» » நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க - குமரி முனை

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க - குமரி முனை

Posted By: Udhaya

ஆம் இந்த சுற்றுலா தொடர் இப்போது ஆரம்பிக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையிலிருந்து தொடங்குகிறோம். சுற்றுலாவுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடங்களை மட்டுமல்லாமல் வேறு வேறு இடங்களையும் உங்களுக்கு காட்டத்தான் இந்த தொடர்.

உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாமும் அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறோம். அது நின்றாலும் நாம் விடுவதாக இல்லை. பிளாஸ்டிக் குப்பைகளையும், நச்சு வாயுக்களையும் சுமந்து நம் இருப்பிடங்கள் விஷக் கூடாரமாக மாறிவிடக்கூடாது.

குறைந்த பட்சம் இந்த இடங்களையெல்லாம் பார்ப்போம், எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு சுத்தமாக வைக்கலாம். சரி, இந்த தொடரில் என்னவெல்லாம் செய்யவிருக்கிறோம்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கன்னியாகுமரியை அடைய பல்வேறு வழிகள் உள்ளன. சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரத்திலிருந்து வருவதற்கு வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Infocaster

சென்னையிலிருந்து கன்னியாகுமரி

சென்னையிலிருந்து கன்னியாகுமரி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விரைவுப் பேருந்துகள் மூலம் கன்னியாகுமரியை மாநிலத்தின் பல்வேறு நகரங்களுடன் இணைக்கிறது.

சென்னையிலிருந்து மணிக்கு இரண்டு பேருந்துகள் வரை தொடர்ச்சியாக இயக்கிக்கொண்டிருக்கிறது.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி அதிகபட்சம் 12 மணி நேரத்தில் வந்து சேரும்படி அமைந்துள்ளது.

பெங்களூருவிலிருந்து

பெங்களூருவிலிருந்து


பெங்களூருவிலிருந்தும் அரசு போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக பேருந்துகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கின்றன.

பெங்களூருவிலிருந்து தனியார் பேருந்துகளும் கன்னியாகுமரிக்கு இயக்கப்படுகின்றன.

திருவனந்தபுரத்திலிருந்து

திருவனந்தபுரத்திலிருந்து


மணிக்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் அடிக்கடி திருவனந்தபுரத்திலிருந்து கேரள மற்றும் தமிழக பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

ரயில் மூலம்

ரயில் மூலம்

சென்னையிலிருந்து 9 நேரடி ரயில்களும், 13 இணைப்பு ரயில்களும் குமரி மாவட்டத்துக்கு வருகை தருகின்றன

குருவாயூர் விரைவு வண்டி, கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி, அனந்தபுரி விரைவு வண்டி ஆகியன தினசரி ரயில்களாகும்.

மேலும், திருக்குறள் விரைவு வண்டி, ஹௌரா - குமரி விரைவு வண்டி , சென்னை - கொச்சுவேலி விரைவு வண்டி ஆகியன வாராந்திர ரயில்களாகவும் இயக்கப்படுகின்றன.

விமானம் மூலம்

விமானம் மூலம்

விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் குமரியை அடையலாம்.

நாகர்கோயில் அருகேயுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் அதற்கடுத்து மதுரை.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

 • மக்கள் தொகை அடர்த்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது
 • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்திணைகளில் நான்கினைப் பெற்ற பெருமைக்குரிய ஊர் இது.
 • இந்தியாவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நகரமாக குமரி உள்ளது.
 • இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும் அடங்கிய மாவட்டம் இது.
 • தமிழகத்தின் அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது.
 • இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.
புவியியல் அமைப்பு

புவியியல் அமைப்பு


இந்த மாவட்டத்தில் நறுமணப் பொருள்கள், நெல், வாழை, தென்னை மற்றும் ரப்பர் ஆகிய பயிர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல், சிற்றாறு, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகள் இந்த மாவட்டத்தில் உள்ளன.

 சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்

 1. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
 2. விவேகானந்த கேந்திரம்
 3. விவேகானந்தர் பாறை
 4. மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்
 5. விவேகானந்தர் நினைவு மண்டபம்
 6. அய்யன் திருவள்ளுவர் சிலை
 7. காந்தி மண்டபம், கன்னியாகுமரி
 8. சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்
 9. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
 10. நாகராஜா கோவில்
 11. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
 12. பத்மநாபபுரம் அரண்மனை
 13. சிதறால் சமண நினைவு சின்னங்கள்
 14. மாத்தூர் தொட்டிப் பாலம்
 15. உதயகிரிக் கோட்டை
 16. உலக்கை அருவி
 17. பேச்சிப்பாறை அணைக்கட்டு
 18. பெருஞ்சாணி அணைக்கட்டு
 19. முக்கடல் அணைக்கட்டு
 20. திற்பரப்பு நீர்வீழ்ச்சி
 21. சொத்தவிளை கடற்கரை
 22. முட்டம் கடற்கரை
 23. தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
 24. ஆலஞ்சி கடற்கரை
நன்றி.. தொடர்ந்து இணைந்திருங்கள்

நன்றி.. தொடர்ந்து இணைந்திருங்கள்

இவ்வளவு இடங்களுக்கும் வரும் வாரங்களில் சென்று சுற்றிப் பார்க்கலாம்.

உங்களுக்கு இந்த கட்டுரை பிடிச்சிருக்கா? இந்த இடங்களில் இருக்கும் இன்னும் பல விசயங்கள் நாங்கள் மறந்திருக்கலாம். அதை முடிந்தால் நீங்கள் எங்களுடன் பகிருங்கள். உங்களது கருத்துக்களுடன், உங்கள் பகுதி பெருமைகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

Read more about: travel, tour