» »அஸ்ஸாமில் உள்ள பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு செல்வோமா?

அஸ்ஸாமில் உள்ள பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு செல்வோமா?

Written By: Udhaya

காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும், கிழக்கில் நாகலாந்து மற்றும் மணிப்பூரையும் தெற்கில் மிஜோரத்தையும் தனது அண்டை மாநிலங்களாக கொண்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் காட்டுயிர் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவை அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலா செயல்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள தேசியப்பூங்காக்கள் பல அரியவகை காட்டு உயிரினங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சாகச பொழுது போக்கு அம்சங்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன. வாருங்கள் ஒவ்வொன்றாக சென்று வருவோம்

புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம்

புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம்

புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம் பிரம்மபுத்ரா நதியின் தெற்கு கரையோரத்தில் சுமார் 44.06 சதுர கி.மீ. பரப்பளவுடன் காணப்படுகிறது. சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது, லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வளமான சுற்றுச்சூழல் மண்டலத்துக்காக பெரிதும் அறியப்படுகிறது.

சொல்லப்போனால், இவ்விரண்டு சரணாலயங்கள் மட்டுமே இரு பெயர்களில் வழங்கப்படும் ஓரே அமைப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளன.இந்த சரணாலயம் ஈரமான வண்டல் மேய்ச்சல்வெளிகளில் ஆங்காங்கே தென்படும் பச்சை மரங்களைக் கொண்ட காடுகளுடன் காட்சியளிக்கிறது.

Diganta Talukdar

காணப்படும் விலங்குகள்

காணப்படும் விலங்குகள்

வங்காள ஃப்ளோரிகன் மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயத்தின் சிறப்பு அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

புலிகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் சிறு மான்கள் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணலாம். யானைகள் எப்போதாவது கண்ணில் தென்படுகின்றன.

புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகாமையில் உள்ள நகரம், இதிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஸ்பூர் நகரமே ஆகும்.

குவாஹத்தி, இச்சரணாலயத்திலிருந்து சுமார் 160-200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வருவதற்கு உகந்த காலகட்டம் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.

Djambalawa

லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம்

லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம்

மேன்மை பொருந்திய பிரம்மபுத்ரா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், லாவ்கோவா-புரச்சாபோரி சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது அஸ்ஸாமின் நாகயோன் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், காண்டாமிருகங்கள் மற்றும் காட்டெருமைகளின் இயற்கையான வாழ்விடமாகத் திகழ்கிறது. இவ்விரண்டு மிருகங்களுக்கும் அப்பாற்பட்டு, சுற்றுலாப் பயணிகள், சிறு மான்கள், புலி, சிறுத்தை பூனை, யானை, மீன்பிடி பூனை, புனுகு பூனை போன்ற இதர மிருகங்களையும் காணலாம்.

T. R. Shankar Raman

பறவையினங்கள்

பறவையினங்கள்


இந்த சரணாலயத்தில் 225 -க்கும் மேற்பட்ட பறவை வகைகளும் காணப்படுகின்றன. இது சுமார் 39 வகை மீன்கள், 9 வகை நிலநீர்வாழ் உயிரினங்கள், 14 வகை ஊர்வன ஆகியவற்றின் இனப்பெருக்க மையமாகவும் செயலாற்றி வருகிறது. லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்திற்கு செல்ல ஏதுவான காலம் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலமேயாகும். சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகயோன் நகரமே இச்சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள நகரமாகும். நாகயோனின் மாவட்டத் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாஹத்தி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போக்குவரத்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

Bassem 18

ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம்

ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம்


ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம், இயற்கை அபிமானிகளுக்கு சிறப்பான விருந்தளிப்பதாகத் திகழ்கிறது. இங்கு, சில அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை காணலாம்.

