» »அடடா.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுற்றுலாவை மறந்துட்டோமே!

அடடா.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுற்றுலாவை மறந்துட்டோமே!

Written By: Udhaya

மழை பெய்வதென்பது வரம் தான். என்றாலும் சில இடங்களில்தான் மழை பெய்கிறது. தமிழகத்தின் பிற இடங்களில் வெயில் தான் வதைக்கிறது.

இந்த புதுவருடத்தில் நீங்கள் செல்லவேண்டிய இடங்களாக நீர்வீழ்ச்சிகளையும், ஆறுகளையும் இந்த பகுதியில் சுட்டிக்காட்டி வருகிறோம்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது பைக்காரா மற்றும் கல்லட்டி நீர்வீழ்ச்சி மேலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள், போகும் நேரம், செலவு பற்றியும் பார்க்கலாம்.

சென்னையிலிருந்து....

சென்னையிலிருந்து....

பைக்காரா நீர்வீழ்ச்சி ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் பகுதியில் அமைந்துள்ளது. இது ஊட்டியிலிருந்து 45 நிமிடத்தொலைவில் அமைந்துள்ளது. அதாவது 22 கிமீ தொலைவு. சென்னையிலிருந்து ஊட்டிக்கு தோராயமாக, சாலை அல்லது ரயில் வழித்தடத்தில் 10 மணி நேரம் ஆகலாம். விமானத்தில் 1 மணி நேரத்தில் கோயம்புத்தூர் வந்தடைந்து அங்கிருந்து 1 மணி நேரத்தில் ஊட்டியை அடையலாம்.

இந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் தெரியுமா?

கோவையிலிருந்து...

கோவையிலிருந்து...

உங்கள் இருப்பிடத்திலிருந்து கோவைக்கு வரும் நேரத்தை கணித்துக் கொள்ளுங்கள். கோவையிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பினால் 10 மணிக்கெல்லாம் ஊட்டியை அடைந்துவிடலாம்.

காலை சிற்றுண்டி

காலை சிற்றுண்டி

காலை உணவை ஊட்டியில் கழித்துவிட்டு, அங்கிருந்து பைக்காரவை நோக்கி புறப்படலாம். முடிந்த வரை விடிந்தவுடன் பயணிப்பது நல்லது. சில நேரங்களில் மழைப்பொழிவு இருக்கலாம்.

Prof tpms

ஊட்டியிலிருந்து பைக்காரா

ஊட்டியிலிருந்து பைக்காரா

ஊட்டியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 181ஐத் தொடர்ந்து சென்றால் பைக்காரவை அடைந்துவிடலாம். 22 கிமீ தொலைவில் உள்ள பைக்காராவை அடைய குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் எடுக்கலாம்.

பைக்காரா உங்களை அன்புடன் வரவேற்கிறது

பைக்காரா உங்களை அன்புடன் வரவேற்கிறது

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

பைக்காராவை அடைந்தவுடன் உங்களுக்கு முதலில் காண விளைவது ஏரியைத்தான்.
இயற்கை எழில் கொஞ்சும் அந்த ஏரி உங்களை தன்னுள் வா என அழைக்கும்.

என்னுள் வந்து படகு சவாரி செய் என கட்டளையிடும். இயற்கையின் பாதங்களில் அடிமையாய் கிடந்தாலும் சொர்க்கம் வந்து சேரும் என உங்களை மூளைச் சலவைச் செய்யும் அந்த ஏரி.

KARTY JazZ

படகு சவாரி

படகு சவாரி

படகு சவாரி என்றாலே குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அலாதி ஆசைதான். பயப்படாதே .. நான் உன் அபிமானிதான் என ஏரியின் குரல் உங்கள் மனதிற்குள் விழும். மயங்கி விடாதீர்கள் அவளை விட அழகில் சிறந்தவள் என்று இன்னொரு குரல் அருகிலிருந்து கேட்கும்..

Prof tpms

பைக்காரா நீர்வீழ்ச்சி

பைக்காரா நீர்வீழ்ச்சி

ஆர்ப்பரிக்கும் ஆற்றலுடன் ஏஆர் ரஹ்மானின் இசையில் இளையராஜாவின் சுவையைக் கலந்து தேவாவின் தாளங்களைப் போல் ஆரவாரம் செய்யும் பைக்காரா நீர்வீழ்ச்சி உங்களை கன்னிப்பார்வையில் விழுங்கிவிடும்.

NatarajanA

அழகியல் நீர்வீழ்ச்சி

அழகியல் நீர்வீழ்ச்சி

கன்னிப்பெண் நீர் முழுகி பின்புறமாய்த் திரும்பி நின்று தலைவிரித்தாடும் அழகைப் போல, மலையழகி தன் பின்புற கூந்தலில் நீராய் பாய்வதுபோல் நீர்வீழ்ச்சியின் அழகியல் சொல்லில் அடங்காதது. நேரில் காணுங்கள் உங்களுக்குப்புரியும்.

Satheeshkumar K

கல்கட்டி நீர்வீழ்ச்சி

கல்கட்டி நீர்வீழ்ச்சி

பைக்காராவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கல்கட்டி நீர்வீழ்ச்சி. இங்கு செல்ல 50 நிமிடங்கள் வரை ஆகலாம்.

 100 அடியாம்

100 அடியாம்

கல்கட்டி நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 100 அடி உயரம் கொண்டது. கல்கட்டி வளைவுகளில் ஆர்பரித்து ஊட்டியின் 13 கிமீ வரை ஓடும் ஆறு கொண்ட அற்புத நீர்வீழ்ச்சி இது.
Vinayak Kulkarni

விலங்கினங்கள்

விலங்கினங்கள்

இங்கு காட்டு நாய்கள், புள்ளி மான்கள், சாம்பார் மான்கள், பல்வேறு வகையான பறவைகள் என நிறைய காணலாம்.

N. A. Naseer

மேலும் சில இடங்கள்

மேலும் சில இடங்கள்

ஊட்டி ஏரி, மான் பூங்கா, கலை காட்சியகம், அரசு பூங்கா அருங்காட்சியகம், தொட்டபெட்டா, கோவைக் குற்றாலம் என பல அருமையான தருணங்களை தவற விடாதீர்கள். இப்போதே பயணியுங்கள். மனதிற்கு குளுமையும், உடலுக்கு ஓய்வும் தரும் ஊட்டி மலை பயணத்திற்கு...

Read more about: travel, tour