» »சென்னை அருகே இப்படியொரு அழகியத் தீவா...?

சென்னை அருகே இப்படியொரு அழகியத் தீவா...?

Written By: Sabarish

மனிதர்களின் நடமாட்டம் அற்ற அல்லது குறைந்த அளவிலான மக்கள் தொகைகொண்ட தீவு எனும் அற்புத உலகத்தை விரும்பாதவர்கள் இங்கே யாரும இருக்க மாட்டார்கள். தனிமையும், சுற்றிலும் நீரால் சூழப்பட்ட பேரழகும், ஆழ்ந்த மௌனத்தில் ஒலிக்கும் கடல் அலையின் ஓங்கார இசையும் மனதை புத்துணர்ச்சி அடையச் செய்வது மட்டுமின்றி ஓர் புதுவிதமான அனுபவங்களையும் அளிக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தீவுகள் இந்தியாவில் பல இருந்தாலும், ஒருசிலத் தீவுகள் நாம் எளிதில் அடையக் கூடியதாகவும், அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு தீவுக்கு சுற்றுலா போலாம் ரெடியா...!!!

அழகியத் தீவுகள்

அழகியத் தீவுகள்


தீபகற்ப பூமியான இந்தியாவில் வங்கக் கடல், இந்தியக் கடல் என மூன்று புறங்களும் நீரால் சூழ, ஒரு பகுதியே நிலமாக உள்ளது. இதில், கடல்நீரால் சூழப்பட்ட தீவுகளும் அடங்கும். அத்தகைய தீவுகளில் கல்பேணி தீவு, குரும்காட் தீவு, செயிண்ட் மேரி தீவு உள்ளிட்டவை அழகுகள் நிறைந்த சுற்றுலாவிற்கு ஏற்ற தீவுகளாக கருதப்படுகின்றன.

Vijay Tiwari

கல்பேணி தீவு

கல்பேணி தீவு


கொச்சியிலிருந்து சுமார் 150 மைல் தூரத்தில் அமைந்துள்ள கல்பேணி தீவு 2.8 கிலnலா மீட்டர் நீள தரைக்கடல் பகுதிக்காக புகழ்பெற்றது. அதாவது தரைக்கடல் என்றால் கடற்கரையை ஒட்டி ஆழம் குறைவான அலைகள் அற்ற படிகம் போன்ற தூய நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்ப்பரப்பாகும். இங்கு கடல் குளியல் மற்றும் ஸ்நார்க்கலிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம். இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்றால் கல்பேணி தீவின் இயற்கை அழகை முழுமையாக கண்டு ரசிக்க முடியும்.

Vaikoovery

குரும்காட் தீவு

குரும்காட் தீவு


ஆமை வடிவத்தில் காணப்படும் குரும்காட் தீவு கர்நாடகாவின் கார்வார் கடற்கரையிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு டால்பின் வேடிக்கை, பீச் வாலிபால், புதையல் வேட்டை போன்ற சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் குவிந்துகிடக்கின்றன. மேலும் இங்குள்ள கடற்கரைப்பகுதியில் மீன் பிடித்தல், ஆழ்கடல் நீச்சல் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டு மகிழலாம்.

Noronha3

செயிண்ட் மேரி தீவு

செயிண்ட் மேரி தீவு


கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

Man On Mission

சென்னைக்கு மிக அருகில்..!

சென்னைக்கு மிக அருகில்..!


சென்னையில் இருந்து சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடாவை ஒட்டியுள்ளது ஹோப் ஐலேண்டு எனப்படும் நம்பிக்கைத் தீவு. இதனையொட்டி அமைந்துள்ள துறைமுகம் உள்ளிட்டவை உங்களது மனைதைக் கொள்ளையடிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஹோப் தீவு

ஹோப் தீவு


ஆந்திராவின், காக்கிநாடா துறைமுகத்திலிருந்து 45 நிமிட பயணத்தில் வங்காள விரிகுடாவின் அமைந்துள்ள ஹோப் தீவை அடையலாம். சுமார், ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. கோதாவரி ஆற்றில் அடித்துவரப்பட்ட மணல்களால் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்தத் தீவு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துறைமுகம்

துறைமுகம்

இங்கே சுமார் 500 மீட்டர் நீளத்தில் 60 அடி ஆழத்தில் கடல் அலைகள் தாக்காதபடி படகுகளை நிறுத்துமிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனருகே உள்ள ஹைபிரிட் மாங்குரோவ் காடுகள் அடர் வனப்பகுதியாகும். இதில், புட்ரையா பகலு, சொரலகோண்டு பகலு எனும் இரண்டு குக்கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

NASA

வனவாழ்வு காப்பகம்

வனவாழ்வு காப்பகம்


ஹோப் தீவிற்கு பயணம் செய்தீர்கள் என்றால் ஆலிவ் ரிட்லி ஆமைகளை காக்கும் கொரிங்கா வனவாழ்வு காப்பகம், கோதாவரி ஆறும், கடலும் இணையும் பகுதி, என்டிஆர் கடற்கரை உள்ளிட்டவற்றை தவற விட்டுவிடாதீர்கள்.

రహ్మానుద్దీన్

எப்படிச்செல்வது?

எப்படிச்செல்வது?


சென்னையில் காக்கிநாடாவிற்கு விமானத்தில் பயணம் செய்தால் சராசரியாக 1.15 நிமிடங்களில் காக்கிநாடாவை அடைந்துவிடலாம். அங்கிருந்து பேருந்து, அல்லது டேக்சி வாகனங்கள் மூலம் துறைமுகத்தை அடைந்து படகுகள் மூலம் தீவை சென்றடையலாம். ஏர் இந்தியா, இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான சேவைகள் சென்னையில் இருந்து காக்கிநாடாவிற்கு உள்ளது. ராஜமுந்திரி விமான நிலையத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு டாக்சி அல்லது பேருந்து மூலம் வரலாம். காக்கிநாடா துறைமுகத்திலிருந்து படகு பிடித்தால் 7 கிலோ மீட்டர் கடந்து ஹோப் தீவை அடையலாம்.

ரயில் மூலமாக...

ரயில் மூலமாக...


சென்னையில் இருந்து ரயில் மூலமாக காக்கிநாடா பயணம் செய்தால் துறைமுகத்தின் அருகிலேயே சென்றடையலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சந்தகட்சி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், அசன்சல் எக்ஸ்பிரஸ், சலிமார் வார இரயில், விசாகப்பட்டிணம் ரயில் என பல இரயில் சேவைகள் உள்ளன.

Dineshbilla.kumar

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்