» »சனியின் பார்வையை பலனாக மாற்றும் சனி சாந்தி ஹோமம் - உடனே செல்லுங்கள்

சனியின் பார்வையை பலனாக மாற்றும் சனி சாந்தி ஹோமம் - உடனே செல்லுங்கள்

Written By: Udhaya

சனியின் பார்வை பட்டால், கஷ்டகாலம் தொடங்கிவிடும் என்பதே பலரது எண்ணம். காலத்திலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அந்த சனி நம்மை ஆட்கொள்கிறது. நம்மை படாத பாடு படுத்தி, நஷ்டங்களையும் உண்டாக்கி, குடும்பத்தில் சச்சரவுகளை தோற்றுவித்து, நம்மை ஒரு வழி ஆக்கிவிடும். கல்வியில் மந்தம், தொழில் விருத்தியின்மை, மிகப் பெரும் நஷ்டம் என உங்களை தளரச் செய்துவிடும். ஆனால் அதற்கும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. சனியின் பாதிப்பை பலனாக மாற்ற சனிக்கிழமை நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பங்கெடுங்கள். பத்தும் பறந்து போய்விடும்.

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

 எங்கே நடைபெறுகிறது

எங்கே நடைபெறுகிறது

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமை, சனி கிரக ப்ரீதிக்காக சனி சாந்தி ஹோமம் நடந்து வருகிறது. நாளை 03.03.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சனி கிரக தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி பீடம். சென்னை - திருப்பெரும்புதூர் - காஞ்சிபுரம் வழியாக ராணிப்பேட்டை தாண்டி இந்த இடத்தை அடையலாம்.

112கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு 2.45 மணி நேரங்கள் ஆகின்றன.

சிறப்பு

சிறப்பு

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 27 நட்சத்திரங்களுக்கும், 9 நவகிரகங்களுக்கும், விருட்சங்கள் கொண்டு காலச்சக்ர கோயிலாக அமைத்து, இயற்கை வளத்திற்காகவும், விவசாய நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும், பக்தர்களின் தேவைக்காக, தினசரி விருட்சங்களுக்கு விருட்ச பூஜையுடன் நட்சத்திர நவகிரக சாந்தி பூஜைகள் நடைபெறுகிறது.

பரிகாரங்கள் பலன்கள்

பரிகாரங்கள் பலன்கள்

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தின் தடைகள் பெரிதும் பாதிக்கிறது.

சனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்க

சனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்க

பெரும்பாலான ஜாதகருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரம் நடைபெறும் பொழுது பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகி வருகின்றனர்.

PC: E.A.Rodrigues

யாகத்தில் சேர்க்கப்படும் பொருள்கள்

யாகத்தில் சேர்க்கப்படும் பொருள்கள்


யாகத்தில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்ல எண்ணை, வெல்லம், வன்னி சமித்து, நாயுருவி, கறுப்பு திரட்சை போன்ற பல பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், பைரவருக்கும், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் சிறப்பு பூஜையும் நடைபெறும்.

கடவுளர்கள்

கடவுளர்கள்


அருள்மிகு லட்சுமி விநாயகர், பாலமுருகன், குழந்தை ஆனந்த சுவாமிகள். ஷேசாத்ரி சுவாமிகள், சூரிய சந்திரர்கள், புத்தர், குருநானக், ரமண மகரிஷி ஆகியோர் இங்கு இருக்கும் முக்கிய கடவுளர்கள் ஆவர்.

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை


வேலூர் நகரத்தின் அடையாளமான வேலூர் கோட்டை வேலூர் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே இந்த வரலாற்றுச்சின்னம் பெருமையுடன் வீற்றிருக்கிறது. இந்திய தொல்லியல் துறையில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் கீழ் இந்த கோட்டை பாதுகாக்கப்படுகிறது. ஜலகண்டேஷ்வரர் கோயில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், முத்து மண்டபம், புகழ் பெற்ற வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனை மற்றும் மாநில அரசு அருங்காட்சியகம் போன்றவை இந்த கோட்டை வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.

Chandrachoodan

 வள்ளிமலை

வள்ளிமலை

வேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரத்தில் இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. வள்ளிமலைக்கோயில் முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் தலத்தில் மஹாவிஷ்ணுவின் இரண்டு புத்திரிகளான வள்ளியும் தேவயானையும் சாத்வீக குணம் கொண்ட கணவர்களை அடைய விரும்பி துதித்ததாகவும் இறுதியில் இருவரும் முருகப்பெருமான மீதே காதல் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

Sreenivas101

பாலமதி

பாலமதி

பாலமதி எனும் இந்த ஊர் இங்குள்ள பாலமுருகன் கோயிலுக்காக புகழ் பெற்றுள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலையுச்சியில் அமைந்துள்ள இந்த கிராமம் வேலூரிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.

கண்கவரும் இயற்கை அழகும் அமைதியான சூழலும் நிரம்பிக்காட்சியளிக்கும் பாலமதி ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமாக அதே சமயம் அவ்வளவாக பிரபலமாகாமல் அமைந்துள்ளது. வேலூர் பகுதியின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பயணிகள் இந்த மலை நகரத்துக்கு விஜயம் செய்யலாம்.

Dsudhakar555

Read more about: travel, temple