பாலூட்டிகளான சீன எறும்புதின்னி, பறக்கும் நரி, மெதுவாகச் செல்லும் பாலுண்ணி வகை பிராணி, அஸ்ஸாமீஸ் குரங்கு, ரீசஸ் குரங்குகள், தொப்பித் தலை குரங்கு, ஹூலாக் குரங்கு, காட்டுப்பூனை, சிறுத்தை பூனை, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, சாம்பார் மான்கள், குரைக்கும் மான், காட்டெருது மற்றும் முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும், சிறிய நாரை, பெருநாரை, வெள்ளை பின்புறத்தை உடைய பருந்து, ஒல்லியான அலகுடைய பருந்து, காலீஜ் காட்டுக்கோழி, பச்சை இம்பீரியல் புறா மற்றும் பல வண்ணங்களாலான சிறிய ஹார்ன்பில் போன்ற பறவைகளும் இங்கு காணக்கிடைக்கின்றன.

இது மலைப்பாம்பு, ராட்சத பல்லி, இந்திய நாகப்பாம்பு போன்ற பல்வேறு வகை ஊர்ந்து செல்லும் விலங்கினங்களையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகின்றது.


Anupom sarmah

 எப்படி செல்வது

எப்படி செல்வது

குவாஹத்தி நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயம், குவாஹத்தியின் எல்ஜிபிஐ விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், குவாஹத்தி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

குவாஹத்திக்கு அருகாமையில் அமைந்துள்ளதனால் இது அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருகை தர ஏற்ற காலம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டமே ஆகும்.


PP Yoonus

குட்டி காசிரங்கா பூங்கா

குட்டி காசிரங்கா பூங்கா


ஒராங் தேசியப் பூங்கா சுமார் 78 சதுர கி.மீ. பரப்பளவில் டர்ராங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்காவைப் போன்றே அச்சு அசலாக இருப்பதினால் இது குட்டி காசிரங்கா பூங்கா என்றும் அறியப்படுகிறது. இவ்விரண்டு பூங்காக்களும் சதுப்பு நிலங்கள், நீரோடைகள், மற்றும் புல்வெளிகள் கொண்ட ஒரே விதமான நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஒற்றைக் கொம்புடைய அரிய வகை இந்திய காண்டா மிருகத்தையும் ஒராங் தேசியப் பூங்காவில் காணலாம்.

Neha iitb

மற்ற உயிரினங்கள்

மற்ற உயிரினங்கள்

ஒராங் தேசியப் பூங்கா ஒவ்வொரு வருடமும், வெள்ளை நாரை, பெருநாரை, ஷெல் வாத்துகள், காட்டு வாத்து, மீன்கொத்தி மற்றும் மரங்கொத்தி போன்ற பல்வேறு புலம்பெயர் பறவைகளின் வருகையினையும் காண்கிறது. ராயல் வங்காள புலி, சிறுத்தைகள், இந்திய எறும்புதின்னிகள், புனுகுபூனைகள், குள்ளமான பன்றிகள் போன்ற ஏராளமான விலங்குகளும் இப்பூங்காவில் வசித்து வருகின்றன. ஒராங் தேசியப் பூங்கா செல்வதற்கான உகந்த காலகட்டம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே ஆகும். சுமார் 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேஸ்பூர் நகரமே இத்தேசியப் பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரம் ஆகும். குவாஹத்தி, இப்பூங்காவில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Neha iitb

 சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம்

சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம்

சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம், தங்க நிற கரடிக்குரங்குகளின் பாதுகாக்கப்பட்ட இரண்டாவது வசிப்பிடமாகத் திகழ்கிறது. முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த சக்ரஷீலா 1994 ஆம் ஆண்டில் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 45.50 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இச்சரணாலயம், அஸ்ஸாமின் தூப்ரி மற்றும் கொக்ராஜ்ஹர் ஆகிய இரு மாவட்டங்களின் அதிகார வரம்புக்குள் அடங்குகிறது. சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயத்தில், சுற்றுலாப் பயணிகள் 14 வித்தியாசமான ஊர்வன வகை பிராணிகள், 60 வகை மீன்கள் மற்றும் 11 வகையான நிலநீர்வாழ் பிராணிகளுடன், சுமார் 273 வகை பறவைகளையும் காணலாம்.

