» »தமிழகத்தின் நான்கு புறங்களிலும் இருக்கும் எல்லைகள் பற்றிய இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தின் நான்கு புறங்களிலும் இருக்கும் எல்லைகள் பற்றிய இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

Written By: Udhaya

நம் தமிழகம் எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பது வரைபடம் மூலமல்ல வரலாற்றை அறிந்தால் தெரிந்துகொள்ளலாம். புவியியல் அமைப்பு மட்டுமல்ல. பெயரும் மாறிக்கொண்டேதான் வந்துள்ளது. சரி இப்போது இருக்கும் தமிழகத்தின் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரையுள்ள முக்கியமான இடங்கள் எவை என காண்போமா? தமிழ்கூறும் நல்லுலகு உலகின் பல இடங்களில் பரவி இருந்ததாகவும், அது தற்போது உள்ள நிலையிலேயே இல்லை என்றும் அறிவியல் ஆதாரத்தோடு பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் வடவேங்கடம் தென்குமரி வரைத்தான் தமிழகமா என்ற கேள்வி இன்றுவரை இருந்துகொண்டுதான் இருக்கிறது. குமரிக்கண்டம் என்ற ஒன்று ஏன் வெளியில் தெரியப்படுத்தவில்லை என்பதும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்திய அரசும் தமிழர்களின் புகழை வெளிக்கொணர மறுத்துவருகிறது. இந்நிலையில் நாமாவது தமிழர்களின் நிலையை வெளி உலகுக்கு பரப்பவேண்டுமல்லவா. சரி நாம் தமிழ் கூறும் நல்லுலகின் எல்லைகள் எவை என்பதை பார்க்கலாம் வாருங்கள்

 சென்னை

சென்னை

இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தாலும் கேரள, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம். ஒருகாலத்தில் டெல்லிவாசிகள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் யாவரையும் ‘மதராஸி' என்றே விளிக்கும் ஒரு காலமும் இருந்திருக்கிறது. திருவனந்தபுரமும், பெங்களூரும், ஹைதராபாத்தும் தான் அண்டை மாநிலங்களின் தலைநகரங்கள் என்றாலும் அம்மாநிலங்களை சேர்ந்த ஒருசாராருக்கு மனதளவில் சென்னைதான் தலைநகரமாக விளங்கிவருகிறது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை. கொரமாண்டல் எனப்படும் சோழமண்டலக் கடற்கரையில் வங்காளவிரிகுடாவை ஒட்டி சென்னை நகரம் அமைந்துள்ளது. 400 வருட வரலாற்றை கொண்டுள்ள இந்நகரம் தற்போது உலகில் பெரிய மெட்ரோபாலிடன் நகரங்களில் 36வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Yoga Balaji

 மெரினா பீச்

மெரினா பீச்


சென்னையின் முக்கிய அடையாளமாக இந்த மெரினா பீச் எனும் பிரம்மாண்ட கடற்கரைப்பகுதி வீற்றுள்ளது. வட முனையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள இந்த கடற்கரைப்பகுதி உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரையாக புகழ்பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இந்த மெரினா கடற்கரை தூய்மையாக இடமாக புகழ் பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த கடற்கரை நீரானது தூய்மை கெட்டும் கடற்கரை பகுதி மாசுபட்டும் காட்சியளிக்கிறது. இருப்பினும் இந்த நிலையை மாற்றுவதற்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கபாலீசுவரர் கோயில்

கபாலீசுவரர் கோயில்

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும் ‘கற்பகாம்பாள்' ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார். கபால - ஈஸ்வரன் என்ற பெயரே கபாலீஸ்வரர் என்று திரிந்து வழங்கி வருகிறது. ஐதீக புராணக்கதைகளின்படி கைலாச மலையில் பிரம்மா கடவுள் ஈசனின் வலிமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை (கபாலத்தை) திருகி கொய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தன் தவறை உணர்ந்த பிரம்மா இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாக இந்த புராணக்கதை முடிகிறது.

