» »தமிழகத்தின் சிறந்த பத்து மலைகளுக்கு இப்படி ஒரு டிரிப் டிரை பண்லாமா?

தமிழகத்தின் சிறந்த பத்து மலைகளுக்கு இப்படி ஒரு டிரிப் டிரை பண்லாமா?

Posted By: Udhaya

சுற்றுலாப் பயணங்களில் வித்தியாசமான முறையில் பயணம் செய்பவர்களா நீங்கள். தொடர்ந்து தமிழகத்தின் பெஸ்ட் 10 மலைகளுக்கு சுற்றுப்பயணம் செய்யலாம் தயாரா?

இந்த பயணத்தில் நாம் பயணம் செய்யவிருக்கும் தமிழக மலைகள்

  • ஏலகிரி
  • ஏற்காடு
  • குன்னூர்
  • ஊட்டி
  • கெட்டி
  • கோத்தகிரி
  • டாப்ஸ்லிப்
  • கொடைக்கானல்
  • மாஞ்சோலை 
 ஏலகிரி

ஏலகிரி

ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக் காலங்களில் ஏலகிரி முழுவதும் ஏலகிரி ஜமீன்தார்களின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. அவர்களின் வீடு இன்றும் ரெட்டியூரில் உள்ளது.

mckaysavage

ஏலகிரி - ஏற்காடு

ஏலகிரி - ஏற்காடு

ஏலகிரியிலிருந்து ஏற்காடு மலை 144கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஏலகிரியிலிருந்து ஏற்காடுக்கு செல்ல 4 மணி நேரங்கள் ஆகலாம்.

மூன்று வழித்தடங்கள் உள்ளன.

1 திருப்பட்டூர் - அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி (குறைந்த நேர பயணம்)

2 திருப்பட்டூர் - மாத்தூர் - கம்பைநல்லூர் - பொம்முடி (குறைந்த தொலைவு)

3 கிருஷ்ணகிரி - காவேரிப்பட்டிணம் - காரிமங்கலம் - தர்மபுரி - தோப்பூர் (மாற்று வழி)

ஏற்காடு

ஏற்காடு

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு பல விஷயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின் உதகமண்டலம்' என்று குறிப்பிடப்படுகிறது.

Riju k

ஏற்காடு - கொல்லிமலை

ஏற்காடு - கொல்லிமலை


ஏற்காட்டிலிருந்து கொல்லிமலை ஏறக்குறைய 90கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு வழித்தடங்கள் உள்ளன.

1 சேலம் - ராசிபுரம் - காரவல்லி (குறைந்த நேரம்)

2 அரங்கம் - குப்பனூர் - வலசை சேஷன்சாவடி - ஆயில்பட்டி - பெலுகுறிச்சி (மாற்றுப்பாதை)

 கொல்லிமலை

கொல்லிமலை


கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

Karthickbala

கொல்லிமலை - கோத்தகிரி

கொல்லிமலை - கோத்தகிரி


கொல்லிமலையிலிருந்து கோத்தகிரி ஏறக்குறைய 5 மணி நேரம் ஆகிறது. உங்கள் வசதிக்கேற்ப பயணத்தைத் திட்டமிடுங்கள்.

மூன்று வழித்தடங்கள் எளிமையாக பார்க்கப்படுகின்றன.

1 கலங்கனி - ஆகனூர் - காக்காபாளையம் - அவினாசி - மேட்டுப்பாளையம்

2 சேர்ந்தமங்கலம் - நாமக்கல் - பரமத்திவேலூர் - அழகுமலை- பல்லடம் - மேபா

3 நாமக்கல்லிலிருந்து காங்கேயம் - சிவன்மலை - அவினாசி மேட்டுப்பாளையம்

கோத்தகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை. கிருத்துவ மதபோதகரின் மகனாகப் பிறந்த ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் என்பவர் இங்கிருந்து தான் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.

Natataek

 கோத்தகிரி - ஊட்டி

கோத்தகிரி - ஊட்டி

கோத்தகிரியிலிருந்து ஊட்டிக்கு 1மணி நேரம் ஆகும். இது 30கிமீ தொலைவாகும். இரண்டு வழித்தடங்கள் உள்ளன.