Doniv79

 தீர் பீல்

தீர் பீல்


இச்சரணாலயத்தின் இருபுறங்களிலும் அமைந்துள்ள, தீர் பீல் மற்றும் திப்லாய் பீல் என்ற பெயரில் வழங்கப்படும் இரு ஏரிகள் இதன் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொக்ராஜ்ஹர் நகரமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். லோக்ப்ரியா கோபிநாத் போர்தோலோய் விமான நிலையம் சக்ரஷீலாவிலிருந்து சுமார் 219 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து நேரடி போக்குவரத்து வசதியும் உள்ளது.

Cks3976

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம்

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம்

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், முள்ளடர்ந்த முயல்கள் மற்றும் குள்ளமான பன்றிகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயம் டர்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுமார் 26.22 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சரணாலயம் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலமாகும். பாலூட்டி வகைகளான காட்டெருது, யானை, புலி, சிறு இந்திய புனுகுபூனை, சிறுத்தை, காட்டுப்பூனை, முள்ளம்பன்றி, சீன எறும்புதின்னி, இமாலய கருங்கரடி, குரைக்கும் மான் போன்றவற்றோடு குள்ளமான பன்றி, முள்ளடர்ந்த முயல் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணக்கூடும்.

NejibAhmed

 பறவைகள்

பறவைகள்

நீலமயில், ஹார்ன்பில், வங்காள ஃப்ளோரிகன் மற்றும் சதுப்பு நில கௌதாரி ஆகியவை இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் சில பறவைகளாகும்.

சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கல்தாய் நகரமே பொர்னாடிக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும்.

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயத்துக்குச் செல்ல ஏற்ற காலகட்டம் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமேயாகும். இச்சமயத்தில் இங்கு சென்றால் பல்வகை விலங்குகளையும் காணலாம்.


Dr. Raju Kasambe

பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம்

பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம்

பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சரணாலயம் அஸ்ஸாமின் மேல்பகுதியில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் மூன்று கட்டிடத் தொகுதிகளாக விரிந்துள்ளது. பல்வேறு வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. மெதுவாகச் செல்லும் வாலற்ற பாலுண்ணி விலங்குகள், அஸ்ஸாமீஸ் குரங்குகள், பன்றிவால் குரங்குகள், ரீசஸ் குரங்குகள், தொப்பித்தலைக் குரங்குகள், ஹூலாக் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற சில விலங்குகளும் இந்த சரணாலயத்தை தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன. இந்த வனவிலங்குகள் சரணாலயம் நாட்டில் வேறெங்கும் காணமுடியாத பலவகை பறவைகளின் இருப்பிடமாகவும் உள்ளது.

David M. Jensen

மற்ற உயிரினங்கள்

மற்ற உயிரினங்கள்

கழுகு போன்ற உருவுடைய கடற்பறவைகள், மீன்கொத்திப் பறவைகள், பல வண்ணங்களையுடைய இந்திய ஹார்ன்பில், லீனியேட்டட் பார்பட், மரங்கொத்தி, ட்ரோங்கோ, மைனா, புல்புல், மக்பை ராபின், வேக்டெயில் மட்டுமல்லாது பல வுட்லாண்ட் வகைப் பறவைகளையும் இங்கு காணலாம். பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், மோஹன்பரி (திப்ருகார்) விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் பயண தூரத்தில் உள்ளது. இது திப்ருகார் மற்றும் தின்சுகியா மாவட்டங்களிலிருந்து சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக உள்ளது. இங்கு செல்வதற்கு ஏதுவான காலம் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.

JJ Harrison

டிப்ரூ சைகோவா தேசிய பூங்கா

டிப்ரூ சைகோவா தேசிய பூங்கா

டிக்பாயில் இருந்து 60கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 340சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1990ல் தேசிய பூங்காவாக அமைந்துள்ளது. ஏழு பகுதிகளாக உள்ள இந்த பூங்காவில் ஒன்று சதுப்பு நிலமாகவும், மற்றது புல்வெளியாகும், அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. நீர் விலங்குகளும், வனவிலங்குகள் என ஏராளமான உயிரினங்கள் இங்கு காணப்படும் இந்த பூங்கா பிரம்மபுத்திராவும் லோஹித் நடியும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. அரிதான விலங்குகளான காட்டு குதிரைகள், வெள்ளை இறக்கைமர வாத்துகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. வேங்கைகள், யானைகள், ச்லோ லோரிஸ், சம்பார், ஆசிய எருமைகள், கங்கை டால்பின்கள், லங்கூர்கள், இந்திய காட்டு நாய்கள், பெங்கால்புலிகள், ஆகியவையும் இங்கு உள்ளன. புலம்பெயர் பறவைகளான பெங்கால் ஃப்ளோரிகான், கொக்குகள் ஆகியவை காணப்படுகின்றன.