 சென்னை மால்கள்

சென்னை மால்கள்

எக்ஸ்பிரஸ் அவென்யூ எனப்படும் இந்த நவீன அங்காடி வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்ட ஒன்றாகும். எக்ஸ்பிரஸ் குழும நிறுவனம் இந்த வளாகத்தை உருவாக்கியுள்ளது.

சென்னையிலேயே மிகப்பழமையான இந்த ஷாப்பிங் மால் நகரத்தின் முக்கிய சாலையான மௌண்ட் ரோடு என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட அண்ணா சாலையில் அமைந்துள்ளது.

அல்சா மால் ஸ்பென்சர் பிளாசவுக்கு அடுத்தபடியாக பழமையான அங்காடி எனும் பெயரை இந்த அல்சா மால் பெற்றுள்ளது. சென்னை நகரத்தின் எக்மோர் பகுதியில் இது உள்ளது. இந்த மால் அமைந்திருக்கும் தெருவில் இதர ஷாப்பிங் அம்சங்களும் நிறைந்துள்ளன.

மஹாபலிபுரம்

மஹாபலிபுரம்


மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் 'மாமல்லபுரம்' நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது. இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச ‘யுனெஸ்கோ' அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்ச பாண்டவ ரதங்கள்

பஞ்ச பாண்டவ ரதங்கள்

ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப்பாறையை தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும். கடற்கரைக்கோயிலைப்போன்றே இவையும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து ரதக்கோயில்களும் தனித்தனி பாறைக்குடைவு அமைப்புகளாக பிரத்யேக வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கின்றன. இவற்றில் தர்மராஜா ரதக்கோயில் அளவில் பெரியதாகவும் சிற்ப நுணுக்கங்களுடனும் காட்சியளிக்கிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும்.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. இது மிகப்பெரிய கற்களால் செய்த தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையாகும். இதன் உயரம் 133 அடி. இச்சிலை விவேகாந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது. இதன் மேடையின் உயரம் 38 அடியாகும். இது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 38 அறத்துப்பாலை குறிக்கும். மேடையின் மேல் இருக்கும் சிலையின் உயரம் 95 அடியாகும். இது 25 இன்பத்துப்பாலையும் 70 பொருட்பாலையும் குறிக்கும். இச்சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் Dr. வி. கண்பதி ஸ்தபதி

உதயகிரி

உதயகிரி

உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக் கட்டிடக்கலை ஆகியவற்றின் அரிய கலவையாக' விளங்குகிறது. புத்த விகாரங்கள், ஸ்தூபிகள் மற்றும் அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட ஜெயின் கட்டுமான சிதிலங்கள் போன்றவற்றை உள்ளிடக்கிய இந்த இடம் கட்டுமானம் மற்றும் சரித்திர ரீதியில் அபரிமிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புபனேஷ்வரிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்து, ‘சூரியோதய மலைகள்' என்று பொதுவாக அழைக்கப்படும் உதயகிரி, இங்குள்ள 18 குகைகளுள் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மற்றும் குறிப்புகளினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

Sugeesh

குமரி கோயில்

குமரி கோயில்

குமரி அம்மன் கோயில் அல்லது கன்னியாகுமரி கோயில் கடல் கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவி. பார்வதி தேவி சிவனை அடையும் பொருட்டு இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி என்ற பெயர் கன்யா (கன்னி) + குமரி (பெண்) என்பதை குறிக்கும். புராண கதைகளின் படி சிவனுக்கும் கன்னியாகுமரிக்கும் (பார்வதி தேவி) நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை.

Sankarrukku

சித்தாறல் மலைக்கோயில்

சித்தாறல் மலைக்கோயில்

சித்தாறல் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45 km தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. சித்தாறல் மலைக்கோயில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த குன்றின் மேல் உள்ள குகையில், பாறைகளில் செதுக்கிய ஊழிய கடவுள்கள் மற்றும் ஜெயின் தீர்தங்கரார்களின் உருவங்களை காணலாம். இந்த சிற்பங்களும் செதுக்கள்களும், குகைப் பாறையின் உட்புறமும் வெளிபுறமும் பல உள்ளன. குகைக் கோயிலை அடைய 10 நிமிட தூரம் குன்றின் மேல் நடக்க வேண்டும்.

