் ராணிகேட்டுக்கு அருகாமையிலுள்ளது.

நெடுவாசலில் அப்படி என்னதான் இருக்கு?

ரயில் மூலம்: ராணிகேட்டிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள காத்கோடம் ரயில்நிலையமே அருகாமையில் உள்ளது.


சாலை வழியாக:


தடம் 1: தில்லி - காஸியாயாபாத் - மொராடாபாத் - ராம்பூர் - நைனிடால் - ராணிகேட், வழி NH 9. 370 கிமீ தூரம் மற்றும் எந்த சுற்றுவழியும் இல்லாமல் தோராயமாக 8 மணிநேரம் பயண நேரமாகும்.


தடம் 2: தில்லி - காஸியாயாபாத் - மொராடாபாத் - ராம்பூர் - பரேலி - ஹால்ட்வானி - ராணிகேட். 377 கிமீ தூரம். எந்த சுற்றுவழியும் இல்லாமல் தோராயமாக 9 மணிநேரம் பயண நேரமாகும்.


தடம் 3: தில்லி - காஸியாபாத் - மீரட் - காஷிபூர் - ராணிகேட், வழி SH 12. மொத்த தூரம் 425 கிமீ மற்றும் 11 மணி நேர பயண நேரமாகும்.

குறைந்த நேரம் எடுக்கும்

குறைந்த நேரம் எடுக்கும்

மற்ற இரண்டு தடங்களைக் காட்டிலும் தடம் எண் ஒன்றே குறுகிய தூரம் மற்றும் குறைந்த நேரம் எடுக்கும்.

வாரவிடுமுறையில் லாங் பைக் ரைடு போக டாப் 15 இடங்கள் !

தில்லியிலிருந்து விடியற்காலை கிளம்பி்னால் வாகன நெரிசலை தவிர்த்து காசியாபாத் அடையலாம். காசியாபாத்தில் துதேஸ்வர்நாத் மந்திர், துர்கா கோவில் மற்றும் இஸ்க்கான் கோவில் போன்றவற்றை பார்வையிடலாம்.


மொராடாபாத் நகரம் ராம்கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் "பித்தளை நகரம்" என்ற பெயரும் உண்டு. இங்கு நீங்கள் பித்தளையால் செய்யப்பட்ட விளக்குகள், ஜாடி, அறைக்கலன்கள் அல்லது அலங்கார பொருட்கள் வாங்கலாம். இங்கு அமைந்துள்ள மான் பூங்கா கண்டிப்பாக குழந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். நீங்கள் வன உயிரின ஆர்வலர் என்றால், சிறிது நேரம் செலவழித்து ஜிம் கார்பெட் தேசிய பூங்காவை சுற்றிப்பார்க்கலாம்.

இந்தப் பயணம் பெரிய அளவில் நீண்ட மற்றும் திருப்பம் கொண்டது என்பதை அறிய வேண்டும்.

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

கார்பேட் தேசிய பூங்கா

கார்பேட் தேசிய பூங்கா

இந்தியாவில் உள்ள பழமையான பூங்காக்களில் ஒன்று கார்பேட் தேசிய பூங்கா.

குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

இப்பூங்காவானது வங்காள புலிகளுக்கும், பன்முகத்தன்மைக்கொண்ட தாவராயினம் மற்றும் விலங்கினங்களுக்கும் புகழ்பெற்றது. நீங்கள் வனப்பயணத்திற்கு பதிவு செய்து பாயும் மற்றும் அழகான சிறுத்தைகள், புலிகள் மற்றும் யானைகளை பார்க்கலாம்.

நீங்கள் ஜீப் பதிவு செய்தீர்கள் என்றால் யானை வனப்பயணம் விருப்பத்தேர்வாக அளிக்கப்படுகிறது. பறவைகளைக் கண்டுக்களிக்க புகழ்மிக்க இடமாகும். கார்பேட் பூங்கா 650க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகிறது.

அடுத்து நீங்கள் ராணிக்கேட் தொடர்ந்து செல்வதற்கு முன் நைனிடாலில் நிற்கலாம். இந்நகரம் முத்து வடிவிலான நைனிடால் ஏரியுடன் அனைத்து பகுதிகளும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கம்பிவழி ஊர்தி மூலம் சென்று பார்க்கக்கூடிய நந்தா தேவி உச்சி, சீன உச்சி மற்றும் பனிபடர்ந்த மலைமுகடுகள் ஆகியவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.