NejibAhmed -

 சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம்

சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம்

சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம் இமயமலையின் அடிவாரத்தில் சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள இந்த சரணாலயம், கண்கவர் இயற்கைக் காட்சிகளோடு ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டுள்ளது. சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள், புலிகள், குறுரோமம் கொண்ட பூனைகள், யானைகள், காட்டெருதுகள், குரைக்கும் மான்கள் மற்றும் சிறு மான்கள் போன்ற விலங்கினங்களைக் காணலாம். வனவிலங்குகள் மட்டுமல்லாது, வளமான தாவர வகைகளின் இருப்பிடமாகவும் இது உள்ளது. ஏராளமான தாவர வகைகளை இங்கு காண முடிகிறது. இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் ஏகப்பட்ட மலைப் பறவைகளும் தென்படுகின்றன.

Peter Trimming

 கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம்

கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம்

கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம் ஆகும். வெம்மையான நீரூற்றுகள் தவிர்த்து, இச்சரணாலயத்தில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. மலைக்குரங்குகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்குகளின் இருப்பிடமாகத் திகழும் கரம்பானி வனவிலங்குகள் சரணாலயத்தில் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற விலங்குகளையும் காணலாம். இவை தவிர புலிகள், யானைகள், காட்டெருதுகள், ஹார்ன்பில், மலைப்பாம்புகள், நாகப்பாம்புகள் மற்றும் ராட்சத பல்லிகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.
.
Saleem Hameed

பாப்ஹா சரணாலயம்

பாப்ஹா சரணாலயம்


பாப்ஹா சரணாலயம் அஸ்ஸாமின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 49 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயம் மில்ராய் சரணாலயம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. பாப்ஹா சரணாலயம், ஆசிய கண்டத்தில் காணப்படும் விலங்கினமான நீர் எருமைகளை பாதுகாக்கவென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டதாகும்.அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் இந்த அழகான சரணாலயத்திற்கு, இதன் இயற்கை அழகை ரசிக்கவென்றே உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
Unknown

பறவைகள்

பறவைகள்


ஒவ்வொரு வருடமும் இச்சரணாலயத்தை அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் பறவைகளும் முற்றுகையிடுகின்றன. மர உச்சிகளில் வாழும் இப்பறவைகள் இங்கு வரும் இயற்கை விரும்பிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியை அளிக்கிறது. இப்பகுதியின் ஒரே சர்வதேச விமானம் அமையப்பெற்றுள்ள குவாஹத்தியிலிருந்து, இந்த சரணாலயம் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் மாவட்டம், சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லக்ஷ்மிபூர் நகரமே இதற்கு அருகாமையில் உள்ள நகரமாகும். இந்த சிறிய சரணாலயம் போக்குவரத்தைப் பொறுத்த வரையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு போய் வருவது எளிதாகவே உள்ளது. குளிர்காலம் நிலவும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலமே இங்கு விலங்குகளை இனங்கண்டு மகிழ்வுறுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.
Aphotoenthusiat

கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம்

கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம்


கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 221.81 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த சரணாலயத்தில் பல்வேறு வகை வுட்லாண்ட் பறவைகள் மற்றும் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, ராட்சத பல்லிகள், மலை ஆமைகள் போன்ற விலங்கினங்களையும் காண முடிகிறது. மாநிலத்தின் மிக நன்றாகப் பராமரிக்கப்படும் சரணாலயமாக விளங்கும் இச்சரணாலயத்துக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் செல்வது சாலச்சிறந்ததாகும். சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அருகாமை விமான நிலையமான ஜோஹ்ராத் விமான நிலையத்தின் வாயிலாக, இது உலகின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

PP Yoonus

Read more about: travel, forest, assam