Karthi.d

வட்டக்கோட்டை

வட்டக்கோட்டை

வட்டக்கோட்டை கன்னியாகுமரியிலிரிந்து 6 km தொலைவில், வடகிழக்கு திசை நோக்கி உள்ளது. இது தோரயாமாக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. இந்த கோட்டை தே லேன்னாய் என்ற டச்சுக் கடற்படை அதிகாரியால் எழுப்பப்பட்டது. கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில், பல ஓய்வறைகள், காவல் கோபுரங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளும் உள்ளன. இக்கோட்டையின் உட்புறச் சுவர்களில் காணப்படும், செதுக்கிய மீன்களின் சித்திரங்கள், அவை பாண்டியர்களின் சின்னம் என்பதை குறிக்கின்றன.

Infocaster

உதகமண்டலம்

உதகமண்டலம்


12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. இப்பொழுது புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்ந்தாலும், ஊட்டியின் வரலாறு பற்றி நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. ஊட்டி ஏதேனும் ஒரு ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று அறிவதற்கு கூட எந்தவொரு சுவடியோ வேதாங்கமோ இல்லை.

Unknown

 முக்கூர்த்தி

முக்கூர்த்தி

முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப் பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது. முக்கூர்த்தி தேசிய பூங்கா சில பகுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த ஏற்றங்கள் 4.900 அடி முதல் 8.625 அடி வரை வேறுபடுகின்றன. பூங்காவில் உள்ள பிரபலமான சிகரங்கள் - கொல்லரிபெட்டா , முக்கூர்த்தி மற்றும் நீலகிரி சிகரம். இந்த மூன்று சிகரங்களும் பூங்காவில் உயர்ந்துள்ளன. சிகரங்களின் சிறப்பு அவற்றில் உள்ள கிரானைட் பாறைகள்.


Marcus334

மலர் கண்காட்சி

மலர் கண்காட்சி

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர். 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும். இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.

தொட்டபெட்டா

தொட்டபெட்டா

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது. தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு. இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். ஏப்ரல் மற்றும் மே சுற்றுலா காலங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

VasuVR

வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ்


வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த இடம் வேட்டைக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. பிரபலமான ஊட்டியின் வேட்டை நடைபெற்று வந்த இடம் இதுதான். சுதந்திர இந்தியாவில் வேட்டை தடை செய்யப்பட்ட பின், இது உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆனது. இப்போது இந்த இடத்தில் கோல்ப் மைதானம் மற்றும் அரசு ஆடு பண்ணை கொண்ட ஜிம்கானா கிளப் உள்ளது.


KARTY JazZ

 பனிச்சரிவு ஏரி

பனிச்சரிவு ஏரி

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர். சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது. சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Jaseem Hamza

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்


நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும் பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று. இங்கு அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். சௌந்தர்யராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காயாரோகணசுவாமி கோவில், ஆறுமுகசுவாமி கோவில், போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கொண்ட நகரமாக இது விளங்குகிறது. வேதாரண்யம் என்ற ஊரில் அமைந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூரில் 16 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த நாகூர் தர்கா ஆகியவை நாகப்பட்டனத்துக்கு அருகாமையில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.

P. V. Jagadisa

கோடியக்கரை

கோடியக்கரை

கோடியக்கரையானது கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடியக்கரையில் காணப்படும் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். இவ்வகை காடுகளில் இவையே கடைசியானதும் இறுதியாக எஞ்சியிருப்பதும் ஆகும். கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் (Point Calimere Wildlife and Bird Sanctuary) இங்கு அமைந்துள்ளது. இந்தியன் பிளாக் பக் , கரண்டி போன்ற அலகுடைய நாரைகள்( spoon billed sandpiper), பூநாரைகள், கிரேட்டர் ஃபிளமிங்கோ எனப்படும் கொக்கு வகைகள் போன்றவை இங்கு காணப்படுகின்றன. பலவகையான சமய மற்றும் வரலாற்று தொடர்புடைய இடங்கள் இந்த சரணாலயத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை இங்கு அதிகளவில் காணலாம்.


Unknown

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்