» »அனிதாவின் கனவுகள் பிறந்து வளர்ந்து மடிந்த இடம்!

அனிதாவின் கனவுகள் பிறந்து வளர்ந்து மடிந்த இடம்!

Written By: Udhaya

இன்று குருப்பெயர்ச்சி: கடுமையாக பாதிக்கப்படும் ராசிகள் எவை தெரியுமா?

குழுமூர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். ஒரு வேலை நீட் தேர்வு மட்டும் இருந்திருக்காவிடில் இந்த கிராமத்தைப் பற்றியோ, அனிதாவை பற்றியோ சிலர் தவிர இந்த உலகில் யாருக்கும் தெரிந்திருக்காது.

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சிகளும் , முக்கிய பிரபலங்களும் பேச்சிலும் இந்த ஊர் அடிபடுகிறது. அனிதாவின் கனவுகள் பிறந்து, வளர்ந்து கடைசியில் மடிந்துபோனது இங்குதான்.

குருப்பெயர்ச்சியில் கடுமையாகப் பாதிக்கப்படும் இந்த நான்கு ராசிக்காரர்களும் கட்டாயம் செல்லவேண்டிய கோயில்கள்

குழுமூர் சுற்றுப்புற பகுதிகளின் மீது மீடியா வெளிச்சம் என்பது எப்போதும் விழுந்ததில்லை. ஆனால் உண்மையில் அது சோழவம்சத்தின் வீரத்தின் அடையாளங்களை சுமந்து நிற்கிறது என்பது தெரியுமா?

நீங்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத வீர சோழர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிதான் இது. வாருங்கள் இதுகுறித்து மேலும்பார்க்கலாம்.

 குழுமூர்

குழுமூர்


அரியலூர் மாவட்டத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ள ஒரு ஊர். லட்சம் கனவுகளோடு அன்றாடம் பள்ளிக்கு சென்று வரும் பல மாணவர்களையும், அவர்களின் கனவுக்கு வெளிச்சம் தர அன்றாடம் போராடும் சாமானிய பெற்றோர்களையும் கொண்ட ஒரு சிற்றூர்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து விருத்தாச்சலம், அல்லது உளுந்தூர்பேட்டை வழியாக குழுமூரை எளிதில் அடையலாம்.

 அருகிலுள்ள ஊர்கள்

அருகிலுள்ள ஊர்கள்


இந்த ஊரின் அருகில் வானகரம், கீழபெரம்பலூர், வேப்பூர், கிளியபட்டு என பல்வேறு சிறிய சிறிய ஊர்கள் உள்ளன.

 சாதாரண இடம் அல்ல

சாதாரண இடம் அல்ல

குழுமூர் ஒன்றும் அவ்வளவு சாதாரண ஊர் அல்ல... சோழர்களின் பொக்கிஷங்கள் நிறைந்த பகுதி. வாருங்கள் அதுகுறித்து பார்க்கலாம்.

 மேலப்பழுவூர் & கீழையூர்

மேலப்பழுவூர் & கீழையூர்

இக்கிராமத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள கீழையூர், சோழர்களின் காலத்தில் ஆவணி கந்தர்வபுரம் என அழைக்கப்பட்டது. இது ஊர் ஊராய்ச் சென்று வணிகம் செய்பவர்களின் ஒரு வாணிக நகரமாக இருந்தது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D#/media/File:Keezhaiyur_kadaimudinathar.jpg

 13வயதில் கோயில் கட்டிய வீரன்

13வயதில் கோயில் கட்டிய வீரன்


ஆவணி கந்தர்வ ஈஸ்வரம் என அழைக்கப்பட்ட கீழையூரில் முதலாம் ஆதித்யா மன்னனின் 13 ஆவது வயதில் கி.பி 884 ஆம் ஆண்டு குமரன் கந்தன் பழுவேட்டரையரால் சிவன் கோவில் கட்டப்பட்டது.

