Search
  • Follow NativePlanet
Share
» »வாழ்நாளை முழுமையாக்கும் காளகஸ்தி..! ஏன் தெரியுமா ?

வாழ்நாளை முழுமையாக்கும் காளகஸ்தி..! ஏன் தெரியுமா ?

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான காளகஸ்தியில் எந்தெந்தக் கோவில்களுக்கு எல்லாம் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என தெரிந்யுமா ?

பொதுவாகவே, மானுடத்தின் வாழ்நாளை முமையாக்குவது ஆன்மீகத் தலங்கல்தான் என நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். நாம் வாழ்கின்ற நாட்களில் ஒரு சில கோவில்களுக்கு கட்டாயம் சென்று வழிபட வேண்டும் என சில கூற்றுக்களும் உள்ளன. வாழ்வின் இறுதி நாட்களை இத்தலங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி, புன்னிம் பெருகும் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையாகவும் உள்ளது. அவ்வாறு நம் வாழ்நாளை முழுமையாக்கும் கோவில்கள் ஒட்டுமொத்தமுமாக குவிந்துள்ள இடம் எதுவென்றால் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான காளகஸ்தி ஆகும். காளகஸ்தியில் எந்தெந்தக் கோவில்களுக்கு எல்லாம் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என தெரிந்துகொள்வோம்.

துர்காம்பிகா கோவில்

துர்காம்பிகா கோவில்


காளஹஸ்தி நகரத்தில் உள்ள துர்காம்பிகா கோவில் துர்க்காம்பிகைக்கான மிகப்பழமையான கோவிலாகும். பெரும்பாலான பெண் தெய்வங்கள் மலையில் வீற்றிருப்பது போல இந்த கோவிலும் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. காளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் ஒரு மலையின்மீது இந்த கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழிற்காட்சிகள் நிறைந்த இடம் என்பதால் இந்த கோவில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் விரும்பி பயணம் செய்யப்படுகிறது. அகலமான படிக்கட்டுகள் இம்மலைக்கோவிலின் அடிவாரத்திலிருந்து உச்சி நோக்கி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. ஆக்க சக்தியின் ரூபமாக கருதப்படும் இந்த துர்க்காம்பிகை பெண்தெய்வம் உள்ளூர் பக்தர்களால் பெரிதும் பூஜிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த மலைக்கோவிலுக்கு பயணம் செய்கின்றனர்.

wikimedia

காளஹஸ்தி கோவில்

காளஹஸ்தி கோவில்


காளஹஸ்தி நகரத்திலேயே மிகவும் பிரபலமான இந்த காளஹஸ்தீஸ்வரர் கோவில் முக்கியமான சைவத்திருத்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது. திருப்பதியிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோவில் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய வாயுவிற்காக எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தை கொண்டுள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் சிவனின் வடிவமாக காளஹஸ்தீஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறது. புராணக்கதைகளின்படி பக்த கண்ணப்பர் இந்த கோவில் ஸ்தலத்தில் ஆதியில் வீற்றிருந்த லிங்கத்துக்கு தனது கண்ணையே அர்ப்பணித்ததாக சொல்லப்படுகிறது. சிவபெருமானை வழிபடுவதற்காக மட்டுமல்லாமல், ராகு மற்றும் கேது தொடர்புடைய ஜாதக தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு பக்தர்கள் விசேஷ பூஜைகள் செய்ய வருகை தருகின்றனர். பெரும்பாலும் திருப்பதிக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருமே காளஹஸ்திக்கும் பயணம் செய்து இந்த காளஹஸ்தீஸ்வரரை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Balaji101mails

பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில்

பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில்


காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்று எனும் புகழைக்கொண்டுள்ளது. உண்மையில் இது ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலின் ஒரு அங்கமேயாகும். இங்கு குடி கொண்டிருக்கும் வரதராஜ சுவாமியை வணங்க ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் இங்கு பயணம் செய்கின்றனர். சமீபத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது இந்த கோவில் அனைவரது கவனத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Ssriram mt

பரத்வாஜ தீர்த்தம்

பரத்வாஜ தீர்த்தம்


காளஹஸ்தி கோவிலுக்கு கிழக்குப்பகுதியில் மூன்று மலைகளுக்கு நடுவில் இந்த பரத்வாஜ தீர்த்தம் அமைந்துள்ளது. திரேதா யுகத்தின்போது இந்த மலையில் தவம் புரிந்து வசித்ததாக சொல்லப்படும் பரத்வாஜ முனிவரின் பெயரினால் இந்த தீர்த்தக்குளம் அழைக்கப்படுகிறது. இந்த பரத்வாஜ தீர்த்தம் அமைந்திருக்கும் பள்ளத்தாக்குப்பகுதியானது பசுமையான மலைச்சூழலின் பின்னணியில் பளிங்கு போன்ற தெளிந்த நீருடன் பள்ளத்தாக்குப்பிரதேசத்தின் வழியே ஓடி வரும் நீரோடையுடன் காட்சியளிக்கிறது. இந்த அற்புதமான சூழலில் புனித நீராட்டுக்கான தீர்த்தக்குளத்தை உருவாக்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.

Srikalahasti

சதுர்முகேஸ்வரா கோவில்

சதுர்முகேஸ்வரா கோவில்


காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த சதுர்முகேஸ்வரா கோவில் சிவன் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கும் அமைக்கப்பட்டுள்ள கோவிலாகும். இந்த இரு கடவுளர்கள் குறித்த ஒரு புராணக்கதைக்காக பெயர் பெற்றுள்ள இந்த கோவில் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். புராணிக நம்பிக்கையின்படி, பிரம்மாவின் ஆக்கும் சக்தியை மரத்துப்போக வைத்திருந்த சில பாவங்களை போக்கிக்கொள்ள இந்த தலத்தில் அவர் கடும் தவம் இருந்ததாகவும், இறுதியில் சிவபெருமான் பிரம்மாவின் பாவங்களை போக்கி அருளியபின் பிரம்மா தனது உயிர்ப்படைப்பு தொழிலை தொடர்ந்தார் என்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பம்சமாக இங்குள்ள சிவலிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளையும் நோக்கியவாறு உள்ளன. சதுர்முகம் என்பதற்கு நான்கு முகங்கள் என்பது பொருளாகும். சைவ மார்க்கத்தில் பற்றுடையவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலுக்கு வருகை தருவதை வழக்காமாக கொண்டுள்ளனர். இந்த கோவிலின் சுவர்களின் சிவபெருமான் சம்பந்தப்பட்ட புராணச்சம்பவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Ashay vb

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X