Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள் வாழ்ந்த இடங்கள் பேய் பங்களா ஆன கதை தெரியுமா?

ஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள் வாழ்ந்த இடங்கள் பேய் பங்களா ஆன கதை தெரியுமா?

ஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள் வாழ்ந்த இடங்கள் பேய் பங்களா ஆன கதை தெரியுமா?

By Udhaya

உலகம் பல்வேறு போர்களைக் கண்டது. ஆளுமைக்காக சண்டையிட்டு சொந்த நாட்டு மக்களை பலியும் கொடுத்து, பல பேரை இழந்து ஒரு கட்டத்தில் போரே வேண்டாம் என்று மனித இனம் முடிவு செய்தது. ஆனாலும் அவ்வப்போது இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை, பனிப்போர்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. மன்னர் காலத்தில் நிறைய போர்கள் நடைபெற்று, பல அரிய பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. உலக கட்டிடக்கலைகளிலேயே மிக அழகிய கட்டிடங்களை கட்டி வாழ்ந்துள்ளனர் இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் இப்பகுதிகளை நிறைய மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் தங்கள் காலத்தில் உலகின் பெரும்பகுதியை தன் குடைக்குள் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் வாழ்ந்த கோட்டை இப்போது பேய் பங்களா எனும் அளவுக்கு மாறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்.. அப்படி இருந்த இடம் தற்போது எப்படி இருக்கிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.

உனகோடி

உனகோடி


பல சுற்றுலாப் பயணிகள் மொய்க்கும் அளவுக்கு பெரிய தளமாக இல்லாமல் இருந்தாலும், இதன் சுற்றுலா அம்சம் ஒன்றும் அந்த அளவுக்கு குறைவில்லை. நிறைய பொக்கிஷங்கள் நிறைந்த இடம் இதுவாகும். மேலும் இந்த இடம் சுற்றுலாத் தளம் மட்டுமில்லாமல், தொலைந்துபோன மாபெரும் ராஜ்ஜியத்தின் இடமுமாகும்.

இந்த இடத்துக்கு நீங்கள் பயணித்தால் அங்கு நிறைய கற்பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள் பலவற்றைக் காணமுடியும். ஏழாம் நூற்றாண்டில் மிகச் சிறந்து விளங்கிய சைவ தலம் இதுவாகும்.

பாறையில் குடையப்பட்ட பல சிற்பங்கள் காண்பதற்கு, இங்கு இரண்டு மூன்று நாள்கள் தங்கிவிடலாமா என்றே தோன்றும்.ஆனால்....

Scorpian ad

சாபத்தால் நிலைகுலைந்த மாபெரும் சாம்ராஜ்யம்

சாபத்தால் நிலைகுலைந்த மாபெரும் சாம்ராஜ்யம்

இந்த இடம் ஒரு காலத்தில் உலகத்தால் கொண்டாடப்பட்டிருக்கிறது. இங்குள்ள சிற்பங்களும் பாறைகளும் அதையே காட்டுகின்றன. அப்பேர்பட்ட அந்த இடம் சாபத்தால் சீரழிந்துவிட்டதாக , தொலைந்துபோன நகரமாகிவிட்டதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இங்கு சிவன் அடிக்கடி வருகை தருவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.

சிவபெருமான் தோன்றி அருள் செய்வதாக இன்றும் இப்பகுதிமக்கள் நம்புகின்றனர். அவரின் அருள் காரணமாக இந்த இடம் பச்சைப் பசேலென்று விளங்குவதாகவும் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் இங்கு பல பொக்கிஷங்கள் நிறைந்துள்ளதாகவும், பல லட்சக்கணக்கான மதிப்புள்ள புதையல்கள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Atudu

ஹம்பி

ஹம்பி

ஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை அம்சங்களுக்காக மட்டுமின்றி அதன் ஆன்மீக வரலாற்று பின்னணிக்காகவும் ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு பல பிரசித்தி பெற்ற கோயில்களும் உள்ளன.

