Search
  • Follow NativePlanet
Share
» »1965 வகை பூக்கள் கொண்ட 1800அடி உயரத்தில் அற்புத சொர்க்கம் போலாமா #Season1

1965 வகை பூக்கள் கொண்ட 1800அடி உயரத்தில் அற்புத சொர்க்கம் போலாமா #Season1

1965 வகை பூக்கள் கொண்ட 1800அடி உயரத்தில் அற்புத சொர்க்கம் போலாமா #Season1

By Udhaya

கேரளா - தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் இந்த இடம் காட்சியளிக்கிறது. இங்குள்ள காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அற்புதமான காட்டுயிர் அம்சங்களும் தாவர இனங்களும் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளதே இதன் அடையாள விசேஷமாகும்.

ஒரு முழு நேரச் சுற்றுலாவாக இங்கு செல்லவிரும்புவோருக்கு, அங்கு அருகில் காணவேண்டிய இடங்கள், எப்படி சென்றால் குறைந்த செலவு, தூரம், நேரம் ஆகும் என்பதுகுறித்த அத்தனை தகவல்களையும் இந்த ஒரே தொகுப்பில் காணலாம். இதுமட்டுமின்றி, எண்ணற்ற சுற்றுலாத் தளங்களைப் பற்றிய தகவல்களும் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழின் முன்னணி பயண வழிகாட்டி.

தேக்கடி

தேக்கடி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது ‘தேக்கடி'. இது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு சிறப்பான இயற்கைத் தலமாகும். பெரியார் காட்டுயிர் சரணாலயம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. இந்த சுற்றுலா மையமானது நடைபயணிகள், இயற்கை ரசிகர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள், சாகச விரும்பிகள், குடும்பச்சுற்றுலா செல்வோர் என்று பலவகைப்பட்ட பயணிகளை ஈர்க்கிறது. முக்கியமாக காதலர்கள், இளம்சோடிகள் அதிக அளவில் இங்கு வருகைத் தருகின்றனர்.

Nebu George

 குளுகுளு சூழல்

குளுகுளு சூழல்

வித்தியாசமான புவியியல் அமைப்பில் அமைந்திருப்பதால் மற்ற எந்த இடங்களிலும் அதிகம் காணமுடியாத பல்லுயிர்ப்பெருக்க சூழல் இந்த தேக்கடி வனப்பகுதியில் நிலவுகிறது. இதமான குளுமையான சூழல் தவழும் இந்த அழகுப்பிரதேசமானது பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பணப்பயிர்த் தோட்டங்களுடன் காட்சியளிக்கிறது. பல்வகையான வாசனைப்பயிர்களிலிருந்து வீசும் நறுமணம் இப்பகுதி முழுவதும் விரவியிருப்பதை நுகரும் அனுபவமே புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாகும்.

வளைந்து நெளிந்து செல்லும் மலைகளின் பின்னணியில் திரும்பும் இடமெல்லாம் தோன்றும் எழிற்காட்சிகள் இப்பகுதியை புகைப்பட ஆர்வலர்கள் நேசிக்கும் ஒரு சொர்க்கமாக மாற்றியுள்ளன. குளுமையான சூழல் மற்றும் நவீன வசதிகள் நிறைந்த ஏராளமான ரிசார்ட் விடுமுறை விடுதிகளின் சேவைகள் போன்றவை இப்பகுதியை தேனிலவுப்பயணம் மற்றும் குடும்பச்சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவும் பிரபலப்படுத்தியுள்ளன.

Sibyperiyar

புகைப்படப்பிரியர்களே

புகைப்படப்பிரியர்களே


புகைப்படங்களை நேசிப்பவர்கள் நிச்சயம் இயற்கையை நேசிப்பார்கள். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை நின்னு நிதானமா நிறுத்தி ஆலோசிச்சி பொறுமையா சூப்பரா எடுத்து தங்கள் கலைத் திறனை காட்டுவார்கள். இங்குள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள், இயற்கை காட்சிகள் அனைத்துமே சிறப்பானவை. தேக்கடி படகுத்துறை, பூங்கா போன்றவை கட்டாயம் காணவேண்டிய ரகம்.

michael clarke stuff

சாகச அம்சங்கள்

சாகச அம்சங்கள்

இயற்கை காட்சிகளின் தரிசனங்களுக்கும் சாகச அம்சங்களுக்கும் எல்லையே இல்லை. உண்மையில் மிக அழகான ஒரு சுற்றுலாத்தளத்தில் இருக்கும் உணர்வு உங்கள் கண்களை மூடினாலும் இருந்துகொண்டே இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பானது தேக்கடி. அந்த நறுமண பயிர்கள் ஒன்றே போதுமே.

