» »நம்ம ஊரு பக்கத்திலேயே நமக்கு தெரியாம ஒரு அருவி இருக்கு போலாமா?

நம்ம ஊரு பக்கத்திலேயே நமக்கு தெரியாம ஒரு அருவி இருக்கு போலாமா?

Written By: Udhaya

இந்தியா ஆன்மீகத்துக்கும் சுற்றுலாவுக்கும் சிறந்த இடம். இரண்டும் ஒருசேர கிடைப்பது குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

அப்படி மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லும் குழந்தைகள் முதல், மன அமைதிக்காக சுற்றுலா செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த இடங்கள் இந்தியாவில் பல இருக்கின்றன. ஆனால் யாருக்கும் தெரியாத, அல்லது அதிகம் அறிமுகம் இல்லாத இடங்களுக்கு உங்களை கட்டுரையின் மூலம் அழைத்துச் செல்கின்றோம்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆந்திரமாநில சித்தூர் மாவட்டத்திற்குதான். அங்குள்ள கைலாசகோனா என்னும் சுற்றுலாத்தளத்திற்கு செல்வோம் வாருங்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது

இந்த கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் வேலூர் நகருக்கு அருகிலுள்ள கைலாசகோனா எனுமிடத்தில் உள்ளது.

 சக்திவாய்ந்த கோயில்

சக்திவாய்ந்த கோயில்

இந்த பகுதியில் இருக்கும் கோயில் மிகவும் சக்திவாய்ந்ததாகும். பெரும்பாலும் அநேக பேரால் அறியப்படாத சுற்றுலாத் தளமாகும்.

சிவலிங்கம்

சிவலிங்கம்

இந்த கோயிலில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது.

நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி


இந்த நீர்வீழ்ச்சி கைலாசகோனா மலைப்பகுதியிலிருந்து வருகிறது. மிக மிக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர் என்பதால் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து மகிழ சிறந்த இடமாகும்.

 வீரபத்திர சாமிகள்

வீரபத்திர சாமிகள்


இங்கு வீரபத்ர சாமிகளின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சுத்தமான நீர்நிலை

சுத்தமான நீர்நிலை

இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஓடும் ஆறு மிகவும் சுத்தமான நீரைக் கொண்டுள்ளது. தெள்ளத்தெளிவான மாசற்ற நீர் இது.

 மூலிகைத்தன்மை

மூலிகைத்தன்மை

இந்த நீர் மூலிகைத் தன்மை கொண்டது. இதை அறிந்துவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

 ஆர்ப்பரிக்கும் அருவி

ஆர்ப்பரிக்கும் அருவி

ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர் பார்ப்பதற்கு நல்ல காட்சியாக உள்ளது. கோடைக்காலத்தில் அதிகமாக நீர் இருப்பதில்லை. எனவே உறுதி செய்தபின்னர் பயணித்தல் சிறந்தது.

 புராணங்களின் படி,

புராணங்களின் படி,

வெங்கடேஷ்வரா, பத்மாவதி திருமணத்துக்கு வந்த கைலாசநாதர் இந்த அருவியாய் மாறி இங்கேயே அமர்ந்துவிட்டாராம்.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


சென்னை புறநகரிலிருந்து சோழவரம் வழியாக, ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்திலிருந்து , கைலாசகோனாவை அடையலாம்.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இதன் அருகில் தடா நீர்வீழ்ச்சி, திருத்தணி முருகன் கோயில், திருப்பதி கோயில், காளகஸ்திகோயில் ஆகியன உள்ளன.

Please Wait while comments are loading...