Search
  • Follow NativePlanet
Share
» »கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!

கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!

கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!

By Udhay

கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மலயாட்டூர், மேற்கு தொடர்ச்சி மலைகளையும், பெரியார் நதியையும் இணைக்கும் இடமாக இருப்பதுடன், நிலம், நீர் மற்றும் மலை ஆகிய மூன்றும் சங்கமிக்கும் வித்தியாசமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. மலயாட்டூர் நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது ஏசுநாதரின் சீடர்களில் ஒருவராக அறியப்படும் செயின்ட் தாமஸுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த தேவாலயம் கிறிஸ்தவர்களின் யாத்ரீக மையமாக மட்டுமல்லாமல் அதன் கட்டிடக் கலை அற்புதத்துக்காகவும் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகிறது.

கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!

Civildigital

மலயாட்டூர் நகரில் செயின்ட் தாமஸ் தேவாலயத்தை தவிர சர்ச் ஆஃப் மேரி இமாக்குலேட், செயின்ட் செபாஸ்டியன் சர்ச் போன்ற தேவாலயங்களையும் நீங்கள் பார்க்கலாம். இவைதவிர மலயாட்டூர் நகருக்கு நீங்கள் வரும் போது துர்கா தேவி கோயில், மஹாகனி தோட்டம், மூலம்குழி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வரலாம். மலயாட்டூர் நகரில் சிறிய உணவுக் குடில்கள் மற்றும் நிறைய குளம்பியகங்கள் உள்ளன. இங்கு நீங்கள் கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்கலாம். அதோடு திருவிழா காலங்களில் புனித யாத்ரிகர்களின் வசதிக்காக ஏராளமாக தற்காலிக உணவுக் குடில்கள் மலயாட்டூர் நகரில் திடீரென முளைக்கும். மலயாட்டூர் நகரம் கொச்சி நகரிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதுடன், அருகாமை நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. மலயாட்டூர் நகரின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்குமாதலால் பயணிகள் இந்த காலங்களில் மலயாட்டூர் நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. எனினும் பனிக் காலம் மலயாட்டூர் நகரை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.

கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!

Princebpaul0484

மலயாட்டூர் தேவாலயம் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஒருமுறை கிறிஸ்தவ மார்க்க உபதேசத்திற்காக ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் வந்ததாக நம்பப்படுகிறது. அதோடு அவர் வந்த காலத்தில் எங்கு கன்னி மேரியின் ஆலயத்தை நிறுவினாரோ, அதே பகுதியில்தான் இப்போது மலயாட்டூர் தேவாலயம் அமைந்திருக்கிறது. மலயாட்டூர் குன்றுகளின் உச்சியில் அமைந்துள்ள மலயாட்டூர் தேவாலயம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

கிறிஸ்துவின் நேரடி தூதர் வந்த இடம் மலயாட்டூர் ஒரு பயணம்!

Ranjithsiji

இந்த தேவாலயம் கிரேக்கோ-ரோமன் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளும், ஓவியங்களும் காணப்படுவதுடன், ஏசு கிறிஸ்த்துவால் போதிக்கப்பட்ட மகிழ்ச்சி தரும் ஐந்து ரகசியங்களும் தேவாலய சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அதோடு மார்தோம மண்டபம், தங்கச் சிலுவை, அற்புத நீரூற்று, பாறை ஒன்றில் காணப்படும் செயின்ட் தாமஸின் காலடித்தடம் மற்றும் அவருடைய முழு உருவச் சிலை போன்றவை தேவாலயத்தின் புகழுக்கு முக்கிய காரணங்களாக விளங்கி வருகின்றன. மேலும் மலயாட்டூர் தேவாலயத்தில் ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மலயாட்டூர் பெருநாள் என்ற திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

More News

Read more about: travel temple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+