» »பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

LATEST: ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா?

வீரபத்ர சுவாமி கோயில் தெரியுமா? அதாங்க.. 70 தூண்கள்ல ஒரே ஒரு தூண் மட்டும் தொங்கிட்டு இருக்குணு சொல்வாங்களே.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் எனும் ஊரில் உள்ளது இந்த லேபட்சி. லேபக்ஷி எனும் சமக்கிருதப்பெயருடைய இந்த ஊரில் அமைந்துள்ளது மிகவும் சக்தி வாய்ந்த வீரபத்ர சுவாமி கோயில்.

இந்த கோயிலின் கட்டிடக் கலை மிகவும் சிறப்பாக பேசப்பட்டுவருகிறது. காரணம் அங்குள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் அந்தரத்தில் தொங்குகிறது. அதாவது தரையுடன் தொடர்பு இல்லாமல் அந்தரத்தின் பிடியில் மட்டும் இருக்கிறது.

இந்த அதிசயத்தை குறித்து பார்ப்பதற்கு முன், உங்களுக்கெல்லாம் தெரிந்திராத ஒரு ஆச்சர்யம் கலந்த உண்மையை சொல்லவா?

பிரிட்டிஷ் காரரை ஒட விரட்டிய தூண்

இந்த தூணின் மர்மம் பற்றி அறிய பிரிட்டிஷ் பொறியாளர் ஒருவர் இதன் அறிவியலை ஆய்வு செய்யவந்துள்ளார்.

Magentic Manifestations

ஆய்வு தொடங்கிய பிரிட்டிஷ் பொறியாளர்

ஆய்வு தொடங்கிய பிரிட்டிஷ் பொறியாளர்


அதில் தூணின் இந்த நிலைக்கு காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முயன்று முடியாமல், பின் இந்த தூணை சீரமைக்க முடிவு செய்துள்ளார். அதன்பிறகு ஆங்கிலேய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சீரமைப்பு பணிகளைத் தொடங்க நினைத்திருந்தார்.

Reddy Bhagyaraj

விரக்தியுடன் கைவிட்ட பொறியாளர்

விரக்தியுடன் கைவிட்ட பொறியாளர்

என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த பொறியாளர் அதன்பின் துண்டைக் காணும் துணியைக் காணுமென்று ஊரைவிட்டே ஓடிவிட்டார்.

சிலர் அவர் பணியிடமாறுதல் பெற்று சென்றதாகவும், இன்னும் சிலர் அவர் கோயிலில் தங்கியிருந்தபோது ஏதோ அசரீரீ கேட்டு மிரண்டுதான் ஓடிவிட்டார் என்று கூறுகின்றனர்.

Pp391

3 ஆண்டுகால உழைப்பு

3 ஆண்டுகால உழைப்பு

மூன்று ஆண்டுகாலம் இந்த ஆய்வு மற்றும் சீரமைப்பு பணியில் இருந்தார் அந்த பொறியாளர். கடைசியில் எந்த பயனும் இன்றி ஆகிவிட்டது. அவர் எதற்காக சென்றார் என்ற காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

రహ్మానుద్దీన్

வரலாறு

வரலாறு

வீரபத்ர சுவாமி கோயிலின் வரலாற்றையும் கொஞ்சம் பார்க்கலாம். இந்த கோயிலுக்கு சுற்றுலா செல்வதற்கு முன் நீங்கள் இதை தெரிந்துகொண்டு போகலாமே.

விஜயநகரபேரரசின் ஆட்சிகாலத்தில் வீரண்ணா மற்றும் விருப்பண்ணா ஆகியோர் இந்த கோயிலைக் கட்டினர்.

Bikashrd

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!

இந்த கோயிலில் இருக்கும் தெய்வங்கள்

இந்த கோயிலில் இருக்கும் தெய்வங்கள்

இந்த கோயிலில் சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்ரர் ஆகியோர் ஆட்சி செய்துவருகின்றனர்.

உங்களுக்குத் தெரியுமா மலைக்கோட்டையின் 1080 வருட ரகசியம் என்னவென்று?

நந்தி

நந்தி

இந்த கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 8.23மீ நீளமும், 4.5மீ உயரமும் கொண்ட நந்தி அமைக்கப்பட்டுள்ளது.