Raku2040

நறுமணங்கள்

நறுமணங்கள்

வந்தான் மேடு எனும் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏலக்காய் தோட்டத்தில் ஒரு ரிசார்ட் விடுதியும் உள்ளது. பலவிதமான வாசனைப்பயிர்கள் பயிராகும் தேக்கடியில் தரமான லவங்கம், வெந்தயம், வெள்ளை மற்றும் பச்சை மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, நட்சத்திர சோம்பு மற்றும் கொத்துமல்லி போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப பாரம்பரிய கேரள உணவுவகைகள் விதவிதமான சுவைகளில் இங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகின்றன.

Anand2202

மூங்கில் தெப்ப சவாரி

மூங்கில் தெப்ப சவாரி

ஒரு காலத்தில் காட்டுவழி ஆற்றுப்போக்குவரத்துக்கு பயன்பட்ட இந்த தெப்பவடிவம் இன்று தேக்கடியில் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக மாறிவிட்டது. இந்த தெப்ப பயணத்தோடு காட்டுயிர் வேடிக்கை, மலையேற்றம் ஆகியவையும் ஒருங்கிணைந்த சாகச சுற்றுலா சேவையாக தேக்கடியில் வழங்கப்படுகிறது. இந்த தெப்பச்சுற்றுலாவில் பத்து பயணிகள் மற்றும் ஐந்து வழிகாட்டிகள் என்று குழுக்களாக மட்டுமே பங்கேற்க முடியும். ஆயுதம் ஏந்திய வனக்காவலர் ஒருவரும் இந்த குழுவில் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான வனவிலங்குகள் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை அவசியமாகிறது. தூய்மையான எழில் ஜொலிக்கும் காட்டின் உட்புறங்களை இந்த தெப்பத்தில் பயணித்தபடியேயும், அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளேயே மலையேற்றம் செய்தும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். காலை 8 மணிக்கு துவங்கும் இந்த ‘விசேஷ காட்டு சுற்றுலா'மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. உணவு மற்றும் சிற்றுண்டிகளையும் உள்ளடக்கியதாக இந்த சேவை அளிக்கப்படுகிறது.

Vi1618

முரிக்கடி

முரிக்கடி


முரிக்கடி எனும் இந்த அற்புத இயற்கை எழில் ஸ்தலமானது தேக்கடி பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு அலையலையாக பரந்து விரிந்திருக்கும் மலைத்தோட்டங்கள் வண்ண ஓவியம் போன்று பசுமையாக காட்சியளிக்கின்றன. பெரியார் காட்டுயிர் சரணாலயத்திற்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் கூட பார்த்து ரசிக்கலாம். காப்பி, தேயிலை, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற வாசனைப்பயிர்கள் இந்த முரிக்கடி மலைத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களின் வாசனை பிரதேசமெங்கும் வியாபித்திருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் இயற்கைச்சூழலாக இந்த முரிக்கடி மலைப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது.

official

மலையேற்றம்

மலையேற்றம்

காட்டு ஒற்றையடிப்பாதைகள் நிரம்பிய மலைப்பாங்கான பிரதேசத்தை கொண்டிருப்பதால் தேக்கடியில் மலையேற்றம் ஒரு முக்கியமான சாகச பொழுதுபோக்கு அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மலையேறிகள் மற்றும் சாகச பயணிகளுக்கேற்ற பல மலையேற்றப் பாதைகள் குறிப்பாக பெரியார் காட்டுயிர் சரணாலயத்தில் நிரம்பியுள்ளன. புல்லுமேடு, குமுளி, குரிசுமலா, ஒட்டகதலமேடு மற்றும் கிராம்பி போன்ற இடங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மலையேறிகள் இந்த பாதைகளின் வழியே மலையேறுவதற்கு வனத்துறையினரின் அனுமதியை முதலில் பெறுவது அவசியம். மேலும், கேரளா வனத்துறையினரே தினமும் இப்பகுதியில் மலையேற்றச் சுற்றுலாப்பயணங்களை ஏற்பாடு செய்கின்றனர். இது தவிர மாவட்ட சுற்றுலா தகவல் அலுவலகத்தின் மூலம் ‘பிளான்டேஷன் டூர்ஸ்' எனப்படும் பயிர்த்தோட்ட காட்சி சிற்றுலாக்களும் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.

