» » 100 கோடி வருமானம்..உலகிலேயே நெம்.1...அசத்தும் சலவைத் தொழிலாளர்கள்

100 கோடி வருமானம்..உலகிலேயே நெம்.1...அசத்தும் சலவைத் தொழிலாளர்கள்

Written By: Udhaya

முன்பெல்லாம் அன்றாடம் நம் உணவு, உடை, இருப்பிடத்தை நமக்கு நாமே பராமரித்து வந்தோம். ஆனால் நகர நாகரிகம் வளர்ச்சியடைந்து நம் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கச்செய்து, நம் உடைமைகளைக் கூட அடுத்தவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய பணித்துவருகிறோம்.

வேகமான இந்த காலத்தில் இதுவும் ஒரு தொழிலாக லாபமிக்க தொழிலாக பார்க்கப்படுகிறது. இவர்கள் பெரிய நீர்நிலைகளிலிருந்து துணிகளை துவைத்து காயவைத்து தேய்த்து தருகின்றனர். பெரும்பான்மையான நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கூட இந்த டோபிக்கள் அன்றாடம் துணி சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரி... உலகிலேயே மிகப்பெரிய டோபிலேண்ட் எங்குள்ளதுனு தெரிஞ்சிக்கணுமா? தொடர்ந்து படிங்க

ஆராய்ச்சியாளர்களையே வாயைப் பிளக்கவைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

மஹாலக்ஷ்மி டோபிகாட்

மஹாலக்ஷ்மி டோபிகாட்

மஹாலக்ஷ்மி டோபிகாட் மும்பையில்
மஹாலக்ஷ்மி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சலவைசெய்யும் இடமாகும்.

இது 1890ம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களால் ஏற்படுத்தப்பட்டது.

Pc: MM

100 கோடி வருமானம்

100 கோடி வருமானம்

இங்குள்ள தொழிலாளர்கள் மொத்தம் ஏறத்தாழ 7000பேர். இவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரம் பகுதி நேரம் முறையில் உழைக்கின்றனர். இவர்களின் மொத்த வருமானம் 100 கோடி ஆகும்.

PC: Siddhartha Kandoi

எப்படி வேலை செய்கிறார்கள்

எப்படி வேலை செய்கிறார்கள்

துவைத்தல், காயவைத்தல், தேய்த்தல் என அனைத்து வேலைகளையும் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இந்த ஏழாயிரம் பேரும் இப்படியே ஒற்றுமையாக குழுப்பணியாற்றுவதால் இவர்களுக்கு குழப்பங்கள் என்பது எழாமல் உள்ளதாக கூறுகின்றனர் இவர்கள்.

சுற்றுலாத்தளம்

சுற்றுலாத்தளம்

எல்லாம் சரி... இவை ஏன் சுற்றுலாப் பட்டியலில் வகைப்படுத்திருக்கிறீர்கள் என எங்களை நீங்கள் கேட்கலாம். என்னதான் இது அவர்களின் தொழிலாக இருந்தாலும் இத்தனை பேர் பணிபுரியும் இந்த இடத்தை நீங்கள் பார்க்கவேண்டும்தானே..

சரி இதனருகில் இருக்கும் மற்ற சுற்றுலாத்தளங்களையும் கண்டு களிக்கலாம்

Pc: Clayton Tang

ஹேங்கிங் கார்டன்ஸ், மும்பை

ஹேங்கிங் கார்டன்ஸ், மும்பை

ஹேங்கிங் கார்டன்ஸ் அல்லது பெரோஷா மேத்தா கார்டன் மலபார் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் தான் இது தொங்கும் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இதன் அழகை வரும் புகைப்படங்களில் காண்போம்

PC: A.Savin

கார்டன் நீரூற்று

கார்டன் நீரூற்று

கார்டன் நீரூற்று

Pc: Nichalp

கார்டனின் பழைய புகைப்படம் 1905

கார்டனின் பழைய புகைப்படம் 1905

கார்டனின் பழைய புகைப்படம் 1905

PC: A.Savin

கார்டனின் மற்றொரு படம்

கார்டனின் மற்றொரு படம்

கார்டனின் மற்றொரு படம்

PC: A.Savin

நேரு அறிவியல் மையம்

நேரு அறிவியல் மையம்

நேரு அறிவியல் மையம்

நேரு அறிவியல் மையம் மும்பையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய மையமாகும்.

இது 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Pc: Ananyaalien

ரேஸ்கோர்ஸ் மசூதி

ரேஸ்கோர்ஸ் மசூதி

ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மசூதி மிகவும் பிரபலமானதாகும்.

இந்த பகுதியில் கட்டாயம் காணவேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று.

ஸ்ரீராம் மந்திர்

ஸ்ரீராம் மந்திர்

மஹாலக்ஷமி ரயில் நிலையம் அருகிலேயே அமைந்துள்ள இந்த மந்திர் மிகவும் சக்தி வாய்ந்தது,

Read more about: travel
Please Wait while comments are loading...