Search
  • Follow NativePlanet
Share
» »மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?

மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?

மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?

By Udhay

மசுண்டா தாலவ் அல்லது தாலவ் பாலி என்று அழைக்கப்படும் இந்த ஏரி தானே மாவட்ட த்தில் மிகப்பெரிய, பிரசித்தமான ஏரியாகும். தானே நகர மையத்திலிருந்து 20 அல்லது 30 நிமிட தூரத்தில் இருக்கும் இந்த ஏரி தானே பிரதேசத்தின் மற்ற ஏரிகளை விட தனிச்சிறப்பை பெற்றுள்ளது.

மஹாரஷ்டிரா மாநிலத்தின் அழகான ஏரிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த ஏரியில் படகுச்சவாரி, வாட்டர் ஸ்கூட்டர் சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளுக்காகவெ உள்ளன. உள்ளுர் உணவை ருசித்துப்பார்க்க வசதியாக இந்த ஏரியை ஒட்டி பல உணவகங்களும் உள்ளன. பொதுவாக வாரக்கடைசியில் அலுப்பை போக்கி உற்சாகபடுத்திக்கொள்ளவும் பொழுது போக்கு உல்லாசங்களில் ஈடுபடவும் மக்கள் குடும்பத்துடன் இங்கு கூடுகின்றனர்.

மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?

Gautam Khetwal

தானே பகுதியிலேயே மிகப்பழமையான கோபினேஷ்வர் கோயில் இங்கு மசுண்டா ஏரியின் கரையில் அமைந்துள்ளது.இந்தக்கோயில் தன் பிறப்பை 810 மற்றும் 1240 ம் ஆண்டில் சில்ஹர வம்ச அரசர்களின் காலத்தில் கொண்டுள்ளது. அதற்கு பிந்தைய வரலாற்று காலத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியில் 1760 ம் ஆண்டு சர்சுபேதார் ராமாஜி மஹாதேவ் பிவால்கரால் கட்டப்பட்டு அவருக்குப்பின் பேஷ்வா சிம்மாஜி அப்பா என்பவரால் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பழமையான கலை அம்சங்களை கொண்டுள்ள இந்தக்கோயில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?

Gautam Khetwal

நீங்கள் ஒரு இயற்கை உபாசகராக இருக்கும் பட்சத்தில் தானே நகரத்தில் பார்க்க வேண்டிய முதல் 20 இடங்கள் பட்டியலில் இந்த ஏயூர் மலைகள் இடம் பெற வேண்டியது அவசியம். மக்கள் கூட்டமற்ற, மாசற்ற சுற்றுப்புற சூழல் உங்களுக்கு பிடித்தமானது எனில் ஏயூர் மலைகள் நிச்சயமாக உங்கள் உணர்வுகளை கவர்ந்திழுக்கும்.

மாமா பாஞ்சா மலைகள் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி தானேயிலிருந்து சிற்றுலா செல்வதற்கு சிறந்த இடம் என்பதால் வார இறுதி நாட்களில் இங்கு அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர். 150 வருடங்கள் பழமையை கொண்ட ஒரு கோயில் ஒன்றும் இங்குள்ளது. ஸ்வாமி மடம் என்பது இங்கு அவசியம் பார்க்க வேண்டிய ஆன்மீக மையமாகும்.

மசுண்டா தாலவ் மற்றும் ஏயூருக்கு ஓர் அசத்தல் பயணம் போலாமா?

Gautam Khetwal

இங்குள்ள அமைதியும் சாந்தமும் உங்கள் உணர்வுகளை வருடிக்கொடுப்பது போன்ற இயல்பைக்கொண்டிருக்கிறது. இந்த மலையில் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவும் நீங்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடமாகும். காட்டுயிர் ஆர்வலர்களுக்கு பிடித்தமான இந்தப் பூங்காவில் பலவிதமான தாவர மற்றும் விலங்கு வகைகளை பார்க்கலாம். 12 அரிய வகை விலங்குகளும்78 வகையான பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

Read more about: travel lake
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X