Anand2202

மங்களாதேவி கோயில்

மங்களாதேவி கோயில்

தேக்கடி பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மங்களாதேவி கோயில் இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து 1337 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் வீற்றுள்ளது. மேலும் இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசிக்க முடிவது விசேஷமான அம்சமாகும். கோயிலைச்சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்திருப்பதால் இந்த கோயில் தரிசனம் பயணிகளுக்கு பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். புராதனமான இந்த மங்களாதேவி கோயிலானது பாண்டியர் காலத்து கோயில் பாணியில் கற்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகார காவிய நாயகியான கண்ணகியே இங்கு மங்களாதேவி ரூபத்தில் குடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

sabareesh kkanan

ஆப்ரகாம் ஸ்பைஸ் கார்டன்

ஆப்ரகாம் ஸ்பைஸ் கார்டன்

தேக்கடியிலிருந்து கோட்டயம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ஆப்ரகாம்'ஸ் ஸ்பைஸ் கார்டன் நறுமணம் கமழும் வாசனைப்பயிர்கள் விளையும் தோட்டப்பண்ணையாகும். பலவகை வாசனைப் பயிர்களின் மருத்துவ குணங்கள், பயிர் செய்யும் முறைகள், ஆயுர்வேத குறிப்புகள் என்று ஏராளமான தகவல்களை பயணிகள் இந்த தோட்டத்தில் தெரிந்துகொள்ளலாம். வாசனைப்பயிர்கள் மட்டுமன்றி மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள், பழங்கள், மலர்கள் போன்றவையும் இந்த தோட்டத்தில் காணப்படுகின்றன. வாசனைப்பொருட்களின் உற்பத்தியின் பல்வேறு நிலைகளான விளைச்சல், அறுவடை, தரம் பிரித்தல் பதப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் குறித்த நுட்பமான தகவல்களையும் பார்வையாளர்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம். 1952ம் ஆண்டில் ஆபிரகாம் என்பவரால் துவங்கப்பட்டுள்ள இந்த தோட்டப்பண்ணையில் சுற்றுலாப்பயணிகளுக்காகவே வழிகாட்டியுடன் கூடிய காட்சி விளக்க சிற்றுலா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமாகும்

michael clarke stuff

கடத்தநாடன் களரி மையம்

கடத்தநாடன் களரி மையம்

குமுளியிலுள்ள இந்த ‘கடத்தநாடன் களரி மையம்' களரிப்பயட்டு சண்டைக்கலை ஆர்வலர்கள் மற்றும் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மையமாகும். பல நூற்றாண்டுகள் பழமையை உடைய கேரளாவின் பாரம்பரிய கலையான இந்த களரிப்பயட்டு மிக பிரசித்தி பெற்ற சண்டைக்கலையாகும். வேகமான உடல் அசைவுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் வீச்சுகளை கொண்ட இந்த தற்பாதுகாப்பு கலை கேரள வரலாற்றின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ளது. இந்த கடத்தநாடன் களரி மையத்தில் நிகழ்த்தப்படும் களரிபயட்டு நிகழ்ச்சிகளை இங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்திலிருந்து பயணிகள் பார்த்து ரசிக்கலாம். உடல் திறன் பயிற்சி மற்று தற்பாதுகாப்பு நுணுக்கங்களை உள்ளடக்கிய இந்த சண்டைக்கலை பற்றிய தகவல்களையும் இந்த மையத்தில் பயணிகள் தெரிந்துகொள்ளலாம். தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த மையத்தில் களரி பயிற்சிகள் பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகிறது. நம்ப முடியாத உடல் அசைவுகள், கை வீச்சு, எதிர் வீச்சு, ஆயுத வீச்சு, எகிறிப்பறத்தல், சிலம்பவீச்சு, வாள்வீச்சு, மல்யுத்த முட்டல்கள் போன்ற எல்லா அம்சங்களையும் கதம்பமாக கொண்டுள்ள இந்த சண்டைக்கலை பயிற்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன.


Appaiah

பெரியார் காட்டுயிர் சரணாலயம்

பெரியார் காட்டுயிர் சரணாலயம்

பெரியார் ஏரி எனப்படும் செயற்கை ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த சரணாலயம் அடர்த்தியான பசுமை மாறாக்காடுகளையும், பனி படர்ந்த மலைச்சிகரங்களையும் பச்சை பசேலென்ற பள்ளத்தாக்குப்பகுதிகளையும் தன் அங்கங்களாகவும் எல்லைகளாகவும் கொண்டுள்ளது. ஏரியின் கரையை ஒட்டி யானைகள் கூட்டம் கூட்டமாக மேய்வதை ஏரியில் படகுச்சவாரி செய்தபடியே ரசிக்கும் காட்சிக்கு இணையான அனுபவம் வேறொன்றுமில்லை எனலாம். 777 ச.கி.மீ பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த சரணாலயம் 1982ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் எனும் விசேஷ அந்தஸ்தையும் பெற்றுள்ளது. பல்வகையான உயிரினங்களும் தாவர வகைகளும் இந்த சரணாலயத்தில் நிரம்பியிருப்பதால் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பயணிகள் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

