Search
  • Follow NativePlanet
Share
» »ஆசியாவின் சுத்தமான கிராமம் எது தெரியுமா?

ஆசியாவின் சுத்தமான கிராமம் எது தெரியுமா?

By Naveen

இப்போதெல்லாம் குப்பை இல்லாத இடத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக அறிமுகமான நெகிழி என்னும் பிளாஸ்டிக் கழிவுகள் நகரங்களிலும், கிராமங்களிலும் காணுமிடமெல்லாம் நிறைந்து கிடக்கின்றன. மக்காத தன்மையுடைய நெகிழி நிலத்தையும், காற்றையும் அதனோடு இயைந்து வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கேடுவிளைவித்து வரும் வேலையில் நெகிழியை தவிர்த்து ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக திகழ்கிறது வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் இருக்கும் 'மாவ்லின்னாங்' என்னும் கிராமம்.

இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் இந்த இடத்தை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

இயற்கை வனப்பு நிறைந்த வட கிழக்கு இந்திய மாவட்டமான மேகாலயாவில் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்தமாவ்லின்னாங் கிராமம்.

Ashwin Kumar

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங் கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமமாக சொல்லப்படுகிறது. அது எவ்வளவு உண்மை என்பதை ஒருமுறை இந்த கிராமத்திற்கு சென்றால் கண்குளிர காணலாம்.

நெகிழி பயன்பாடு முற்றிலுமாக இல்லாததே இந்த கிராமம் தூய்மையானதாக இருக்க காரணமாக இருக்கிறது.

Travelling Slacker

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

நெகிழி பயன்பாடு தேவைப்படும் இடங்களில் எல்லாம் இங்கே இயற்கையாக விளையும் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. கூடைகள், நடைபாலங்கள் மற்றும் வீடுகளில் கூட மூங்கிலே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இங்குள்ள வீடுகள் கற்களால் ஆனதாக இல்லாமல் கூரை வேயப்பட்ட குடிசைகளாகவே உள்ளன.

Travelling Slacker

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

இந்தமாவ்லின்னாங் மொத்தம் ஐநூறு பேரே வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் 'காசி' என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் மொத்த 96 வீடுகள் இருக்கின்றன.

அதிசயிக்கத்தக்க வகையில் இந்த கிராமத்தில் இருப்பவர்கள் 100% கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர்.

Travelling Slacker

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

இந்த கிராமம் 2003ஆம் ஆண்டு புகழ்பெற்ற டிஸ்கவரி இந்தியா பத்திரிக்கையால் ஆசியாவின் மிகவும் சுத்தமான கிராமமாகவும், 2005ஆம் ஆண்டு இந்தியாவின் சுத்தமான கிராமமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Ashwin Kumar

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

ஆசியாவின் சுத்தமான கிராமம் என்பதை தாண்டி இந்த கிராமத்தில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் 'வாழும் பாலங்கள்' தான். இந்த பாலங்கள் முற்றிலும் ஆலமரத்தின் வேர் மற்றும் விழுதுகளால் ஆனதாகும்.

roman korzh

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நீரோடைகளின் கரைகளில் வளரக்கப்பட்ட ஆலமரங்களின் விழுதுகளை பாக்கு மரகட்டைகளோடு பிணைத்து வளரச்செய்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக அப்படி வளர்ந்த விழுதுகள் இன்று இயற்கையான பாலமாக பயன்படுகின்றன.

roman korzh

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

பெரும்பாலும் மேகாலயா மாநிலத்தில் மட்டுமே காணப்படும் இவ்வகை வாழும் பாலங்கள் மனிதன் எவ்வாறு இயற்கையோடு இயைந்து இனிமையாக வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

இந்த வாழும் பாலங்களை காண்பதற்காகவே ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த கிராமத்திற்கு வருகை தருகின்றனர்.

roman korzh

மாவ்லின்னாங்:

மாவ்லின்னாங்:

இரைச்சலும், அசுத்தமும், மன உளைச்சலும் நிரம்பிய நகர வாழ்கையில் இருந்து சில நாட்கள் தப்பித்து அன்பான மக்கள் நிறைந்த, அழகான ஒரு ஊரில் சில நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் நிச்சயம் இந்த மாவ்லின்னாங் கிராமத்திற்கு வந்து சில நாட்களை செலவிடுங்கள்.

Travelling Slacker

மாவ்லின்னாங் - எப்படி அடைவது :

மாவ்லின்னாங் - எப்படி அடைவது :

தேசிய நெடுஞ்சாலை 40 மற்றும் 44 ஆகியவை ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் உயிர்நாடியாக செல்கின்றன. NH 40 குவஹாத்தி நகரத்தையும் NH 41 அஸ்ஸாம் மாநிலத்தின் தென்பகுதியையும் இணைக்கின்றன.

இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் வருடம் முழுக்க போக்குவரத்து நிரம்பியதாக காட்சியளிக்கின்றன. இவற்றின் வழியே சுற்றுலாவுக்கு தேவையான பேருந்துகள் மற்றும் வாகனச்சேவைகள் அதிகம் கிடைக்கின்றன.

Travelling Slacker

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மாவ்லின்னாங்கின் பேரழகை கண் முன் கொண்டு வரும் சில புகைப்படங்கள் !!

Travelling Slacker

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மாவ்லின்னாங்கின் பேரழகை கண் முன் கொண்டு வரும் சில புகைப்படங்கள் !!

Travelling Slacker

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மாவ்லின்னாங்கின் பேரழகை கண் முன் கொண்டு வரும் சில புகைப்படங்கள் !!

Travelling Slacker

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மாவ்லின்னாங்கின் பேரழகை கண் முன் கொண்டு வரும் சில புகைப்படங்கள் !!

Editor GoI Monitor

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மாவ்லின்னாங்கின் பேரழகை கண் முன் கொண்டு வரும் சில புகைப்படங்கள் !!

Travelling Slacker

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மாவ்லின்னாங் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Travelling Slacker

Travelling Slacker

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X