» »பற்றி எரிந்த மரம்... திருவாலங்காடு கோயிலில்... அப்படி என்னதான் இருக்கிறது

பற்றி எரிந்த மரம்... திருவாலங்காடு கோயிலில்... அப்படி என்னதான் இருக்கிறது

Written By: Udhaya

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் கோயில். ஆன்மீகம் என்ற அளவில் பார்ப்பதுமட்டுமில்லாமல், கட்டடக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது. இந்த கோயிலில் சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து திருவாலங்காடு எனும் சிவ தலத்தில் திடீரென தீ பற்றி எரிகிறது தல விருட்ச மரம். இந்த கோயிலில் அப்படி என்னதான் நடக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். வாருங்கள் இந்த கோயிலுக்கு செல்வோம்.

எங்குள்ளது

எங்குள்ளது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அமைந்துள்ளது இந்த ஊர். இது மிகவும் புகழ்பெற்ற திருத்தலமான திருவாலங்காடு வடாரண்யேசுவரர் ஆலயத்தைக் கொண்டுள்ளது.

இதன் அருகில் அரக்கோணம் மற்றும் திருத்தணி ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன.

Ssriram mt

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 16கிமீ தூரம் பயணித்தால் வருகிறது திருவாலங்காடு எனும் ஊர். இங்குதான் அந்த புகழ்பெற்ற வடாரண்யேசுவரர் ஆலயம் உள்ளது. இது திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம் என்னும் பெருமை கொண்டது.

Srithern

வழித்தடம்

வழித்தடம்

சென்னையிலிருந்து திருத்தணி அல்லது அரக்கோணம் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த ஊர் 2 மணி நேரத்தில் அடையும் வகையில் உள்ளது.

இங்கு மூன்று வழித்தடங்கல் செல்லுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.

இந்த வழியில் செல்லும்போது நீங்கள் புழல் ஏரி உள்ளிட்ட சில நீர்நிலைகளைக் காணமுடியும்.

திருவாலங்காடு வடாரண்யேசுவரர்

திருவாலங்காடு வடாரண்யேசுவரர்

இந்த கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் முக்கியமானதாகும். இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வேண்டிய அருள் தரும் கோயிலாகவும் இப்பகுதி மக்களால் பார்க்க்ப்படுகிறது.

Srithern

திருவிழா

திருவிழா

மார்கவி திருவாதிரை இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு சிவபெருமானின் அனைத்து விசேச தினங்களும் அனுசரிக்கப்படுகிறது. பங்குனி உத்திரம் இங்கு சிறப்பிக்கப்படும் நாளாகும். இங்கு நடைபெறும் ஐக்கியவிழாவும் தமிழின் பெருமையான காரைக்கால் அம்மையாருக்கு புகழ் பாடுவதாக அமைகிறது.

Ssriram mt

தலச் சிறப்பு

தலச் சிறப்பு


இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் எப்போதும் நடமாடும் ரத்தினசபை இங்குள்ளது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடமாகும். காரைக்கால் அம்மையாரை இறைவன் தாயே என்று அழைத்த தலம் இதுவாகும்.

Srithern

 ஆலமரக்காடு

ஆலமரக்காடு


அந்த காலத்தில் இந்த இடம் முழுவதும் ஆலமரக்காடு நிறைந்திருந்ததாக கூறுகின்றனர். இந்த கோயிலின் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8மணி வரை திறந்திருக்கும். இதன் அருகினில் இருக்கும் காளி கோயிலும் பக்தர்கள் அதிகம் வருகை தரும் இடம் ஆகும்.

Srithern

Read more about: travel chennai temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்