
சுற்றுலா என்பது நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு ஒரு அரிய பொக்கிஷம் ஆகும். இந்த திருமணம் என்ற ஒன்று நமக்கு முடிந்துவிட்டால் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என்று கருதும் நபர்களா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன்னாடியே இங்கெல்லாம் போய்ட்டு வாங்க... ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடறமாதிரியா உங்களுக்கு.. அப்போ நீங்கதான் இந்த சாகசங்களுக்கு செல்ல ஏத்த ஆளு.. வாங்க வாங்க வண்டி கெளம்பபோகுது....

ராஜஸ்தான் பாலைவன முகாம்
ராஜஸ்தான் பாலைவனத்தில் முகாமிட்டு நண்பர்களுடன் வாழ்க்கையை மகிழ்ச்சி படுத்துங்கள்
PC:Timeflicks

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம்
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுத்தமான காற்றையும், இயற்கையையும் கண்குளிர பார்த்துவிட்டு வாருங்கள்
Pc: Rajkumar1220

தூத்சாகர் மலையேற்றம்
தூத்சாகர் மலையில் ஒரு மலையேற்ற பயிற்சி மேற்கொண்டு வாழ்வை வளமாக்குங்கள்
PC: Karthicknarayana

பந்திபூர் காட்டில் ஒரு சாகச டிரைவிங்
புலி, கரடி நிறைந்த பந்திபூர் காட்டில் ஒரு சாகச டிரைவிங் செய்து மனமகிழுங்கள்
PC: Manoj K

சிரபுஞ்சி வாழும் பாலம்
சிரபுஞ்சியில் இருக்கும் வாழும் மரப்பாலம் கண்டு மகிழுங்கள்.
Pc: 2il Org

நீலகிரியில் ஒரு மிதிவண்டி பயணம்
நீலகிரி சென்று இரண்டு நாள்கள் கொண்டாடி மகிழுங்கள். அங்கு மிதிவண்டி பயணம் செய்து நண்பர்களுடன் கொண்டாடுங்கள்
Pc: Natataek

கோவாவில் இரவு விருந்து
முன்கூட்டியே திட்டமிட்டு சென்று கோவாவில் இரவு விருந்து கண்டிப்பாக நடத்துங்கள். உங்கள் நண்பர்களுடன் மூன்று நாட்கள் பொழுது போக்குங்கள்
Pc: Jorge Royan

குடியரசு தினத்தன்று தில்லியில்
குடியரசு தினத்தன்று தில்லிக்கு சென்று நாட்டுப்பற்றை வலியுறுத்தும் நிகழ்வுகளை காணுங்கள். நாட்டுக்காக தியாகங்கள் செய்த நம்மவர்களை நெஞ்சார பாராட்டுங்கள். எல்லையில் ராணுவ வீரர்கள்... விடுங்க அது வேற டாபிக்...
PC: Haeb

லெஹ்-மணாலி பாதை பைக் ரைடிங்
லெஹ்-மணாலி பாதை பைக் ரைடிங் சென்று பாருங்கள்.. முதலில் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டு செல்லவும்.
PC:Ashoosaini2002

ரத்னகிரி செல்லும் ரயிலில் பயணம்
ரத்னகிரி செல்லும் ரயிலில் பயணம் செய்யுங்கள். வழியில் தெரியும் பச்சை பசுமைகளை இளையராஜா துணையோடு பாடிக்கொண்டே செல்லுங்கள்.. ஆடிப்பாடி அனுபவியுங்கள்
ரெண்டும் சேர்ந்து பண்ணா மூச்சி வாங்கும்..தனித்தனியாவே செய்யுங்கள்.
PC:Altafaivi

ஒரு மலையின் மீது த்ரில் பயணம்
ஒரு மலையின் மீது த்ரில் பயணம் செல்லலாம். வாழ்க்கையை அனுபவித்து ரசியுங்கள்.
அதுக்காக அயன் பட கிளைமேக்ஸ் மாதிரி சீன் போடுறேன்னு ஆபத்தில் சிக்கிக்கொண்டால் கம்பெனி பொறுப்பாகுது..
Pc: Yogeshgupta

சோலாங்கில் பாரா கிளைடிங்
சோலாங்கில் பாரா கிளைடிங் சென்று இன்னொரு ஆங்கிள் ல மேலே இருந்து கீழே பாருங்கள்.
அப்பத்தாவும் நாரதரும் கைக்குலுக்கினது தெரிந்தால் கீழே வந்துவிடவும்..
PC: Anil1956

கோவா குவாட் வண்டியோட்டுதல்
வர்லாம் வர்லாம் வா பைரவா எனுமாறு கோவா குவாட் வண்டியோட்டுதல்..
ஸ்டைல்லா... கெத்தா ஒரு ரைடிங்...
Pc: peter ellis
https://commons.wikimedia.org/wiki/File:Quad-bike-2wheel-trick.JPG

லடாக் எருது சவாரி
லடாக் எருது சவாரி ..
PC:Pongratz

ரூப்குண்ட்டில் ஒரு மலையேற்றம்
ரூப்குண்ட்டில் ஒரு மலையேற்றம் செய்து பாருங்கள்.
ஆர்வக்கோளாறில் பியர் கிரில்ஸ் வீடியோ பாத்துட்டு கவிழ்ந்து விழுந்து கைகால் போய்டிச்சினா நாங்க பொறுப்பில்ல என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
PC: Schwiki