» »இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - ஆயிரம் ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?

இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - ஆயிரம் ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?

Written By: Udhaya

இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத 'லட்சத்தீவு'களுக்கு பயணம் செய்வதில் யாருக்கும் தயக்கம் இருக்குமா என்ன? இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும். சரியான நேரத்தில் நாம் எடுக்கும் முடிவு நம்மை சூப்பரான இடத்துக்கு கூட்டிச் செல்லும். செலவுகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். வாருங்கள் ஒரு அம்சமான இடத்துக்கு போயி என்ஜாய் பண்ணிட்டு வரலாம். இந்த பதிவில் லட்சத்தீவுகளுக்கு எப்படி செல்வது எப்போது செல்வது செல்லும் முறைகளைப் பற்றி காணலாம்.

லட்சத்தீவு

லட்சத்தீவு


30 தீவுகள் மற்றும் குறுந்தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த லட்சத்தீவு ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக சமீபகாலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடற்கரை மணல், சூரியன், கடல் போன்ற அம்சங்களை வெகுவாக விரும்பும் பயணிகள் மத்தியில் இது மிக பிரசித்தமாக அறியப்படுகிறது. 4200 ச.கி.மீ பரப்பளவுக்கு அதிகமான தீவுக்கூட்ட பரப்பையும் 36 ச.கி.மீ பரப்பையும் கொண்டுள்ளது. தோராயமாக 132 கிமீ நீள கடற்கரைப்பரப்புடன் அமைந்துள்ளதால் இந்த தீவுப்பிரதேசம் எல்லாவிதமான நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

Photo Courtesy: Ekabhishek

கப்பற்படைக்கேந்திரம்

கப்பற்படைக்கேந்திரம்


லட்சத்தீவின் வரலாற்றுப்பின்னணி ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த இந்த தீவுப்பகுதி 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த தீவுக்கு பாகிஸ்தான் உரிமை கோரக்கூடும் என்ற குழப்பம் அப்போது நிலவியது. இருப்பினும் இந்திய உள் துறை அமைச்சர் கப்பற்படைகளை இத்தீவிற்கு அனுப்பி இந்திய தேசியக்கொடியை உடனடியாக இத்தீவில் பறக்க செய்தார். தற்போது லட்சத்தீவு பகுதி இந்தியக் கப்பற்படைக்கான முக்கிய கேந்திரமாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்கு பிரதேசத்தில் இந்திய கப்பல்களுக்கான பாதுகாப்பு மற்றும் இதர தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த கப்பற்படைக்கேந்திரம் வசதியாக உள்ளது.

Photo Courtesy: Rupankar Mahanta

சொர்க்கபூமி

சொர்க்கபூமி


தீவுப்பகுதியில் உல்லாசப்பொழுதுபோக்குகள் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த தீவுப்பகுதி பிரசித்தி பெற்றிருப்பதற்கான காரணங்களை ஊகிப்பது ஒன்றும் கடினமில்லை. தீவு என்றாலே ரம்மியம்தானே. அதுவும் சிறிய பரப்பளவில் அதிகம் மாசுபடாத கடற்கரைகள் மற்றும் தரைக்கடல் பகுதியை கொண்ட தீவுப்பகுதி என்றால் அது நிச்சயம் சொர்க்கபூமியாகத்தான் காட்சியளிக்கும் என்பது இயற்கை ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். முதல் முதலில் வெளிமனிதர்கள் இந்த தீவை கண்டுபிடித்தார்களோ அப்படியே அதே அழகோடுதான் இது இன்றும் காட்சியளிக்கிறது என்பது பரவலான ஒரு கருத்து.

Photo Courtesy: Julio

விமானத்தில் எப்படி செல்லலாம்?

விமானத்தில் எப்படி செல்லலாம்?

ரயில் மற்றும் பேருந்து மூலம் இந்தியாவிலிருந்து இந்த தீவுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே. எனினும் இந்த தீவுக்கு கப்பல் அல்லது விமானத்தில் செல்லவேண்டுமானால், நீங்கள் பெங்களூரு விமான நிலையம், கொச்சி விமான நிலையம் அல்லது கொச்சி துறைமுகத்துக்கு வருகை தரவேண்டும்.

பெங்களூர் மற்றும் கொச்சியிலிருந்து கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமான சேவைகள் அகட்டி விமான நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன. தீவுப்பகுதிகளுக்குள்ளேயே விமான பயணங்கள் மேற்கொள்ள பங்காரம் தீவிலும் ஒரு விமான நிலையம் அமைந்துள்ளது.

