» »மோட்சம் தரும் புண்ணிய பூமி - ஸ்ரீசைலம் சுற்றுலா

மோட்சம் தரும் புண்ணிய பூமி - ஸ்ரீசைலம் சுற்றுலா

Written By: Udhaya

சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரம் ஹைதராபாத்திலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..

ஸ்ரீசைலம் நகரத்துக்கு ஆண்டு தோறும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்காகவும், தீர்தங்களுக்காகவும் புனித யாத்ரீகர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

ஸ்ரீசைலம் நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படும் பிரம்மாரம்பா மல்லிகார்ஜுனசுவாமி கோயில் சிவபெருமானுக்காகவும், பார்வதி தேவிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர இங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம். ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாம் வாங்க!

அக்கமாதேவி குகைகள்

அக்கமாதேவி குகைகள்

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அமைந்திருக்கும் அக்கமாதேவி குகைகள், ஸ்ரீசைலம் நகரத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து இருந்து வருவதாக நம்பப்படுகிறது.

wikimedia.org

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகை

150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த குகையை நீங்கள் ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

commons.wikimedia.org

 மல்லேல தீர்த்தம் அருவி

மல்லேல தீர்த்தம் அருவி

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லேல தீர்த்தம் அருவிக்கு அதன் சமயச் சிறப்பு காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

Ylnr123

 மழைக்காலங்களில்

மழைக்காலங்களில்


இந்த அருவி அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, அருவிக்கு செல்லும் வழி கரடு முரடான சாலைகளை கொண்டிருந்தாலும் சுலபமாக அடையக் கூடியதே. எனினும் மழைக் காலங்களில் வாகனங்கள் மூலம் இந்த அருவியை அடைவது சற்று கடினம்.

 சிவாஜி ஸ்புர்த்தி கேந்திரா

சிவாஜி ஸ்புர்த்தி கேந்திரா

மராட்டிய மாமன்னர் சிவாஜி மஹாராஜாவின் பெயரை தாங்கியிருக்கும் சிவாஜி ஸ்புர்த்தி கேந்திரா, ஸ்ரீசைலம் நகரத்தின் விளையாட்டு மையமாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மையத்தை அடைய நீங்கள் 30 படிக்கட்டுகளை ஏறிக் கடந்தாக வேண்டும்.

 விளையாட்டில் சாதிக்க விரும்பும் குழைந்தைகள்

விளையாட்டில் சாதிக்க விரும்பும் குழைந்தைகள்

சிவாஜி ஸ்புர்த்தி கேந்திரா விளையாட்டில் சாதிக்க விரும்பும் குழைந்தைகளுக்காக துவங்கப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பாட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஏரளமான குழந்தைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். முக்கியமாக இந்த விளையாட்டு மையத்திலிருந்து எண்ணற்ற குழந்தைகள் சீமாந்திரா மாநிலத்தின் சார்பாக தேசிய அளவிலான விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

 ஸ்ரீசைலம் அணை

ஸ்ரீசைலம் அணை

ஸ்ரீசைலம் நகரத்தின் மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கிருஷ்ணா நதிக்கு குறுக்கே ஸ்ரீசைலம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர் மின் திட்டம் செயல்பட்டு வரும் ஸ்ரீசைலம் அணை, நல்லமலை குன்றுகளின் மலையிடுக்குகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் சிறப்பானது.

Kashyap joshi

 ஸ்ரீசைலம் அணை

ஸ்ரீசைலம் அணை

ஸ்ரீசைலம் நீர்தேக்கத்தின் உள்வரும் நீர் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் அதிகளவில் நீரினை இங்கு சேமித்து வைத்து கொள்ள முடிகிறது. எனினும் வெள்ளம் வரும் சமயங்களில் வேகமாக நிரம்பும் ஸ்ரீசைலம் அணையின் உபரி நீர் நாகர்ஜுனா அணையை அடைந்து விடும். இந்த வெள்ள நீரும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

Strike Eagle

 ஸ்ரீசைலம் சரணாலயம்

ஸ்ரீசைலம் சரணாலயம்


ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வரும்போது பயணிகள் தவறாமல் செல்ல வேண்டிய இடங்களில் முக்கியமானது இந்த ஸ்ரீசைலம் சரணாலயம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் பாதுகாப்பு காடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஸ்ரீசைலம் சரணாலயம் 3568 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

 ஸ்ரீசைலம்

ஸ்ரீசைலம்


ஸ்ரீசைலம் சரணாலயத்தின் காடுகளில் புலிகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், கரடிகள், மான்கள், கழுதை புலிகள், எறும்புதிண்ணிகள், பனை புனுகு பூனைகள் போன்ற எண்ணற்ற விலங்கினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

Read more about: travel, temple, dam