விருபாக்‌ஷா ஆலயம் விட்டலா ஆலயம் மற்றும் ஆஞ்சனேயத்ரி போன்ற கோயில்கள் இங்கு உள்ளன. கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான துங்கபத்திரா இந்த நகரின் வழியே ஓடுகிறது. இடிபாடுகளும் அதன் பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த பிரதேசத்தை சுற்றிலும் காணப்படும் மலைகளிலிருந்தே விஜயநகர மன்னர்கள் தாங்கள் எழுப்பியுள்ள கோயில்களின் சிற்ப வேலைப்பாடு கொண்ட கல் தூண்களுக்கான பாறைகளை பெற்றுள்ளனர் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது.

Ksuryawanshi

கண்டிப்பாக காணவேண்டிய சுற்றுலா

கண்டிப்பாக காணவேண்டிய சுற்றுலா

ஹம்பியில் 500 க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும். விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பாறைச்சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கல் தேர் சிற்பமே கர்நாடக மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சின்னமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஹம்பி ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் பல விதமான சரித்திர கலைப்பொருட்கள் தொடர்ந்து கிடைத்தவாறே உள்ளன என்பது ஒரு வியப்பான விஷயம். இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

Harshap3001

ராஸ் தீவு

ராஸ் தீவு

ராஸ் அல்லது ரோஸ் எனப்படும் தீவு, அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒன்றாகும். வழக்கமாக சுற்றுலாவுக்கு பயணிக்கும்போது சில இடங்களில் அமானுஷ்ய சக்திகள் இருக்கும் என்று கூறுவார்கள். உள்ளூர் மக்களுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து சுற்றுலா செல்பவர்கள் எந்த பயமும் இன்றி ரசித்துவிட்டு வருவார்கள். அப்படி ஒரு இடம்தான் ராஸ் தீவுகள்.

Unknown

1941ம் ஆண்டுக்கு முன்

1941ம் ஆண்டுக்கு முன்

1941ம் ஆண்டு வரை அந்தமானின் அலுவலக தலைநகராக இருந்தது ராஸ் தீவுதான். இங்குதான் அரசியல் ரீதியான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு வந்தன. அந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதை நிலைகுலையச் செய்தது. அதுவரை மற்ற தீவுகளைப் போலத்தான் ராஸ் தீவும், அழகிலும், அமைதியிலும் சிறப்பானதாக இருந்தது.

இங்கு இரவு நேரங்களில் மர்ம மரணங்களும் நிகழ்கின்றனவாம். இங்கு பழைய தேவாலயம் ஒன்று பாழடைந்து காணப்படுகிறது. மேலும் சில நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. உள்ளூர் மக்கள் இங்கு பேய் உலாவுவதாக கூறுகின்றனர்,

Adwait

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். அதனால், தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த துயரத்தைப் பார்ப்போம். இன்று எத்தனையோ அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் வந்த பின்பும் நம்மால் சென்னை வெள்ளத்தை தடுக்க முடியவில்லை.

அப்படியிருக்க 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூறாவளி வந்து ஒரு ஊரையே விழுங்கப் போகிறது என்று யாருக்குத் தெரிந்திருக்கும். துயரமாக அது நடந்தது 1964'ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது. துரதிருஷ்டவசமாக, சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்த ரயிலும் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த இயற்கை சீற்றத்தால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதன் பின்னர், தமிழ் நாடு அரசு, இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.