கொச்சி விமான நிலையத்திலிருந்து சென்றால் 1 மணி நேரம் 20 நிமிடங்களில் லட்சத்தீவுகளின் அகட்டி விமான நிலையத்தை அடையலாம். இதற்கு குறைந்தபட்சம் 5500ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைவிட சொகுசான விமான வசதிகளும் உள்ளன.

பெங்களூருவிலிருந்து பயணிக்க விரும்பினால், குறைந்தபட்சம் 7500ரூ செலவாகிறது. 3 மணி நேரம் இருபது நிமிடங்ளும் ஆகின்றன.

Photo Courtesy: Lenish Namath

கப்பலில் செல்வது எப்படி

கப்பலில் செல்வது எப்படி

இந்தியாவிலிருந்து கொச்சி துறைமுகத்தின் எம் வி திப்பு சுல்தான் மற்றும் எம் வி பாரத் சீமா எனும் இரு கப்பல்கள் லட்சத்தீவுகளுக்கு இயக்கப்படுகின்றன.

இரண்டாம் வகுப்பில் பயணிக்க அதிக பட்சம் 510ரூ ஆகின்றது. இது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.

உரிமையாளர்கள் இருக்கை, முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு, சுற்றுலா இருக்கை என இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் வசதிகளைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். 4000ரூ வரை இதன் அதிகபட்ச கட்டணம் இருக்கிறது.

Photo Courtesy: Ekabhishek

லட்சத்தீவில் விமான நிலையம்

லட்சத்தீவில் விமான நிலையம்

இந்த தீவுப்பகுதியின் முக்கியமான இரண்டு தீவுகளாக விமான நிலையம் அமைந்திருக்கும் அகத்தி எனும் தீவும் மற்றும் அளவில் பெரியதான சுற்றுலா கோலாகல வசதிகள் நிரம்பிய பங்கரம் எனும் தீவும் அறியப்படுகின்றன. இந்த இரண்டாவது தீவில் மட்டுமே மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவின் கிடைக்கும் உணவுத்தயாரிப்புகளின் தரத்தையும் ருசியையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம். அவ்வளவு தனித்தன்மையான செய்முறைகளுடன் இங்கு ருசியான கடல் உணவுகள் கிடைக்கின்றன. இப்பகுதியில் ‘ட்யூனா' மீன் அதிகம் கிடைப்பதால் அது பலவிதமான ருசிகளில் இங்கு சமைக்கப்படுகிறது.

Photo Courtesy: Rémih

 பூமியன் ஒட்டுமொத்த அழகு

பூமியன் ஒட்டுமொத்த அழகு

லக்ஷ்வதீப்பின் ஒட்டுமொத்த அழகையும் பார்க்கும் போது உங்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதாவது, "இப்படியெல்லாம் பூமியில் வீற்றிருக்கும் சொர்க்கங்களை விட்டுவிட்டு கான்கிரீட் காடுகளுக்குள் நாம் என்ன தேடிக்கொண்டிருக்கிறோம்?" எனும் ஆதங்கம்தான் அது! பரபரப்பும், சந்தடியும், தூசும், புகையும் நிரம்பி எந்த வித ஒத்திசைவோ அழகம்சமோ இல்லாத கான்கிரீட் கட்டிட அமைப்புகள் நிறைந்திருக்கும் நகர்ப்புறங்களில் வாழ்ந்து விட்டு அப்பழுக்கற்ற மணலையும், ஸ்படிகம் போன்ற சுற்றுச்சூழலையும், அசைந்தாடும் தென்னை மரங்களையும், நீலப்பச்சை நிற கடற்பரப்பையும், வேறு எங்குமே பார்க்க முடியாத வசீகரத்துடன் சிரிக்கும் சூரியனையும் சந்திரனையும் இந்த லக்ஷ்வதீப்பில் தரிசிக்கும் அனுபவம் வாழ்வில் என்றென்றுமே மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.

