Search
  • Follow NativePlanet
Share
» »மர்மமான மாயாறு பள்ளத்தாக்கு! மசினகுடி சுற்றுலாவில் சோகம் - நடந்தது என்ன?

மர்மமான மாயாறு பள்ளத்தாக்கு! மசினகுடி சுற்றுலாவில் சோகம் - நடந்தது என்ன?

மர்மமான மாயாறு பள்ளத்தாக்கு! மசினகுடி சுற்றுலாவில் சோகம் - நடந்தது என்ன?

By Udhay

எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை. சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான். உண்மையில் இது மாதிரி வேறு இடங்களே இல்லையா அப்படி என்ன பிரமாதம் என்று கேட்கலாம். இதுபோன்று பல இடங்கள் இருப்பினும் இன்று முடிவு செய்து நாளை கிளம்பலாம் என்றால் அது மசினகுடிதான். ஆம். தற்போது இளைஞர்கள் அதிகம் பேர் செல்வதும் செல்லவிரும்புவதும் இந்த இடத்துக்குதான். நமக்கு தெரிந்ததெல்லாம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி. அப்படி ஒரு அழகை கொண்ட இடம் இந்த இடங்களுக்கு அருகிலுள்ள மசினகுடி.. இங்குதான் விபத்து நடந்த மாயாறு எனும் பகுதி உள்ளது.

மசின குடியில் வந்து குவியும் இளைஞர்கள் - அப்படி என்னதான் இருக்கு அங்க?மசின குடியில் வந்து குவியும் இளைஞர்கள் - அப்படி என்னதான் இருக்கு அங்க?

 மனம்மயக்கும் கிராமம்

மனம்மயக்கும் கிராமம்


எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென ஓங்கி உயர்ந்த மரங்கள்.. பறவைகள், விலங்குகளின் வினோத ஓசைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது மசினகுடி கிராமம்.

Credit : OneindiaTamil

எப்படி செல்வது

எப்படி செல்வது

ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்துக்கு செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் இடம். மிக மிக அழகான இடம். முக்கியமான டவுன் என்றாலும் இங்கு வசிப்பது பெரும்பாலும் பழங்குடி மக்களே. பிக்னிக் செல்ல வேண்டுமானால் இளைஞர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் மசினகுடிதான்.

Credit : OneindiaTamil

 விலங்குகளுடன் ஒரு உயிர்ப்பு பயணம்

விலங்குகளுடன் ஒரு உயிர்ப்பு பயணம்

காரணம், மசினகுடியை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் காடுகள்தான். மான், யானை, சிறுத்தை, ஏன் புலி கூட அசால்ட்டாக நடமாடும். ஆனால் வனவிலங்குகளுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனத்துறையினருடன் பழங்குடி மக்களும் விலங்குகளை சேர்ந்தே பாதுகாத்து வருகிறார்கள்.
Credit : OneindiaTamil

 சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


மசினகுடியில் தேயிலை தோட்டங்கள், தெப்பக்காடு யானைகள் முகாம், ரப்பர் தோட்டங்கள், பறவைகள் சரணாலயம் என நிறைய இடங்கள் சுற்றுலா பயணிகளை தன்பக்கம் இழுத்து வருகிறது. குறிப்பாக கூட்டம் கூட்டமாக யானைகள் தனது குட்டிகளுடன் குளித்து, ஆட்டம்போடுவது கொள்ளை அழகு. இருந்தாலும் இரவு நேரங்களில் இந்த யானைகள் பிளிறும் சத்தம் ஊர்மக்களை மிரள வைக்கும்.
Credit : OneindiaTamil

நிபந்தனைகளும் விதிகளும்

நிபந்தனைகளும் விதிகளும்

பொதுவாக இந்த மசினகுடி பகுதியில் காட்டுக்குள் தனியாகவே யாரும் நடந்து செல்லக் கூடாது. ஆடு, மாடு மேய்க்க வருபவர்கள் எத்தனையோ பேர் சிறுத்தை, புலிக்கு இங்கு பலியாகி இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் மசினகுடி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் விடுத்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், சாலை ஓரங்களில் பேப்பர் போடக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, சாப்பிட்ட பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்களை போடக்கூடாது என்று எக்கச்சக்க நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
Credit : OneindiaTamil

மீறப்படும் விதிமுறைகள்

மீறப்படும் விதிமுறைகள்

ஆனால் சிலர் வனவிலங்குகளை பார்க்கும் ஆசையிலும், அதனை படம்பிடிக்கும் நோக்கத்திலும் வனத்துறையினருக்கு தெரியாமல் மசினகுடியை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் நுழைந்துவிடுவார்கள். இவர்களுக்கு உள்ளூர் மக்களில் ஒருசிலர் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்து தவறுகளை இழைத்து விடுவதுண்டு
Credit : OneindiaTamil

 வனத்துறைக்கு தெரியாமல் காட்டுப் பயணம்

வனத்துறைக்கு தெரியாமல் காட்டுப் பயணம்

அலட்சியமே காரணம் இப்படி வனத்துறைக்கு தெரியாமல் காட்டுக்குள் சென்ற வெளிநாட்டு நபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விலங்குகள் தாக்கி கோரமான முறையில் உயிரிழந்துள்ளனர். தகுந்த முறையில் பாதுகாப்பு இல்லாமல் இங்கு சுற்றுலா வரும் பயணிகளின் அலட்சியங்களே பெருமளவு உயிரிழப்புகளுக்கு காரணமாக விடுகிறது.
Credit : OneindiaTamil

விபத்து எப்படி?

விபத்து எப்படி?


வனப்பகுதி என்று தெரிந்தும், விலங்குகள் நடமாடும் இடம் என தெரிந்தும், அனுமதியின்றி போகக்கூடாது என்ற தடை உத்தரவு தெரிந்தும், ஒருசில சுற்றுலா பயணிகளின் இயற்கை ஆர்வம், அவர்களின் உயிரையே காவு வாங்க வைத்து விடுகிறது. சென்னையைச் சேர்ந்த 7 பேர் தற்போது மசினகுடி வனப்பகுதிக்குச் சென்று மாயமான சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

மசினகுடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாயாறு என்ற என்ற இடத்தில் செல்போன் சிக்னல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனவிலங்குகளால் 7 பேருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ வனத்துறை, காவல்துறை என அனைவருமே மாயாறு பள்ளத்தாக்கில் தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர். மசினகுடிக்கு செல்லும் 35-வது கொண்டை ஊசி வளைவில் காரில் சென்று கொண்டிருந்தனர். அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. அப்போது, காரில் பிரேக் பழுதடைந்ததாக தெரிகிறது. இதனால் கார் அங்கிருந்த மாயாறு பள்ளத்தாக்கை நோக்கி கீழே விழுந்துள்ளது.

Credit : OneindiaTamil

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X