 சிற்பக்கலை மற்றும் நாணய தொழிற்சாலை

சிற்பக்கலை மற்றும் நாணய தொழிற்சாலை

சோழர் கால கோவில்களில் ஒன்றான இந்த கோவில் மிகச் சிறந்த கல் கோவில்களில் ஒன்று. அழகான சிற்பங்களை வரிசையாகக் கொண்டு வெவ்வேறு கட்டிடக்கலை முறையில் இருப்பதால் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது. சோழர்கள், இத்தலைநகரத்தில் நாணயத் தொழிற்சாலையை வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.

 கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில்

கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில்

கீழப்பழுவூர், பழுவேட்டரையர்களின் தலைநகரத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. குன்றக்குர்ரமில் உள்ள பிரம்மதேய கிராமமான இது, சிறுபழுவூர் என அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர், கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஆலந்துறையார் கோவிலைப்பற்றி பாடல்கள் பாடியுள்ளார். இக்கோவில் முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன் ஆகியோர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டது.

Laks R.K.

 திருமழப்பாடி சிவன்கோயில்

திருமழப்பாடி சிவன்கோயில்

இச்சிவன் கோவில், முதலாம் ஆதித்ய சோழன் (871-907) காலத்தில் கற்களால் கட்டப்பட்டது. பின்னர் முதலாம் இராஜராஜ சோழனின் ஆணையின்படி, இக்கோவில் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனால் புதுப்பிக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டது. இந்த கோவிலின் புகழ்பெற்ற திருவிழா, நந்தி (நந்தி கல்யாணம்) திருமணம் ஆகும். இத்திருமணவிழாவை காண்பதன் மூலம் திருமணத்தடைகள் நீங்குவதாக பரவலான நம்பிக்கை இப்பகுதியில் உள்ளது.

பா.ஜம்புலிங்கம்

 காமரசவல்லி

காமரசவல்லி


இவ்வூரில் உள்ள வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், சுந்தர சோழன் காலத்தில் கி.பி.962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு ரதி தவமிருந்து தன் கணவன் மன்மதனை மீட்டதால் இவ்வூர் காமரதிவல்லி என பெயர் பெற்றதாக உள்ளூர் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன.இவ்வூருக்கு காமரசவல்லிசதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உள்ளதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோவிலில் சோழர் காலத்திய சிற்பங்களும், வெண்கலச்சிலைகளும் உள்ளன.

 வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப் பெறுகிறது. இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள்-கரையவெட்டிஇந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும்.

 ஏலாக்குறிச்சி

ஏலாக்குறிச்சி

ஏலாக்குறிச்சி,அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இது ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரு புனித வழிபாட்டு தலமாகும். இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவர் என அழைக்கப்படும் கான்ஸ்டாண்டினோபிள் ஜோசப் பெஸ்கி கி.பி 1710 முதல் 1742 ஆண்டு வரையிலான காலங்களில் கிருத்துவ மதத்தைப் பரப்பினார்.

 கோதண்டராமசாமி கோவில்

கோதண்டராமசாமி கோவில்

கோதண்டராமசாமி கோவில் என்ற ஒரு விஷ்ணு கோவில் அரியலூரில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் ஸ்ரீனிவாசப்பெருமாளாக இருந்தாலும், இது ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதை ஆகியோர் கோவில் கொண்டுள்ளதால் கோதண்டராமசாமி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதியில், ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். இங்கு கர்ப்பகிரஹம் 15 சதுர அடியிலும்,அர்த்தமண்டபம் 17 அடி நீளத்திலும் மற்றும் மகா மண்டபமும் உள்ளன.

Ryan

 கங்கைகொண்டசோழீச்சரர் கோவில்

கங்கைகொண்டசோழீச்சரர் கோவில்

முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது.

Saranya Chidambaram

 விக்கிரமங்கலம்

விக்கிரமங்கலம்


முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது. இந்த இடம் சோழ மன்னர்களின் துணை நகரமாக விளங்கியதாக விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்திய கல்வெட்டுக்கள் கூறுகிறது.

Read more about: travel