NItish

தனுஷ்கோடி சுற்றுலா

தனுஷ்கோடி சுற்றுலா

தனுஷ்கோடி ஒரு அருங்காட்சியகம் போல், சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களும், ஒரு துயரத்தின் மெளன சாட்சியாக இருக்கிறது. இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு மீன் பொறித்துத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.தேவாலயம் போல ஒரு சிவன் கோவிலும் இருந்திருக்கிறது. அதுவும் புயலால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனுஷ்கோடியையும் பார்க்க வருவதால் ஓரளவு நல்ல சுற்றுலாவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருகின்றன. அமைதியான நீர்ப்பரப்பை உடைய வங்காள விரிகுடாவும், சீறிப்பாயும் அலைகளை உடைய இந்தியப்பெருங்கடலும் இங்கே கலப்பதை காண முடியும். அதே போல புயலில் சிதலமடைந்த தனுஷ்கோடி சர்ச் மற்றும் பாம்பன் ரயில் நிலையத்தின் எச்சங்களும் இன்றும் இருக்கின்றன.

Nsmohan

 காலவன்டின் துர்க்

காலவன்டின் துர்க்

மும்பை மாநகரத்துக்கு அருகில் அமைந்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது இந்த இடம். இது ஒரு மிகப் பழமையான கோட்டையாகும். இதற்கு பிரபால்கட் என்று பெயர். இதை யார் கட்டியது என்பது இன்று வரை யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனினும் இது புத்தர் காலத்திய கட்டிடமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Niteshsavane143

ராணி காலவன்டின்

ராணி காலவன்டின்

இந்த இடத்தை ஆட்சி செய்துவந்த மன்னர் காலவன்டின் எனும் ராணியின் பெயரில் இந்த கோட்டையைக் கட்டியுள்ளார். உண்மையில் மிகப் பயங்கரமான கோட்டை இதுவாகும். உலகின் மிக ஆபத்தான கோட்டையும் இதுவாகும். ஏன் தெரியுமா.. இது இருப்பது 2300 அடி உயரத்தில்.....

அப்பறம் அந்த ராணியின் பேய் இங்கு உலவுவதாகவும் ஒரு கதை இருக்கு.. கொஞ்சம் கவனம் மக்களே....

Rohit Gowaikar

சிக்தன்

சிக்தன்

கார்கில்லில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இதுவும் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இப்போது அமைதியாகிவிட்ட இடமாகும். முன்னதைப் போலவே இதுவும் மிகப்பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட தலமாகும். இந்த கோட்டை கார்கிலிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


PC: WMF

16ம் நூற்றாண்டு கோட்டை

16ம் நூற்றாண்டு கோட்டை


இந்த கோட்டை 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது 9 மாடிகளைக் கொண்டதாகும். துரதிஷ்டவசமாக இன்று எதுவும் இல்லாமல் பாழாகி கிடக்கிறது. மேலும் இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக வழக்கம்போல கதைகள் கிளம்பியிருக்கின்றன.


PC: WMF

குல்தாரா

குல்தாரா

வெப்பம் தகிக்கும் தார் பாலைவனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் மணிமகுடம் என்று சொல்லப்படும் ஜெய்சால்மர் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் குக்கிராமமான இந்த குல்தாரா அமைந்திருக்கிறது.

முற்றிலும் சிதலமடைந்து காணப்பட்டாலும் இங்குள்ள வீதி அமைப்புகள் மற்றும் வீடுகளை பார்க்கும் போது நேர்த்தியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரை போன்றே இருக்கிறது. கோயில்கள், கிணறுகள், பொது மேடை போன்றவை இருக்கும் இந்த கிராமத்தில் 1825ஆம் ஆண்டுக்கு பிறகு மனிதர்கள் வசிக்கவே இல்லை. ஏன் தெரியுமா?

:Mirza Asad Baig

 மழையில்லாமலும் விவசாயம்

மழையில்லாமலும் விவசாயம்


1291ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கிராமம் தான் சுற்றுப்பகுதியில் உள்ள 84 கிராமங்களுக்கு தலைமை கிராமமாகவும் இருந்துள்ளது. மழை வளம் இல்லாத பகுதியாக இருக்கின்ற போதிலும் மிகப்பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றிருக்கிறது.