Photo Courtesy: Ajmal Hussain PKH

பொழுதுபோக்குகள்

பொழுதுபோக்குகள்


மீன்பிடித்து மகிழ்வது ஸ்கூபா டைவிங் எனப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் கடலடி நீச்சல் பயணம் போன்றவை லக்ஷ்வதீப்பில் பயணிகளுக்காக காத்திருக்கும் விசேஷ அனுபவங்களாகும். ஸ்கூபா டைவிங் அனுபவஸ்தர்கள் இந்த லக்ஷ்வதீப்பில் காணக்கிடைப்பது போன்ற டைவிங் காட்சிகள் வேறு எங்குமே இல்லை என்று கூறுகின்றனர். அன்று பிறந்தவை போன்றே காட்சியளிக்கும் பவழப்பாறைகளையும் விதவிதமான கடலுயிர்களையும் வண்ண மீன்களையும், கடல் மீன்களையும் இங்குள்ள கடற்பகுதிகளில் ஸ்கூபா டைவிங் செய்து பார்த்து ரசிக்கலாம்.

Photo Courtesy: Vaikoovery

 வாங்க பழகலாம்

வாங்க பழகலாம்

ஸ்கூபா டைவிங்கிற்கான நவீன உபகரணங்களோடு அனுபவமிக்க டைவிங் பயிற்சியாளர்கள் இங்கு பயணிகளுக்கு உதவ காத்திருக்கின்றனர். பொதுவாக டைவிங் எனப்படும் ‘நீர்மூழ்கு நீச்சல்' 30 அடி ஆழம் வரை அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் விசேஷமான சந்தர்ப்பங்களில் ‘டைவிங் சேம்பர்' எனப்படும் நீர்மூழ்கி அறை வசதியை பயன்படுத்தி பயணிகள் அதிக ஆழத்திற்கும் செல்லலாம். இந்த விசேஷ வசதி மே 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. எளிமையான முறையில் டைவிங்கில் ஈடுபட விரும்புகிறவர்கள் ‘ஸ்னார்க்கலிங்' என்ற சிக்கல் இல்லாத வசதிகளை பயன்படுத்தி நீருக்கடியில் மூழ்கி ரசிக்கலாம்.

Photo Courtesy: Vaikoovery

 ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் எனப்படுவது முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கால்களில் மீன் துடுப்பு போன்ற அமைப்புடன் நெடுநேரம் நீருக்குள் ஆழத்தில் நீந்தக்கூடிய வகையிலான முறை. ஸ்நார்க்கலிங் என்பது சுவாச முகமூடிஅமைப்புடன் நீர்ப்பரப்புக்கு வெகு அருகிலே நீருக்குள் மூழ்கி பார்த்து ரசிப்பது. இதிலும் கால்களுக்கு துடுப்புபோன்ற அமைப்புகளை பொருத்திக்கொள்ளலாம். லக்ஷ்வதீப் பகுதியின் ஆழமற்ற தரைக்கடல் பகுதிகள் ‘லகூண்' எனப்படும் அலைகள் அற்ற ஆழம் குறைந்த கடல்நீர்ப்பரப்பு வகையை சேர்ந்தவை. அதன் அடியில் காணப்படும் பவழப்பாறை வளர்ச்சிகளுடன் நீல நிறத்தில் ஸ்படிகம் போன்று ஜொலிக்கின்றன.

Photo Courtesy: Vaikoovery

சொக்கி விடுவீர்கள்

சொக்கி விடுவீர்கள்

அப்பழுக்கற்ற வெண் மணற்பரப்புடன் தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் அசைந்தாடும் இந்த தீவுகளின் கடற்கரைகள் பயணிகளை சொக்க வைக்கின்றன. தீவுப்பகுதியில் நல்லதொரு விடுமுறைச்சுற்றுலா அனுபவத்தை திட்டமிட்ட முறையில் அனுபவிக்க பல ரிசார்ட் விடுதிகளும் அமைந்துள்ளன. ஒரு முறை லக்ஷ்வதீப்பிற்கு விஜயம் செய்து இயற்கை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது நீங்கள் முற்றிலும் புதிய மனிதராக திரும்புவது உறுதி. மேலும், இந்தியாவுக்குள் இது போன்ற அம்சங்கள் வேறு எங்கும் இல்லை என்பதால் சந்தேகத்துக்குமிடமின்றி இது ஒரு சிறப்பு விடுமுறை சுற்றுலாத்தலமாகும்.

Photo Courtesy: Vaikoovery

தீவுக்குள் ஒளிந்திருக்கும்....

தீவுக்குள் ஒளிந்திருக்கும்....


