Search
  • Follow NativePlanet
Share
» »மோர்பியும் அதன் மூன்று முக்கிய அம்சங்களும் - ஒரு பார்வை

மோர்பியும் அதன் மூன்று முக்கிய அம்சங்களும் - ஒரு பார்வை

மோர்பியும் அதன் மூன்று முக்கிய அம்சங்களும் - ஒரு பார்வை

மச்சு ஆற்றங்கரையின் அருகில் அமைந்திருக்கும் மோர்பி, ஐரோப்பியா மற்றும் நம் நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலைகளின் கலவைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்த நகரத்தை அடைய ஒரு தொங்கு பாலத்தை கடந்து வர வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் அக்காலத்து தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த மோர்பியும் அதன் முக்கியமான மூன்று இடங்களும் பற்றி இந்த பதிவில் காண்போம்.

நகர வடிவமைப்பு

நகர வடிவமைப்பு


இந்த நகரத்துக்குள் நுழைய மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இந்த மூன்று நுழைவாயில்கள் வழியாகவும் நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் கிரீன் சௌக்கிற்கு சுலபமாக நுழையலாம். ஐரோப்பிய வடிவமைப்பில் இந்நகரம் உருவாக்கப்பட்டுள்ளதால் கிரீன் சௌக்கை எந்த வழியாக வந்தாலும் சுலபமாக அடைய முடிகிறது.

Camaal Mustafa Sikan

 அரண்மனை

அரண்மனை

மோர்பியில் உள்ள தொங்கு பாலத்திற்கு அருகிலேயே தர்பார்கத் என்ற பழைய அரண்மனை ஒன்று உள்ளது. அழகாக செதுக்கப்பட்ட நுழைவு கதவுகளை கொண்ட இந்த அரண்மனை இப்போது ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்டது.

Camaal Mustafa

ஆன்மீக அதிசயங்கள்

ஆன்மீக அதிசயங்கள்

மோர்பியில் மணி மந்திர் என்ற கோவிலும் உள்ளது. இங்கே லக்ஷ்மி நாராயண், மஹாகாளி, ராம்சந்திரஜி, ராதா கிருஷ்ணா மற்றும் சிவபெருமானின் சிலைகள் உள்ளன. ஜெய்ப்பூர் கற்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜஸ்தான் ஸ்டைலில் பல செதுக்கல்களை காணலாம்.

Nitish.mano

 ராஜஸ்தான் கட்டிடக்கலை

ராஜஸ்தான் கட்டிடக்கலை

இங்குள்ள வெல்லிங்டன் செயலகத்தின் கட்டடக்கலையிலும் ராஜஸ்தான் ஸ்டைலை காணலாம். இங்குள்ள ஆர்ட் டெகோ அரண்மனை, ஐரோப்பாவில் உள்ள ஆர்ட் டெகோ இயக்கத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

Camaal Mustafa

போக்கு வரத்து

போக்கு வரத்து


மோர்பியிலுள்ள இரயில் நிலையம் ஐரோப்பிய மற்றும் ராஜஸ்தான் கட்டடக்கலையின் கலவையில் இருக்கும். மோர்பிக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் அகமதாபாத்தில் உள்ளது. குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகம் மோர்பிக்கு பேருந்து சேவைகளையும் அளித்து வருகிறது

Camaal Mustafa

 கிரீன் சௌக்

கிரீன் சௌக்

நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் கிரீன் சௌக்கை மூன்று வாயில்கள் வழியாக வரலாம். இந்த ஒவ்வொரு நுழைவாயிலும் ஒவ்வொரு பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜ்புட் மற்றும் இத்தாலிய வடிவமைப்புடன் கூடிய இந்த வாயில்கள் தனித்துவத்துடன் விளங்குகிறது

Camaal Mustafa

வெல்லிங்டன் செயலகம்

வெல்லிங்டன் செயலகம்

குஜராத்திலுள்ள மோர்பி நகரத்தில் அமைந்துள்ளது வெல்லிங்டன் செயலகம். ராஜஸ்தான் கட்டடக் கலையின் தாக்கத்தை கொண்டுள்ளதால் இது புகழ் பெற்று விளங்குகிறது.

Camaal Mustafa

ஆர்ட் டெகோ அரண்மனை

ஆர்ட் டெகோ அரண்மனை

1931-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆர்ட் டெகோ அரண்மனை, அதன் உள் அலங்காரங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இது குஜராத்திலுள்ள மோர்பியில் அமைந்துள்ளது.

Read more about: travel gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X