 ஊட்டி

ஊட்டி

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

 ஊட்டி - கெட்டி

ஊட்டி - கெட்டி

ஊட்டியிலிருந்து அரைமணி நேரத்தில் கெட்டியை அடையலாம்.

கெட்டி பள்ளத்தாக்கு

கெட்டி பள்ளத்தாக்கு

இது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் ஆகும். கமல்ஹாசன் தன் படத்தில் காட்டிய ஒரு இடம் அதன்பிறகு இது பல்வேறு சுற்றுலாப்பயணிகளால் கவனிக்கப்பட்டு. தற்போது பிரபல சுற்றுலாத் தளமாக உள்ளது.

Prof. Mohamed Shareef

கெட்டி - குன்னூர்

கெட்டி - குன்னூர்


கெட்டியிலிருந்து அரை மணிநேரத்தில் குன்னூரை அடையலாம். இரண்டு பாதைகள் உள்ளன.

சிறந்தவழி: பிளாக் பிரிட்ஜ் - வெலிங்க்டன் - போட்ஹவுஸ் - குன்னூர்

குன்னூர்

குன்னூர்

குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது. உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல் உங்களை உடனடியாக காதலில் வீழ்த்துகிறது. தனிப்பட்ட மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்ற நீலகிரி தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.

Shijan Kaakkara

குன்னூர் - டாப்ஸ்லிப்

குன்னூர் - டாப்ஸ்லிப்

குன்னூரிலிருந்து டாப்ஸ்லிப் கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகின்றது. 174கிமீ தொலைவில் இருக்கும் டாப்ஸ்லிப்பிற்கு மூன்று வழித்தடங்களில் பயணிக்கலாம்.

1 அன்னூர் - சுல்தான்பேட்டை - பொள்ளாச்சி

2 அன்னூர் - வெள்ளாளூர் - பொள்ளாச்சி

3 கோவை - பொள்ளாச்சி

 டாப்ஸ்லிப்

டாப்ஸ்லிப்

பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது டாப்ஸ்லிப் எனும் சொர்க்கம். இங்கு வனத்துறை அனுமதி பெற்றே செல்லமுடியும். அருகிலேயே அம்பராம்பாளையத்தில் அழகிய ஆறு உள்ளது. வனத்துறை அனுமதியுடன், ட்ரீஹவுஸ் எனப்படும் மரவீட்டில் தங்குவதென்பது மிக அற்புதமான உணர்வாக இருக்கும்.

டாப்ஸ்லிப் - கொடைக்கானல்

டாப்ஸ்லிப் - கொடைக்கானல்

4 மணி நேரங்கள் ஆகின்றன. இரண்டு வழித்தடங்கள் பயணிக்க ஏதுவாக உள்ளன.

1 ஆனைமலை - பழனி - கொடைக்கானல்

2 உடுமலைப்பேட்டை - பழனி கொடைக்கானல்

 கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை "மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

கொடைக்கானல் - மாஞ்சோலை

கொடைக்கானல் - மாஞ்சோலை

கொடைக்கானலிலிருந்து மதுரை திருநெல்வேலி வழியாக 7 மணி நேரம் வரை ஆகலாம்.

மாற்றுப்பாதை அதே நேரம் ஆனாலும். 297கிமீ தூரம் வரும்.

 மாஞ்சோலை

மாஞ்சோலை

மாஞ்சோலை மலை என்ற மலை வாழிடம் தேயிலை தோட்டத்திற்கு பெயர் போன்றது. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர் இருக்கும். பல ரகத்து தேயிலைச் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இயற்கை எழிலுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது இந்த மலை. இந்த மலையின் அமைதியான சூழல் இங்கு வருபவர்களுக்கு மன அமைதியையும் ஓய்வையும் தரும். கக்கச்சியும், நலுமுக்கும் மாஞ்சோலை மலையின் அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

Archana Venkatraj

Read more about: travel hills tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்