» »பழந்தமிழரின் குலதெய்வம் மூதேவி? மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

பழந்தமிழரின் குலதெய்வம் மூதேவி? மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

Posted By: Udhaya

மூதேவி நாம் ஒருவரை திட்டவேண்டுமென்றால் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல். செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக திணிக்கப்பட்ட பெயர். உண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எங்கனம் பெருமை படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

எதிர்மறை

எதிர்மறை

அமங்கலமானவள், சோம்பேறி, எதற்கும் உதவாதவள் என்று மூதேவி யின் பொருளாக நாம் எதையெதையோ கருதிக் கொண்டிருக்கிறோம்.

injamaven

 முக்கிய தெய்வம் மூதேவி

முக்கிய தெய்வம் மூதேவி

இந்த மூதேவி என்பவள்தான் நம் முன்னோர்கள் அனுதினமும் வழிபட்டு வந்த மிகவும் சக்தி வாய்ந்த குலதெய்வம் என்றால் நம்புவீர்களா? முழுவதும் படியுங்கள். உங்களுக்கான ஆதாரம் இதோ...

Youtube

 தவ்வை என்கிற மூதேவி

தவ்வை என்கிற மூதேவி


தவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர்.

 சனீஸ்வரனுக்கு என்னமுறை

சனீஸ்வரனுக்கு என்னமுறை


தவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார். இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

VasuVR

 மற்றபெயர்கள்

மற்றபெயர்கள்


தவ்வை,ஜேஸ்டா, மூத்ததேவி (இதுதான் மூதேவி என்று அழைக்கப்படுகிறது), மோடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

பழந்தமிழர் வழிபாடு

பழந்தமிழர் வழிபாடு

பழந்தமிழர் வழிபாடு இயற்கையிலிருந்து துவங்குகிறது. அவர்கள் வேம்பு, ஆல், அரசு எனும் மரங்களை கந்தளி எனும் பெயரோடு வணங்கியிருக்கிறார்கள்.

 மழைக்கடவுள்

மழைக்கடவுள்


நாம் இப்போது மழைக்கடவுளாக வணங்கும் வருணனுக்கு முன்பே மாரி எனும் பெயரில் மழைக்கடவுளாக வணங்கியிருக்கிறார்கள்.

 தவ்வை

தவ்வை

கொற்றவை எனும் காளிக்கு பிறகு தவ்வை எனும் சொல் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது உருவ வழிபாடில்லாமல் மரங்களையும், மழையையும் வணங்கி வந்த காலக்கட்டத்திலே எழுதப்பட்ட இலக்கியங்களிலும் தவ்வை எனும் பெயர் இருக்கிறது.

unknown

 திருமகளின் அக்கா

திருமகளின் அக்கா

நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

Raja Ravi Varma

உழவர்களின் தெய்வம் தவ்வை

உழவர்களின் தெய்வம் தவ்வை

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பல தவ்வை சிலைகள் விவசாய நிலங்களில் அதற்கு அருகாமையில் கிடைக்கப்பெற்றவை. இதனால் தவ்வை உழவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.Benjamín Preciado

 ஆரிய ஊடுருவல்

ஆரிய ஊடுருவல்

எப்படி எமனை எதிர்பதமான தெய்வமாக கட்டமைத்தார்களோ, அதன்படியே மூதேவியையும் எதிர்மறையாக சோம்பேறியாக ஆக்கிவிட்டனர் என குற்றம்சாட்டுகின்றனர் தமிழ் மீது பற்றுகொண்ட சிலர். உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல புலவர் என்பது இவர்களுடைய வாதம்.

VedSutra

பண்டைய தமிழர்கள்

பண்டைய தமிழர்கள்

பண்டைய தமிழர்கள் அறிவியல் அடிப்படையாகக் கொண்டு, கடவுளர்களை பெயரிட்டு அழைத்துவந்தபோது, வடமொழி நூல்கள் இவர்களை அமங்கலத்தின் வடிவமாக திரித்துவிட்டன.

A. Maiuri

கோயில்கள்

கோயில்கள்


தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்ஸாம் மாநிலத்தின் காமாக்யாவிலும் கோயில்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில் வழூவூரில் வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கொண்டீச்சுவரம் பசுபதி கோயில், திருவானைக்காவல் கோயில், கையிலாசநாதர்கோயில், கும்பகோணம் கும்பேசுவரர்கோயில், ஓரையூர் சிவன்கோயில், பெரணமல்லூர் திருக்கேசுவரர் கோயில் என தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன.
Subhashish Panigrahi

 கோயில்களின் விவரங்கள்

கோயில்களின் விவரங்கள்


இந்த கோயில்களின் விவரங்களை வரும் பதிவுகளில் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் நேட்டிவ் பிளானட்டுடன்.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்