Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவில் நீங்கள் அதிகம் பாத்திராத , மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்!!

தென்னிந்தியாவில் நீங்கள் அதிகம் பாத்திராத , மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்!!

By Balakarthik Balasubramanian

ரகசியங்கள் நிறைந்த ஒரு இடமாக இந்தியா காணப்பட, பெருமளவில் அவை யாராலும் அறிந்திடாத, ஆராய்ந்திடாத ரகசியங்களாகவும் இருக்கிறது. அவற்றுள், தென்னிந்தியாவில்...விடுமுறையின்போது மனதை வருடும் இடங்கள், உங்களை வரிசைக்கட்டி வரவேற்று காத்துக்கொண்டுமிருக்கிறது.

மலபார் பகுதிகளில் காணும் அழகிய கடற்கரையின் அலைகள் சத்தம் ஆர்ப்பரிப்பதில் தொடங்கி, மேற்கு தொடர்ச்சியின் அமைதியான அழகான இடங்களும் நம்மை உற்சாகமூட்டுகிறது. இவ்வாறு கண்களை கொள்ளை கொள்ளும் இடங்கள் தென்னிந்தியாவில் பல காண அவற்றை காணாமல் நாம் இருப்பது சரிதானா?

விடுமுறைக்கு ஏற்ற இடங்களை தேர்ந்தெடுத்து, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தயாராக இருக்க, பல பெயர் பெற்ற இடங்கள் காணப்படும் போதிலும், இன்று பெரும்பாலான மக்கள், கூட்டம் குறைவாக வந்து செல்லும், யாராலும் அதிகம் தெரிந்திடாத இடத்தையே அவர்கள் மனம் தேட, அவர்களுடைய கண்களும் தொலைதூரம் நோக்கி பயணிக்கிறது.

உங்கள் பயணத்துக்கு ஏற்ற அழகிய இடங்கள் சில காணப்பட்டாலும், அவையும் தொலைதூரத்தில் அமைந்து மனதில் சந்தேகத்தை எழுப்புகிறது. சுற்றுலா பயிற்றுவிப்பாளரினால், நம்மை சுற்றியுள்ள பிரசித்திபெற்ற அழகிய இடங்கள் எது? என நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியதாகிறது.
இப்பொழுது, உங்கள் பயணத்துக்கு ஏற்ற அழகிய ஆர்வமூட்டும் இடங்கள் தென்னிந்தியாவில் என்னென்ன காணப்படுகிறது என நாம் பார்க்கலாம்.

 தலசேரி:

தலசேரி:


இதனை ‘தெல்லிசேரி' என்றும் அழைக்கப்பட, இந்த நகரத்தை ‘மலபாரின் பாரிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே சிறிய நகரத்தின் கடற்கரையில் மாலை நேரத்தை நாம் செலவிட, இந்த இடத்திற்கு ஏன் இத்தகைய பெயர் வந்தது என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

‘கேக், கிரிக்கெட், சர்க்கஸின் நகரம்' என்றழைக்கப்படும் இந்த தலசேரி, எண்ணற்ற சுற்றுலா இடங்களையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், இன்று வரை பயணிகளால் குறைவாக பார்க்கப்பட்ட ஒரு நகரமாகவும் காணப்படுகிறது.

Kerala Tourism

 தரங்கம்பாடி:

தரங்கம்பாடி:

பாடும் அலைகளின் இடம் என்னும் அர்த்தம் கொண்ட இந்த தரங்கம்பாடியின் கடற்கரை நகரமானது இந்த பெயருக்கு உயிர்கொடுத்து மனதில் உண்மையை உரைக்கிறது. 1620 முதல் 1845 வரை டேனிஷ் காலனியாக இதனை கருதப்பட, அதற்கு ஆதாரமாய் டான்ஸ்போர்க் கோட்டையானது கம்பீரமாக நின்று டேனிஷ் காலனித்துவ நகரத்தின் பெருமையை உணர்த்துகிறது.

இதனை ‘தரங்கம்பாடி' என்றும் அழைக்கப்பட, இந்த இடமானது நம்முடைய விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடமாக அமைந்து, தென்னிந்தியாவில் நாம் செல்லும் பயணங்களுள் புதுவித அனுபவம் ஒன்றையும் மனதில் ஏற்படுத்துகிறது.

Sumansukumar745

 பொள்ளாச்சி:

பொள்ளாச்சி:


கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும், காட்சிகளால் கண்களை கவருமோர் அழகிய சிறு நகரம் தான் இந்த பொள்ளாச்சியாகும். கடும் வெப்ப நிலைகளிலும் இந்த இடமானது மனதினை குதுகலத்தில் தள்ளி, இதமானதோர் உணர்வினை தருகிறது.
இந்த இடத்தில் காணப்படும் சாகச நிலைகளானது போதிய அளவில் காணப்பட, வருடமுழுவதும் மிகவும் அற்புதமான கால நிலையையும் கொண்டிருக்கிறது. மேலும், மனதினை மெருகூட்டும் சுவாரஷ்யமாக, பல்கத் தொடர்ச்சியின் குளுமையும் அழகு சேர்க்கிறது.

