» »திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு புனித பயணம் செல்லலாம்?

திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு புனித பயணம் செல்லலாம்?

Posted By: Udhaya

நம்ம ஊர் கோயில்களில் பல்வேறு அறிவியல், வானியல் சார்ந்த விசயங்கள் நமக்கு தெரியாமலே இருந்துவருகின்றன.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று ஆரம்பித்து பல கட்டுரைகள் முகநூலிலும், கட்செவி எனப்படும் வாட்ஸ்ஆப்பிலும் வந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் நம் முன்னோர்கள் கோயில் கட்டும்போது அவர்களுக்கு தெரிந்த விஞ்ஞானத்தை பயன்படுத்தியுள்ளனர். அது இன்றுவரை தகர்க்கமுடியாத சாதனையாக இருக்கிறது என்பது தமிழர்களாகிய நமக்கு சிறப்புதானே.

அப்படி ஒரு கோயிலில் அடங்கியுள்ள வானியல், விஞ்ஞான சிறப்புகள் குறித்து காணலாம் வாருங்கள்.

 கோயில் முழுவதும் அறிவியல் புதிர்கள்

கோயில் முழுவதும் அறிவியல் புதிர்கள்

பார்க்க மைல் கல் மாதிரி இருக்கும் இந்த கல் உண்மையில் ஒரு காலச்சக்கரம். அதாவது மணி கடிகாரம்.

 சூரிய கடிகாரம்

சூரிய கடிகாரம்

மேன் வெர்சஸ் வைல்டு என்று ஒரு நிகழ்ச்சியில் பியர்ல் கிரில் என்பவர் சொல்லித்தான் இந்த சூரிய ஒளி கடிகாரம் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் நம் முன்னோர்கள் இந்த சூரிய கடிகாரத்தை வடிவமைத்துள்ளனர்.

 எப்படி செயல்படுகிறது

எப்படி செயல்படுகிறது

இந்த கடிகாரத்தின் வடிவம் கல்லின் மேல் அரைவட்டம் வரைந்தார்போல இருக்கும். அரை வட்டத்தின் நடுவில் ஒரு குச்சியை வைத்தால் சூரிய ஒளி பட்டு அந்த கல்லில் நிழல் விழும். நிழல் விழும் பகுதியை 12 ஆக பிரித்து நேரத்தைக் கணக்கிட்டுள்ளனர்.

 அதிசய கிணறு

அதிசய கிணறு

அறுங்கோண வடிவில் ஆறு பக்கமும் படிக்கட்டுகள் கொண்டு ஒரு பெரிய கிணறு போல இருந்த இது தற்போது புற்கள் வளர்ந்து காணப்படுகிறது.

 சிங்கத் தீர்த்தம்

சிங்கத் தீர்த்தம்

சிங்கமுகம் கொண்ட அமைப்பு வழியாக சென்றால் சிறய பாதை கொண்ட கிணறு ஒன்று வரும். இதுதான் சிங்க தீர்த்தம். இதன் அற்புதம் என்னனு தெரியுமா?

 குழந்தைப் பேறு நிச்சயம்

குழந்தைப் பேறு நிச்சயம்


இந்த கிணற்றில் கார்த்திகை மாதம் கடைசி சனி, ஞாயிறுகளில் குழந்தை பேறு இல்லாதவர்கள் சென்று குளித்தால் கண்டிப்பாக குழந்தை உண்டாகும் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது.

 மற்ற மர்மங்கள்

மற்ற மர்மங்கள்


இங்கு பலவிதமான அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றை சிலையாக வடிவமைத்து வைத்துள்ளனர். அவற்றின் பொருள் என்னவென்று தெரியவில்லை என்றாலும் கட்டிடக்கலைக்காக கண்டுகளிக்கலாம்

 மண்டபங்கள்

மண்டபங்கள்

இந்த கோயிலின் அழகே இதன் மண்டபங்கள்தான். அப்படி ஒரு செதுக்கல். காண்போரை எளிதில் மயங்கச்செய்யும் அழகு.

 சிற்பக் கலை

சிற்பக் கலை


யாழி தன் தலையில் தாங்கும் தூண்கள், குதிரை வீரனை உக்கிரத்தோடு தாக்கும் சிங்கம், மதம் கொண்ட யானையுடன் மல்லுக்கட்டும் பாகன் இன்னும் பல என அனைத்தையும் கூர்மையாக கவனிக்கனும்.

 மண்டபத்துக்குள் மண்டபம்

மண்டபத்துக்குள் மண்டபம்

இந்த கோயிலின் மண்டபத்துக்குள் இன்னொரு மண்டபம் மாதிரியான அமைப்பு உலகில் எங்கேயும் இல்லையாம். அப்படி ஒரு சிறப்பு இந்த மண்டபத்துக்கு.

 அதிசய பனைமரம்

அதிசய பனைமரம்

இந்த கோயில் வளாகத்துக்குள்ள அதிசய பனைமரம் இருக்கிறது. இது ஒரு வருடம் காய்களை கறுப்பாகவும், மறு வருடம் வெள்ளையாகவும் காய்க்கிறது என்று கூறப்படுகிறது.

 கருவறையில் இயற்கையாக எழுந்த ருத்ராட்சம்

கருவறையில் இயற்கையாக எழுந்த ருத்ராட்சம்

கருவறையில் இயற்கையாக எழுந்த ருத்ராட்ச பந்தல் இருக்கு. இது இயற்கையாக எழுந்ததாக கோயில் நிர்வாகம் சொல்லகிறது.

 வழித்துணை நாதர்

வழித்துணை நாதர்

இந்த கோயிலின் இறைவன் வழித்துணை நாதர் என்று அழைக்கப்படுகிறார்.

 டைம் மெஷின் எனப்படும் கால இயந்திரம்

டைம் மெஷின் எனப்படும் கால இயந்திரம்

கால இயந்திரத்தின் நுழைவு வாயில் போல அமைந்திருக்கும் மண்டபத்தின் அமைப்பு இன்னும் இங்கு மர்மங்களை குவித்து வைத்துள்ளது. அறிவியலாளர்கள் கூட குழம்பி செல்லும் இந்த கோயில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

 சோழர்கள் கால கோயில்

சோழர்கள் கால கோயில்

13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர்கால கோயில் வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சி புரத்தில் உள்ளது.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்