Search
  • Follow NativePlanet
Share
» »வாவ்... மஹாபலிபுரத்துல இப்பிடியெல்லாம்கூட அழகான இடங்கள் இருக்கா?

வாவ்... மஹாபலிபுரத்துல இப்பிடியெல்லாம்கூட அழகான இடங்கள் இருக்கா?

மஹாபலிபுரம் என்று அழைக்கப்பட்டாலும், இதன் அழகிய பெயர் மாமல்லபுரம் என்பதாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரையில் அமைந்துள்ள இந்த பகுதி கடற்கரை கோவிலுக்கும், பல்லவ மன்னர்களின் துறைமுகம், சிற்பக்கலை, கட்டிடக் கலைக்காகவும் பெயர் பெற்று விளங்குகிறது. இது யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சரி.. வாருங்கள் மஹாபலிபுரம் எப்படி செல்வது, எப்போது செல்வது, என்னென்ன செய்வது, எங்கெல்லாம் செல்வது உள்ளிட்ட பல தகவல்களையும் இந்த கட்டுரையில் காண்போம்.

Cover pic Pc: Vikas Rana

 எப்படி செல்வது

எப்படி செல்வது

சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு பயணிக்கலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நகரங்களிலிருந்தும் மஹாபலிபுரத்துக்கு பேருந்து வசதிகளும் இருக்கின்றன.

Namrta Rai

 என்னென்ன காண்பது

என்னென்ன காண்பது

மஹாபலிபுரம் சென்றவும் பலரும் கடற்கரையில் நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றனர். ஆனால் உண்மையில் மஹாபலிபுரத்தில் ரசிப்பதற்கு கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளம் இருக்கின்றன. வாருங்கள் காண்போம்.

மாமல்லபுரத்தில் சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம். பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில்,சோழமண்டல் கலைக்கிராமம் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

Karthik Easvu

சோழமண்டல் கலைக்கிராமம்

சோழமண்டல் கலைக்கிராமம்

சோழமண்டல் கலைக்கிராமம் மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Destination8infinit

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் கடற்கரை

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் கடற்கரை

கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும்.

Jay Sands

இதர சுற்றுலா அம்சங்கள்

இதர சுற்றுலா அம்சங்கள்

நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது. இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சுற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.

Komatlagowtham

கடற்கரைக் கோவில்

கடற்கரைக் கோவில்

*கடற்கரை கோயில் எனப்படும் இந்த கலையம்சம் நிரம்பிய புராதனக்கோயில் கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானக்கோயில் ஆகும்.

*மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்னங்களில் ஒன்றாக வீற்றிருக்கும் இந்த கோயில் யுனெஸ்கோ அமைப்பினால் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

*கடற்கரை கோயில் எனப்படும் இந்த கலையம்சம் நிரம்பிய புராதனக்கோயிலில் சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன.

*சைவம் வைணவம் போன்ற அனைத்து மரபுகளும் ஒன்றாக இக்கோயிலில் இடம் பெற்றிருப்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

Bhaskar Dutta

 பஞ்சபாண்ட ரதம்

பஞ்சபாண்ட ரதம்

*ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப்பாறையை தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும்.

*கடற்கரைக்கோயிலைப்போன்றே இவையும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த ஐந்து ரதக்கோயில்களும் தனித்தனி பாறைக்குடைவு அமைப்புகளாக தனித்தன்மையான வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கின்றன

Arupparia

புலிக்குகை

புலிக்குகை

புலிக்குகை எனப்படும் இந்த பாறைக்குடைவு கோயில் வளாகம் மாமல்லபுரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது.

புலிக் குகை என்றவுடன் பயப்படவேண்டாம். வாயிலில் புலித் தலை சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

கடற்கரையை ஒட்டியே தனிமையான சூழலை கொண்டிருப்பதால் முக்கியமான சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த கோயில் வளாகம் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது

Ksaravanakumar

அர்ஜுனன் தபஸ்

அர்ஜுனன் தபஸ்

*அர்ஜுனன் தபஸ் எனும் பாறைச்சிற்ப அமைப்பு இந்தியாவிலேயே வித்தியாசமான சிற்பக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

*43 அடி உயரம் கொண்ட அர்ஜுனன் தபஸ் ஒரு பிரம்மாண்ட காட்சித்திரை போன்று செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை திறந்த வெளி பாறை அமைப்பில் புடைப்புச்சித்திரங்களாக காட்சியளிக்கின்றன.

*காட்சித்திரை போன்ற ஒரு பாறை முகப்பில் மனிதர்கள், விலங்குகள் என்று பிரமிக்க வைக்கும் சிற்பத்தொகுதியை அக்காலத்திய சிற்பிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

McKay Savage

 முதலைப்பண்ணை

முதலைப்பண்ணை

*முதலைப்பண்ணை மாமல்லபுரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

*இந்திய மற்றும் ஆப்பிரிக்க முதலைகளை பாதுகாப்பான சூழலில் வளர்த்து இனப்பெருக்கம் செய்விக்கும் நோக்கத்துடன் இந்த பண்ணை துவங்கப்பட்டிருக்கிறது. இன்று 5000 த்துக்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

*இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப்பண்ணையான இது 3.2 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.

Rasnaboy

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

மஹாபலிபுரம் படங்கள்

மஹாபலிபுரத்தின் அழகிய புகைப்படங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more