கிட்டத்தட்ட 7 நூற்றாண்டுகள் இந்த கிராமத்தில் வசித்த பிறகு ஒரே நாளில் தங்கள் மானத்தை இழக்க விரும்பாமல் குல்தாரா மட்டுமில்லாமல் அதை சேர்ந்த 84 கிராமத்தினரும் மூட்டை முடிச்சுகளுடன் இடத்தை காலி செய்திருக்கின்றனர்.

Chandra

 பங்கார்க்

பங்கார்க்

பாங்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா வனப்பகுதில் அமைந்திருக்கிறது.

இந்த பாங்கர் கோட்டை இந்தியாவில் இருக்கும் மிகவும் திகிலான இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில் மாலை நேரத்திற்கு பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கோட்டையை பற்றிய பல அமானுஷமான கதைகள் உலாவருகின்றன.

Shahnawaz Sid

 பாபா பாலநாத்

பாபா பாலநாத்


முன்னொரு காலத்தில் பாபா பாலநாத் என்ற சந்நியாசி இந்த கோட்டையினுள் சிறு வீடு ஒன்று கட்டி வாழ்ந்து வந்ததாகவும் அவர் தன்னுடைய வீட்டை விட பெரியதொரு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு அதன் நிழல் தன் வீட்டின் மேல் விழுந்தால் இந்த மொத்த கோட்டையுமே அழிந்துவிடும் என்று சாபமிட்டதாகவும் அதனாலேயே இங்கே யாரும் வாசிக்காமல் கோட்டையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

Hukum Negi

 மார்தாண்ட சூரியன் கோயில்

மார்தாண்ட சூரியன் கோயில்


மார்தாண்ட சூரியன் கோயில்

மார்த்தாண்ட சூரியன் கோயில் என்பது காஷ்மீரில் உள்ள மிகப் பழமையான கோயில் ஆகும். இது தமிழரால் கட்டப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. இதன் பெயரிலிருந்தே இதை அறிந்துகொள்ளமுடியும். எனினும் வழக்கமாக எல்லா கோயிலையும் இந்து கோயிலாக அறிவிக்கும் சிலர் இதையும் இந்து கோயில் என்றே பரப்பியுள்ளனர்.

Varun Shiv Kapur

8ம் நூற்றாண்டில்...

8ம் நூற்றாண்டில்...

மூன்றாம் லலிதாத்தியன் எனும் மன்னர் இந்த கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இரணாதித்யன் எனும் அரசனின் காலத்தில் துவக்கப்பட்டது இது. எனினும் இசுலாமிய ஆட்சியாளர் ஒருவரால் இது சிதைக்கப்பட்டு தன் பெருமையை இன்றும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.


John Burke

 கந்திக் கோட்டை

கந்திக் கோட்டை


ஆந்திரப் பிரதேச மாநிலம் பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இதற்கு கந்திக் கோட்டை என்று பெயர்.

இது மிகவும் அழகான பகுதிகளையும், கோயிலையும் ஒரு பக்கம் மசூதியையும் கொண்டுள்ளது. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது.

Vinay kumar malyam upadyaya

 பள்ளத்தாக்கு

பள்ளத்தாக்கு

கந்தி என்பதற்கு பள்ளத்தாக்கு என்று பொருள். இங்கு பாயும் பெண்ணாறு நதி, எர்ரா மலையில் குறுக்கே ஓடி பள்ளத்தாக்கை ஏற்படுத்துகிறது.

பாறைகளை வெட்டி, அவற்றை கைகளால் அடுக்கி வைத்தார்போல ஒரு கலை அம்சம் பொருந்திய காட்சியை இங்கு காணலாம். 1123ம் ஆண்டு பொம்மனபள்ளியில் மணலால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றை நிறுவினார் சாளுக்கிய மன்னரின் ஆதரவாளர் ஒருவர்.

Akanksha1811

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X