Search
  • Follow NativePlanet
Share
» » இனி ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்!

இனி ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்!

விமானப் பயணத்தைப் போலவே இனி ரயில்களிலும் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதற்கு கட்டணம் விதிக்கப்படும். மேலும், நீங்கள் முன்பதிவு செய்யாமல் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதைக் கண்டால், நீங்கள் சாதாரண கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு மேல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!

எடுத்துச் செல்லும் சாமான்களுக்கு வரம்பு விதித்த இந்திய ரயில்வே

இந்திய மக்களின் உயிர்நாடியாக இருக்கும் ரயில் போக்குவரத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் எவ்வளவு சாமான்கள் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் நிலை இப்போது மாறிவிட்டது. முன்பெல்லாம் மக்கள் தங்கள் வீட்டு மொத்த சாமான்களையே ரயிலில் எடுத்துச் செல்வார்கள், ஆனால் இனி அப்படி செய்ய முடியாது. இப்போது, இந்திய ரயில்வே ஒருவர் சுமந்து செல்லும் எடையின் வரம்பை குறிப்பிட்டுள்ளது.

irctc travel

ஒவ்வொரு வகுப்பிற்கு ஏற்றார்போல் எடை வரம்பு

வெவ்வேறு ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வெவ்வேறு லக்கேஜ் எடை வரம்புகள் உள்ளன. ஸ்லீப் கோச்சிற்கான டிக்கெட் உள்ள ஒருவர் 40 கிலோ வரை சாமான்களை எடுத்துச் செல்லலாம். ஏசி இரண்டு அடுக்குகளில் பயணிக்கும் பயணிகள் 50 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். ஏசி முதல் வகுப்புக்கு டிக்கெட் உள்ளவர்கள், பயணத்தின் போது 70 கிலோ வரை எடுத்துச் செல்ல முடியும். அனைத்து வகுப்பினரையும் விட ஏசி முதல் வகுப்புக்கு அதிக எடை வரம்பு உள்ளது.

விமானங்களைப் போல மாறிய இந்திய ரயில்கள்

இதற்கு முன்பு, ரயில்களில் எங்காவது செல்லும்போது பயணிகள் அதிக எடை மற்றும் பல பைகளை எடுத்துச் சென்றனர். ஆனால் இந்திய ரயில்வேயின் இந்த புதிய விதியின் அறிவிப்புக்குப் பிறகு இவை அனைத்தும் மாறி வருகின்றன. இந்த புதிய வழிகாட்டியானது, அனைத்து விமான நிறுவனங்களும் ஒரு விமானத்தின் வெவ்வேறு வகுப்புகளில் பயணிக்கும் வெவ்வேறு பயணிகளுக்கு ஒரு திட்டவட்டமான எடை வரம்பை குறிப்பிடும் விமானங்களைப் போலவே மாறிவிட்டது.

irctc travel

விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம்

இந்திய ரயில்வே, பயணிகள் எடுத்துச் செல்லக்கூடிய லக்கேஜ் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், விதிகளை யாராவது பின்பற்றாவிட்டால் பின்விளைவுகளும் உண்டு. யாராவது லக்கேஜ் கொடுப்பனவு வரம்பை பின்பற்றவில்லை என்றால், அந்த பயணி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்களிடமிருந்து இந்திய ரயில்வே அபராதம் விதிக்கவும் வழிவகை செய்துள்ளது.

உங்கள் சாமான்களை எவ்வாறு பதிவு செய்வது?

உரிமையாளர் செல்லும் அதே ரயிலில் பயணிக்கும் சாமான்கள் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு நிலையத்தின் லக்கேஜ் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது தங்கள் லக்கேஜையும் முன்பதிவு செய்து கட்டணத்தை செலுத்தி விடும் பட்சத்தில் உங்களது சாமான்கள் பாதுகாப்பாக உங்களுடன் பயணிக்கலாம்.

முன்பதிவு செய்யப்படாத சாமான்களை எடுத்துச் செல்வதற்கு என்ன அபராதம்

பயணத்திலோ அல்லது செல்லும் இடத்திலோ முன்பதிவு செய்யப்படாத அல்லது பகுதியளவு முன்பதிவு செய்யப்பட்ட சாமான்கள் இலவசக் கொடுப்பனவை விட அதிக எடை கொண்ட பயணிகளைக் கண்டறிந்தால், அதற்குப் பதிலாக லக்கேஜின் இலவச அலவன்ஸை விட அதிகமான முன்பதிவு செய்யப்படாத எடைக்கு ஆறு மடங்கு கட்டணம் விதிக்கப்படும்.

இவற்றை கவனத்தில் வைத்துக் கொண்டு இனி ரயிலில் உங்களது லக்கேஜ்களை எடுத்துச் செல்லவும்!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+