Kir360

வந்தான்மேடு

வந்தான்மேடு

தேக்கடியிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள இந்த வந்தான்மேடு நகரத்தை சாலை மார்க்கமாக சென்றடையலாம். சூழலியல் சுற்றுலாப்பிரதேசங்களான முரிக்கடி, பண்டிக்குழி, காவி மற்றும் செல்லார் கோயில் போன்றவையும் இந்த சிறு நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இயற்கை உலா, நடைபயணம் போன்ற அதிக சிரமமில்லாத வெளிப்பொழுதுபோக்குகளில் பயணிகள் ஈடுபடலாம். இங்குள்ள பணப்பயிர் தோட்டங்களில் காட்சி விளக்க சுற்றுலா சேவைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Bernard Gagnon

வண்டிப்பெரியார்

வண்டிப்பெரியார்

தேக்கடி பகுதியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள சிறு நகரமான இந்த வண்டிப்பெரியார் இடுக்கி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. பசுமை நிரம்பிய இந்த பிரதேசத்தின் வழியாக பெரியார் ஆறு பாய்வதால் சமூக கலாச்சாரமும் விவசாயமும் இப்பகுதியில் தழைத்தோங்கியுள்ளது. பரந்து காணப்படும் பசுமையான தூய்மையான பயிர்த்தோட்டங்களுக்கு இப்பகுதி புகழ் பெற்றுள்ளது. தரமான தேயிலை, மிளகு மற்றும் காபி போன்ற பணப்பயிர்கள் இங்குள்ள தோட்டப்பண்ணைகளில் விளைவிக்கப்படுகின்றன. வாசனைப் பொருட்களுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த வண்டிப்பெரியார் பிரசித்தமாக அறியப்படுகிறது. மேலும், இங்குள்ள அரசு வேளாண்மைப் பண்ணை மற்றும் மலர்த்தோட்டம் ஆகிய இரண்டு இடங்களிலுமுள்ள மலர்த்தாவரங்களும் பசுமை வளமும் ரசிக்க படவேண்டியவையாகும்.

Nebu George

மலர் கண்காட்சி

மலர் கண்காட்சி


கோடைக்காலத்தில் தேக்கடியில் மலர் கண்காட்சி தொடங்கப்படும். இதில் வண்ணமயமான பல மலர்கள் காட்சிக்கு வைக்கப்படும். மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச்செடிகளுடன் 50 ஆயிரம் வகை செடிகள் வரை வைக்கப்படும்.

michael clarke stuff

தாவர விலங்குவகைகள்

தாவர விலங்குவகைகள்

இ்ங்கு 171 புல் வகைகளும், 143 மல்லிகை வகைகளும், 1965க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களும் காணப்படுகின்றன. காட்டுயானை, சிறுத்தை, சாம்பார் மான், காட்டுப்பன்றி, பறக்கும் அணில், புலி, காட்டுப்பூனை உள்ளிட்ட 35 வகையான விலங்கினங்கள், 265வகை பறவை இனங்கள், பாம்புவகைகள், தவளை, தேரை உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகள், மீன்கள், தேயிலை, ஏலம், மிளகு என எக்கச்சக்க உயிர் வகைகளை இங்கு காணமுடியும்.

Ben3john

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடிக்கு, குமுளி வழியாக 4கிமீ பயணம் செய்து அடைந்துவிடலாம்.

தேக்கடி படகுத்துறைக்கு செல்வதற்கு முன் ஒரு பூங்கா உள்ளது. இது முழுவதும் அழகிய புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் ஓய்வெடுக்க பல இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Pratheesh mishra

சிறந்த காலம்

சிறந்த காலம்

இந்த இடம் மற்ற பகுதிகளைப் போலல்லாது, வருடத்தின் அனைத்து நாட்களிலும் உங்களை வரவேற்கும்.

அக்டோபர் முதல் பிப்பிரவரி வரை 15 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இறங்கி இருக்கும். அந்த சமயத்தில் செல்ல விருப்பமுள்ளவர்கள் செல்லலாம்.

அல்லது கோடை சுற்றுலாவுக்கு, மார்ச் முதல் மே வரையும், மழைக்கால சுற்றுலாவுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் செல்லலாம்.

Anand2202

Read more about: travel thekkady
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X