லட்சத்தீவுக்குள் மொத்தம் 36 அழகிய தீவுகள் இருந்தாலும் ஒரு சில தீவுகளின் அழகு உலகின் சிறந்த கடற்கரை மற்றும் தீவுகளோடு ஒப்பிடக்கூடியவை. இந்த தீவுகளில் ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்பதுடன் பவளப்பாறைகளை கண்டு ரசிக்கலாம், மீன் பிடித்து அதை நீங்களே சமைத்தும் சாப்பிடலாம். லக்ஷ்வதீப்பில் கிடைக்கும் கடல் உணவுகளை போன்று நீங்கள் வேறெங்கும் ருசித்திருக்க வாய்ப்பில்லை. லக்ஷ்வதீப்பின் ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு வகையில் உங்களை கிறங்கடிக்க போகிறது. இந்த தீவுகள் பெரும்பாலும் அளவில் சிறியதாக இருப்பதால் ஒரு சைக்கிளோ அல்லது ஒரு மோட்டார் பைக்கோ வாடகைக்கு எடுத்துக்கொண்டு தீவுகளை சுற்றிப்பார்த்துவிட முடியும்.

Photo Courtesy: Vaikoovery

 முக்கியமான தீவுகள்

முக்கியமான தீவுகள்

அமினி தீவு - லக்ஷ்வதீப்பில் நாம் எதை எதிர்பார்த்து செல்கிறோமோ அவை யாவுமே இந்த அமினி தீவில் நமக்காக காத்திருக்கின்றன.


காவரத்தி தீவு - ஒரு சிறு அழகிய தீவு நகரமான காவரத்தி 10000 குடிமக்களை கொண்டுள்ளது.


பங்காரம் - பங்காரம் தீவு தேனிலவு தம்பதியர்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது.


அகத்தி தீவு - இந்த அகத்தி தீவிற்கு எப்படியும் நீங்கள் விஜயம் செய்தே ஆக வேண்டியிருக்கும். ஏனெனில் இந்திய நிலப்பகுதியிலிருந்து வரும் சொகுசுப்படகுகள் யாவற்றுக்குமான துறைமுகம் இந்த தீவில்தான் உள்ள்து.


சுஹேலி பார் - ட்யூனா மீன்கள் பதப்படுத்தப்படும் தற்காலிக கேந்திரமாகவும் திகழ்கிறது.


மாலிகு தீவு - இது 10 கி.மீ நீளமும் அதிகபட்சம் 1 கி.மீ அகலமும் மட்டுமே கொண்ட மிகச்சிறிய தீவுப்பகுதியாகும்.


கல்பேணி தீவு - இது வெறும் 2.8 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. வடக்கும் தெற்குமாக வீற்றுள்ள இந்த தீவு தனது 2.8 கி.மீ நீள தரைக்கடல் பகுதிக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

Photo Courtesy: Vaikoovery

பங்காரம் தீவு

பங்காரம் தீவு

லக்ஷ்வதீப்பில் வேறெங்கும் இவ்வளவு ஹனிமூன் ஜோடிகளை பார்க்க முடியாது என்பதுபோல் பங்காரம் தீவு ஹனிமூன் ஜோடிகளால் எப்போதும் ஜேஜேவென்று இருக்கும். இந்த தீவில் கடற்கரைக்கு அருகிலேயே 60 காட்டேஜ்கள் அமைந்திருப்பதோடு, அவற்றுடன் பிரத்யேக உணவு விடுதியும் இணைக்கப்பட்டிருப்பதால் வேண்டிய உள்ளூர் உணவு வகைகளை வரவழைத்து ருசி பார்க்கவும் வசதியாக இருக்கிறது. இங்கு ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்க்கெலிங் போன்ற கடல் மூழ்கு நீச்சலில் ஈடுபட்டு நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள் மற்றும் பவளப்பாறை அமைப்புகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் லக்ஷ்வதீப்பில் மதுவுக்கு அனுமதி வழங்கப்படும் ஒரே தீவு இந்த பங்காரம் தீவுதான்!

Photo Courtesy: Vaikoovery

அகத்தி தீவு

அகத்தி தீவு

லக்ஷ்வதீப்பின் நுழைவாயிலாக அறியப்படும் அகத்தி தீவில்தான் சொகுசுப்படகுகளுக்கான துறைமுகமும், உள்நாட்டு விமான நிலையமும் அமைந்திருப்பதால் நீங்கள் இந்த தீவில் கால்பதிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த தீவு 4 ச.கி.மீ பரப்பளைவை மட்டுமே கொண்டிருப்பதால் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு தீவு முழுவதையும் சுற்றிப்பார்த்து விடலாம். இங்கு கண்ணாடி அடித்தளத்தை கொண்ட படகுகளில் பயணம் செய்து விதவிதமான பவளப்பாறை அமைப்புகளை கண்டு ரசிக்கலாம். மேலும் நீங்கள் இங்கு மீன் பிடித்து பொழுதை கழிக்கலாம் என்பதுடன் பிடித்த மீன்களை உடனே சமைத்து சாப்பிட ‘பார்பிக்யூ' வசதியும் இருக்கிறது.