P. L. Tandon

போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது

ராமாயணம் மகாபாரதம்

ராமாயணம் மகாபாரதம்


இந்த கோயிலின் சுற்று சுவர்கள் ராமாயண, மகாபாரதத்தை முன்மாதிரியாக கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tarun R

 அனுமனின் கால்தடம்

அனுமனின் கால்தடம்

சீதையின் சிலை அருகே அனுமனின் கால்தடம் இருப்பதை காணலாம்.

Indi Samarajiva

ராமன் இலங்கைக்கு சென்றபோது

ராமன் இலங்கைக்கு சென்றபோது

ராமன் அயோத்தியிலிருந்து இலங்கைக்கு சென்றபோது இங்கு வந்து சென்றாக நம்பிக்கை நிலவுகிறது.

Indi Samarajiva

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருப்பதியிலிருந்து 220 கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்துக்கு போக 5 மணி நேரம் எடுக்கும். திருப்பதியிலிருந்து இந்துபூருக்கு நேரடிப் பேருந்தும் உள்ளது.

பெங்களூரிலிருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அனந்தப்பூரிலிருந்து 124கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் இந்துப்பூர் 14கிமீ.

படையெடுக்கும் பக்தர்கள்

படையெடுக்கும் பக்தர்கள்

லே-பட்சி பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில், எத்தனையோ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதனால் இந்த கோயில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

அகத்தியர் கட்டிய கோயில்கள்

அகத்தியர் கட்டிய கோயில்கள்

லே-பட்சி பகுதி கோவில்களுக்கும், ராமாயண இதிகாசத்திற்கும், நிறைய தொடர்பு இருக்கிறது. அதிலும் இந்த கோயில்களை அகத்திய முனிவர் கட்டியது என்றும் கூறப்படுகிறது.

Vishal Prabhu

இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

ராமன் சொன்ன அந்த வார்த்தை

ராமன் சொன்ன அந்த வார்த்தை

ராமன் இலங்கை நோக்கி செல்கையிலே, இந்த இடத்துக்கு வந்ததாகவும், இந்த பகுதியில் நின்று அந்த வார்த்தையை சொன்னதாகவும் அதுதான் பிற்காலத்தில் இந்த பகுதியின் பெயரானதாகவும் கூறுகின்றனர்.

Vijay Krishna

வெறும் 3111 ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விலைபோன ஊரின் கதை தெரியுமா?

வரலாற்று சுற்றுலா

வரலாற்று சுற்றுலா

இதன் அருகில் பல இடங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.

லேபட்சி கோயில்

இது பழங்கால கோயில் ஆகும். விஜயநகர கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. மூன்று கடவுளர்கள் இருக்கின்றனர்.

Nagarjun Kandukuru

மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் என்று தெரியுமா ??

வீரபத்ர கோயில்

வீரபத்ர கோயில்


கோபம் கொண்ட சிவனையே வீரபத்திரர் என்கிறார்கள் இந்து சமயத்தினர். லேபட்சி கோயிலின் அருகிலேயே வீரபத்ர கோயில் அமைந்துள்ளது.

Nagarjun Kandukuru

என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? அப்போ இங்க போங்க

நந்தி கோயில்

நந்தி கோயில்

இந்த நந்தி கோயில் வீரபத்ர கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இது ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட நந்தி. தொடர்ந்து வளர்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

Nagarjun Kandukuru

மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் என்று தெரியுமா ??

ஷாப்பிங் செய்யலாம் வாங்க

ஷாப்பிங் செய்யலாம் வாங்க

கைவினை பொருள்களுக்கு மிகவும் சிறந்த சந்தையாக லேபட்சி விளங்குகிறது. உடலில் அனைத்து பாகங்களுக்கும் அணியும் ஃபேன்சி அணிகலன்கள் , கயிறுகள் என நிறைய இங்கு கிடைக்கின்றன.

வெறும் 3111 ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விலைபோன ஊரின் கதை தெரியுமா?

வெறும் 3111 ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விலைபோன ஊரின் கதை தெரியுமா?

மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் என்று தெரியுமா ??

என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? அப்போ இங்க போங்க

ஜென்ம நட்சத்திரம்... இன்று நீங்க போக வேண்டிய கோவில் இதுதான்!

பெங்களூர்- கன்னியாகுமரி ஒரு சூப்பர் டூர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா? இத படிங்க

Read more about: travel, temple