» »மலைக்கு மேலயும் இல்லாம அடிவாரத்துலயும் இல்லாம நடு சென்டர்ல இப்படி ஒரு அதிசய கோயில்

மலைக்கு மேலயும் இல்லாம அடிவாரத்துலயும் இல்லாம நடு சென்டர்ல இப்படி ஒரு அதிசய கோயில்

Written By: Udhaya

தலைப்ப பாத்த உடனேயே ஏதோ சும்மா விளாட்டுக்கு எழுதுனதுனு நினைக்கவேண்டாம். ஏன்னா நிசமாவே இந்த கோயில் அப்படித்தான் இருக்கு. உத்தரகன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. பனியும், மழை வெள்ளமும் கூட இந்த கோயிலை ஒன்னும் செய்யாது என்கின்றனர் நண்பர்கள். இந்த கோயிலுக்கு போய்ட்டு வந்தா டூ இன் ஒன்னு சொல்ற இரட்டை பலன்களை அடையலாம். எப்படினு கேக்குறீங்களா முழுவதும் படிங்க...

கார்வல்

கார்வல்

யமுநோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3235 மீ உயரத்தில் இமயமலையின் கார்வல் பகுதிக்கு மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் இந்து சமய தேவதையான யமுனா மற்றும் கடவுளான யமா ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

Atarax42

 யமோத்ரி ஆலயம்

யமோத்ரி ஆலயம்

தேவதை யமுனாவின் சகோதரர் யமா கடவுளாவார். யமோத்ரி ஆலயம் 19 ஆம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரின் மகாராணி குலேரியா அவர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் வாசல்கள் புனித நாளான அக்சய திரியை அன்று திறக்கப்படும். அந்த நாள் இந்து சமய வைசாக மாதத்தில் மூன்றாவது நிலா நாளில் வருகிறது. அதாவது தீபாளிக்கு இரண்டாவது நாள் வருகிறது.

Atarax42

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

யமுனா நதியின் பெயரிலிருந்தே யமுநோத்ரி என்ற பெயரும் வருகிறது. யமுனா நதி யமுனோத்ரிக்கு அருகில் இருந்து புறப்பட்டு பாய்கிறது. யமுநோத்ரியில் இருக்கும் சுர்யா குண்ட் மற்றும் கௌவுரி குண்ட் ஆகிய சூடான நீரூற்றுகளும் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக இருக்கின்றன.

Guptaele

அனுமான் சாட்டி

அனுமான் சாட்டி


அனுமான் சாட்டி கடல் மட்டத்திலிருந்து 2400 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அனுமான் கங்கா நதியும் மற்றும் யமுனா நதியும் இணைகின்றன. அனுமான் சாட்டி, யமுநோத்ரிக்கு 13 கிமீ தொலைவில் உள்ளது.

தொடக்கத்தில் அனுமான் சாட்டி, யமுநோத்ரிக்கு செல்லும் பனச்சறுக்கின் தொடக்கமாக இருந்து வந்தது. தற்போது அனுமான் சட்டிக்கும் மற்றும் ஜான்கி சாட்டிக்கும் இடையில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

Anurag.vq

கர்சாலி

கர்சாலி

யமுநோத்ரிக்கு 1 கிமீ தொலைவில் கர்சாலி என்ற ஒரு சிறிய கிராமம் அமைந்திருக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் பகுதியான ஜான்கி சாட்டி என்ற பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கர்சாலி கிராமத்தில் பல நீர்வீழ்ச்சிகளும் மற்றும் சூடான நீரூற்றுகளும் இருக்கின்றன. அதனால் இந்த பகுதியில் பசுமையான சமவெளிகளைப் பார்க்க முடியும். மேலும் 3 அடுக்கு மாடியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய சிவபெருமான் ஆலயம் இந்த கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் அழகிய மர வேலைப்பாடுகளாலும், கற்சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
Guptaele

சூர்யா குன்ட்

சூர்யா குன்ட்

சூர்யா குன்ட் நீரூற்று யமுநோத்ரிக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த நீரூற்று 88 டிகிரி வெப்ப நிலையைக் கொண்டிருக்கிறது. இந்த நீரூற்றிலிருந்து வரும் தண்ணீரில் உருளைக்கிழங்கு மற்றும் அரிசி சமைப்படுகிறது அவ்வாறு வேக வைக்கப்பட்ட இந்த உணவு இறைவனுக்கு படையல் செய்யப்படுகிறது. பின் அந்த உணவு மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Guptaele

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்