ஈக்கோ கேவ் தோட்டம் குழந்தைகள் குகைகளை பற்றி அறிந்துக்கொள்ள சிறந்த இடமாகும். நைனிடால் வனஉயிரியல் பூங்கா புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். இங்கு அரியவகை பனிசிறுத்தை, புல்வெளிக்கழுகு மற்றும் இமாலய கருப்பு கரடி போன்ற உயிரினங்களைக் காணலாம். ராணிகேட் செல்லும் வழியில் பறவை ஆர்வலர்கலின் சொர்க்கமாக கில்பரி உள்ளது.

ராணிக்கெட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்:

ராணிக்கெட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்:

சவுபாட்டியா தோட்டம்


கடல்மட்டத்திலிருந்து 1800மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த தோட்டம் அரசாங்கத்தால் பேணப்படுகிறது.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்க புதையல்கள் நிறைந்த மலை

ஆப்பிள்கள், குழிப்பேரி பழங்கள், வாதுமை பழங்கள் நிறைந்த தோட்டமாகும். வழிகாட்டியை அமர்த்திக்கொள்வதன் மூலம் தோட்டத்தில் உள்ள மருத்துவ குணமுள்ள மூலிகைகளைப் பற்றியும், தோட்டத்தின் சிறந்த இடங்களையும் அறியலாம்.

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

உப்பட் குழிப்பந்தாட்ட மைதானம்

உப்பட் குழிப்பந்தாட்ட மைதானம்

குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் பந்து விளையாடலாமா?திருவிதாங்கூர் மர்மங்களை போட்டுடைக்கும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

உப்பட் குழிப்பந்தாட்ட மைதானம் ஆசியாவின் உயரமான குழிப்பந்தாட்ட மைதானம் ஆகும். குமான் படைப்பிரிவால் பராமரிக்கப்படுகிறது. ஒன்பது குழிகள் கொண்ட குழிப்பந்தாட்ட மைதானமான இங்கு அனுபவ ஆட்டக்காரர்களுடன் விளையாடலாம் அல்லது விளையாட்டை பார்த்து ரசிக்கலாம்.

பாலு அணைக்கட்டு


சவுபாடியா பழத்தோட்டத்திற்கு 3 கிமீ கீழே அமைந்துள்ளது பாலு அணைக்கட்டு. கோசி ஆற்றின் மீது மனிதனால் கட்டப்பட்ட ஏரியாகும். தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்காக கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு ராணிகேட்டுக்கும் பிற பகுதிகளுக்கும் நீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த ஏரி கூடாரமடித்து பொழுதுபோக்க சிறந்த இடமாகும்.KRC அருங்காட்சியகம்


1970இல் குமான் ரெஜிமெண்டல் சென்டர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இங்கு ஜான்சி ராணியின் வெள்ளி செங்கோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குமான் படைப்பிரிவின் வரலாறும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ராணிக்கெட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான ஆலயங்கள்


ஜூலா தேவி ஆலயம்


இந்தக் கோவில் பெண் தெய்வமான துர்காவினுடையது. கோவில் முழுவதும் மணிகள் கட்டப்பட்டிருக்கும். பக்தர்களின் வேண்டுகோள் கடவுளால் நிறைவேறினால் மணிகள் கட்டும் நம்பிக்கை உள்ளது.

பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

கவனிக்க வேண்டிய கோவில்கள்

கவனிக்க வேண்டிய கோவில்கள்

கடர்மால் சூரிய ஆலயம்


ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரிய கோவிலுக்கு பின் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய கோவில் இதுவாகும். 800 வருட பழமையானது என நம்பப்படுகிறது.


பின்சார் மஹாதேவ் ஆலயம்


கடவுள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலானது தேவதாரு மரங்கள் சூழ அமைந்துள்ளது. கோவிலின் கட்டமைப்பு சிக்கலான மற்றும் இணையற்ற வேலைத்திறனின் வெளிப்பாடு.


மங்கமேஸ்வர் ஆலயம்


இந்தக் கோவில் குமான் படைப்பிரிவால் கட்டப்பட்டது. கோவிலின் பின்புறம் மலைகள் அமைந்துள்ளது. அருகிலேயே குருத்வாரா உள்ளது.


டுணகிரி கோவில், ராம் மந்திர் , ஹாய்டாகான் கோவில் மற்றும் கள்ளிக்கா கோவில் ஆகியவை பிற முக்கிய கவனிக்க வேண்டிய கோவில்கள் ஆகும்.

Read more about: travel