Search
  • Follow NativePlanet
Share
» »கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்க்கு மெட்ரோ கனெக்ஷன் – கூடவே புதிய புறநகர் ரயில் ரயில் நிறுத்தம்!

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்க்கு மெட்ரோ கனெக்ஷன் – கூடவே புதிய புறநகர் ரயில் ரயில் நிறுத்தம்!

சென்னை மக்கள் பெரிதும் எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ சேவை வரப் போகிறது என தகவல்கள் வந்துள்ளது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரைவில் நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளது சென்னை மட்டுமல்லாமல் தமிழக மக்களையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அதுமட்டுமல்ல வண்டலூர் கிளாம்பாக்கம் இடையே புதிய புறநகர் ரயில் நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறதாம் தெரியுமா மக்களே?

சென்னையின் புதிய பஸ் ஸ்டாண்ட்

கோயம்பேடு பேருந்து நிலையத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புதிதாக கட்டப்பட்ட வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தன.

kilambakkambusstand1

புது பஸ் ஸ்டாண்ட்டினால் பயணிகள் அவதி

ஆனால், கோயம்பேடு போல அல்லாமல், கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளதால், வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் இணைப்பு இல்லாததாலும், புறநகர் ரயிலில் நிறுத்தம் இல்லாததாலும் கிளாம்பாக்கம் வருவதற்கும் போவதற்கும் பஸ் அல்லது வாடகை கார், ஆட்டோக்களையே பயணிகள் நம்பி இருக்க வேண்டியுள்ளது.

பேருந்து நிலையத்தில் இருந்து தூரத்தில் உள்ள ரயில் நிலையங்கள்

கிளாம்பாக்கத்தில் பயணிகள் ஏறுவதற்கும் டி-போர்டிங் செய்வதற்கும் இணைப்பு விருப்பங்கள் குறைவாக உள்ளன மற்றும் அணுக முடியாதவையாக உள்ளன. கிளாம்பாக்கம் மற்றும் சென்னையை இணைக்கும் நெருங்கிய ரயில் நிலையங்கள் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகும், இவை முறையே 2 மற்றும் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இருப்பினும், இந்த நிலையங்களுக்கு செல்ல, பயணிகள் ஆட்டோரிக்ஷாவில் செல்ல வேண்டும், டிரைவர்கள் ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

metroconnectiontokilambakkamnewbusstand1

தென் மாவட்ட பயணிகளால் MTC பேருந்துகளில் செல்ல முடிவது இல்லை

கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்கு MTC பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்த போதிலும், MTC யின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இந்த பேருந்துகளின் அதிர்வெண் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. பெரும்பாலான பயணிகள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நீண்ட தூரம் சென்று வருவதால், சாமான்களை எடுத்துச் செல்கின்றனர். இருப்பினும், உள்ளூர் MTC பேருந்துகளில் அத்தகைய லக்கேஜ்களுக்கு பிரத்யேக இடம் இல்லை, இதனால் பயணிகள் இந்த பேருந்துகளை திறம்பட பயன்படுத்த சிரமமாக உள்ளது.

ரூ.12000 கோடி செலவில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம்

இந்நிலையில்தான், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்ற மாஸ் அறிவிப்பை பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்கட்டமாக, பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான உயர் வழித்தடம், 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த பணிகளுக்கா ரூ.12000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

newsuburbanrailstation1

கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிறுத்தம்

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் லோக்கல் எலக்ட்ரிக் இரயில் நிலையங்களுக்கு மத்தியில் கிளாம்பாக்கம் பேருந்து அமையம் அமைந்துள்ளது. இரயில்வே தண்டவாளம் பேருந்து முனையத்திற்கு அருகாமையில்தான் செல்கிறது. இதன் காரணமாக, வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கத்திற்கு மத்தியில் புதியதாக இரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும், 6 மாதங்களுக்குள் இந்த பணிகள் முடிந்துவிடும் என சம்மந்தப்பட்ட இரயில்வே மேலளார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

விரைவில் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ

அதேபோல, பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது!

More News

    Read more about: chennai kilambakkam
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+