Search
  • Follow NativePlanet
Share
» » மதுரையில் பாரம்பரிய பல்லுயிர் தளம் – இது மதுரைக்கே பெருமையான தருணம்!

மதுரையில் பாரம்பரிய பல்லுயிர் தளம் – இது மதுரைக்கே பெருமையான தருணம்!

மதுரை மாவட்டத்தின், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவே மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாகும். இதனால் மதுரையைச் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களில் ஒன்று கூடுதலாக இணைந்துள்ளது. குறிப்பாக இந்தப் பகுதி ஏன் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பற்றி இங்கே காண்போம்!

arittapattimaduraitamilnadu

பல்லுயிர் பாரம்பரிய தளம்

பல்லுயிர் பாரம்பரிய தளம் (Biodiversity Heritage Site) என்பது தனித்துவமான பல முக்கிய உயிரினங்கள், வரலாறு மற்றும் கலாச்சார அம்சம் கொண்ட புதை படிவங்கள், அரிய வகை உயிரினங்கள் என வளமான பல்லுயிர் அம்சம் சுற்றுச்சூழல் அமைப்புகளாகும். ஆனாலும் அவை எளிதில் பாதிப்படையக்கூடியவை. உயிரியல் பன்முகத்தன்மை சட்டப் பிரிவு 37 இன் படி, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.

Arittapatti

அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தளம்

அரிட்டாபட்டி ஏழு தரிசு கிரானைட் மலைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. இங்கு லக்கர் பால்கன், ஷாஹீன் பால்கன் மற்றும் போனெல்லியின் கழுகு உட்பட 250 வகையான பறவைகள் உள்ளன. இது இந்திய பாங்கோலின், ஸ்லெண்டர் லோரிஸ் மற்றும் மலைப்பாம்புகள் போன்ற வனவிலங்குகளின் தாயகமாகவும் உள்ளது.

Arittapatti,Madurai

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி

பல மெகாலிதிக் கட்டமைப்புகள், பாறை வெட்டப்பட்ட கோயில்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் மற்றும் ஜெயின் படுக்கைகள் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்களும் உள்ளன. இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும் உள்ளன, 1,200 வகையான மீன் இனங்களும், 600 வகையான பூச்சி இனங்களும் வாழ்ந்தற்கான சான்றுகள் உள்ளன.

Arittapatti, Madurai, Tamil Nadu

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

பல்லுயிர் இழப்பைத் தடுக்கவும், பழங்கால கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தின் பரிந்துரையின் பேரில், அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தளமாக மாநில அரசு அறிவித்துள்ளது. பல்லுயிர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இதன் முயற்சியாகும். அதே நேரத்தில் அதைச் சார்ந்திருக்கும் சமூகத்தையும் பாதுகாக்கிறது. நிலையான வளர்ச்சியின் (sustainable development) ஒரு மாடல் என்பது தலைமுறை தலைமுறையாக உயிர் வளங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. மேலும், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் சமூகங்களின் தன்னார்வ பங்கேற்பைக் குறிக்கிறது.

இந்த அறிவிப்பு, உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன், பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இதனால் அரிட்டாபட்டியின் வரலாற்று மற்றும் உயிரியல் களஞ்சியம் பாதுகாக்கப்படுவதோடு இப்பகுதியில் சுற்றுலாவும் மேம்படும்!

Read more about: arittapatti madurai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X