Photo Courtesy: Vaikoovery

 கட்மத் தீவு

கட்மத் தீவு


லக்ஷ்வதீப்பின் அமிந்திவி தீவுக்கூட்டத்தை சேர்ந்த கட்மத் தீவு , ஏலக்காய் தீவு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த தீவில் கடல் ஆழம் குறைவாக காணப்படுவதுடன் ஏராளமான பவளப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட நபர் ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடல் நீச்சல், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம். அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் பயணிகள் மண் கோட்டை கட்டுவதிலும், மீன் பிடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Photo Courtesy: Everywhereguy

 கல்பேணி தீவு

கல்பேணி தீவு


கொச்சியிலிருந்து 150 மை தூரத்தில் அமைந்துள்ள கல்பேணி தீவு 2.8 கி.மீ நீள தரைக்கடல் பகுதிக்காக புகழ்பெற்றுள்ளது. அதாவது தரைக்கடல் என்றால் கடற்கரையை ஒட்டி ஆழம் குறைவான அலைகள் அற்ற ஸ்படிகம் போன்ற தூய நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்ப்பரப்பாகும். எனவே இங்கு கடல் குளியல் மற்றும் ஸ்நார்க்கலிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம். இந்த தீவில் 37 மீட்டர் உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்றால் கல்பேணி தீவின் இயற்கை அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்க முடியும்.

Photo Courtesy: सुभाष राऊत

காவரத்தி தீவு

காவரத்தி தீவு


லக்ஷ்வதீப்பின் தலைநகரமான காவரத்தி தீவிற்கு இந்திய கடற்கரையிலிருந்து நேரடி சொகுசுப்படகு போக்குவரத்து உள்ளது. லக்ஷ்வதீப்பின் உல்லாசப்பொழுதுபோக்கு மையமாக திகழும் இந்த தீவில் நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாதவர்களும் பல்வேறு நீர் விளையாட்டுகளை பயிற்சியாளர்களின் உதவியோடு விளையாடி மகிழலாம். மேலும் 'ஸ்கூபா டைவிங்' செய்ய அச்சப்படுபவர்கள் குறைந்த ஆழத்தில் மேற்கொள்ளப்படும் ‘ஸ்நார்க்கெலிங்'-கில் ஈடுபட்டு மகிழலாம்.

Photo Courtesy: Thejas

மாலிகு தீவு

மாலிகு தீவு

மாலத்தீவின் ஒரு அங்கமாக இருந்த மாலிகு தீவு 1976-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மாலிகு தீவு பல அம்சங்களில் மாலத்தீவை போன்றே தனித்துவமான அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் எங்கு பார்த்தாலும் உயர உயரமான தென்னை மரங்களுடன், அதிகம் பரபரப்பில்லாத தனிமையுடன் காட்சியளிக்கும் மாலிகு தீவிற்கு நீங்கள் வாழ்வில் முறையாவது வந்து செல்ல வேண்டும்.

Photo Courtesy: Thejas

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

இந்த தீவுக்கு செல்ல இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெறவேண்டியுள்ளது. மேலும் இந்த தீவுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செல்லலாம்.

கொச்சியிலிருந்து காவரத்தி 220 கடல்மைல் தொலைவிலும், அண்ட்ராய்ட் 160கடல்மைல் தொலைவிலும், காட்மட், அமினி 220 கடல்மைல் தொலைவிலும், பிட்ரா 260 கடல்மைல் தொலைவிலும், செட்லட் 230 கடல்மைல் தொலைவிலும், கில்டன் 210 கடல்மைல் தொலைவிலும், அகத்தி 250கடல்மைல் தொலைவிலும், கல்பேணி 160 கடல்மைல் தொலைவிலும், மினிகாய் 220 கடல்மைல் தொலைவிலும் அமைந்துள்ளன.

நல்லதொரு பயணத்தை தொடருங்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ். தமிழ் கூறும் நல்லுகின் முதன்மை சுற்றுலா இணையதளம்.

Photo Courtesy: Thejas

Read more about: travel, beach, island, india