Valliravindran

 பாதாமி:

பாதாமி:

வடக்கு கர்நாடகாவின் பகல்கோத் மாவட்டத்தில் காணப்படும் மிகவும் பெயர் பெற்ற ஒரு குகை தான் பாதாமியாகும். இவ்விடம், அருமை மிகுந்த சாலுக்கிய கட்டிடக்கலையின் நினைவூட்டலாக விளங்குகிறது.

இதனை முன்பு ‘வடப்பி' என்றழைக்கப்பட, 6ஆம் நூற்றாண்டின் சாலுக்கிய வம்சத்தின் தலைநகரம் இது என்பதும் நமக்கு தெரிய வருகிறது. பாதாமி குகையின் வழியாக நாம் செல்ல, மீண்டும் ஒரு முறை வர வேண்டுமெனவும் மனதை தூண்டும்.

Dineshkannambadi

 நாகர்ஹோல்:

நாகர்ஹோல்:

நீலகிரி உயிர்க்கோல ரிசர்வின் ஒரு அங்கமாக இது விளங்க, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தினால், நாகர்ஹோல் தேசிய பூங்கா என முடிவெடுக்கப்பட்டது.
வொடையார் வம்சத்தின் வேட்டையாடும் பகுதியாக இந்த பூங்கா விளங்க, அதன்பின்னர், வனவிலங்கு ஆர்வலர்க்கும், புகைப்பட ஆர்வலர்களுக்கும் ஏற்ற அழகிய விடுமுறைக்கான இடமாக இதனை தேர்வு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

Imrozbaig

 தேவ்பாக் கடற்கரை:

தேவ்பாக் கடற்கரை:

ஸ்னோர்கெல்லிங்க் எனப்படும் நீந்துதல், தோல் படகு சவாரி, வாழை படகு சவாரி, நீர் ஸ்கூட்டர்கள், என அதிசயமூட்டும் பல கடற்கரை விளையாட்டுகள் காணப்பட, தேவ்பாக் தீவானது, அங்கே கதிரவனின் மறையும் அழகிய காட்சியை உங்கள் கண்களுக்கு தர காத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய சோர்வினை போக்க காணப்படும் சிறந்த இடங்களுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

கர்வாரின் அருகில் இவ்விடம் காணப்பட, சுற்றுலா பயணிகளின் பாதச் சுவடுகள் குறைவாக பட்டதோர் இடமும் கூட இது என்பது நமக்கு தெரியவர, நம் பயணத்தின் அழகானது மேலும் மெறுகேற்றபடுகிறது.

Kunal Mukherjee

 ஆரக்கு பள்ளத்தாக்கு:

ஆரக்கு பள்ளத்தாக்கு:

கிழக்கு தொடர்ச்சியின் ஒடிஸா எல்லையின் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆரக்கு பள்ளத்தாக்கு, மறைந்திருந்து நம்மை பார்க்கும் ஓர் அழகிய விடுமுறை தளமாகும். இவ்விடம், இயற்கை ஆர்வலர்களுக்கும், வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் ஏற்ற சிறந்த இடமாக விளங்குகிறது.

காலிகொன்டா, ரக்தகொன்டா, சித்தமொகொன்டி ஆகிய மலைப்பகுதிகளின் இயற்கை வருடல், நம் மனதினை தாலாட்டி தூங்க வைக்க, ஆரக்கு பள்ளத்தாக்கானது நம்முடைய விடுமுறை பட்டியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.

Arkadeepmeta

 அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:

கம்பீரமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் காட்சியானது சோலாயார் காட்டினை கவர்ந்திட, இங்கே காணும் அமைதியான சூழலானது பார்ப்பவர்கள் மனதில் பரவசத்தை உண்டாக்கி உன்னதமானதோர் உணர்வினை மனதில் தேக்குகிறது.

தூய்மையான, குளிர்ச்சி மிகுந்த தண்ணீர் தெளிப்பின் மூலம், 80 அடி உயரத்திலிருந்து நீரானது கீழே விழுகிறது. மேலும், சுதந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாலக்குடி நதியும் நம் மனதில் புத்துணர்ச்சியை நிரம்ப செய்கிறது.

Framesnlight

 வட்டக்கணல்:

வட்டக்கணல்:

மேற்கு தொடர்ச்சியின் கிழக்கு பகுதியில் ஒரு அங்கமாக விளங்கும் இந்த சிறிய குக்கிராமமானது, ‘வட்டா' அல்லது ‘குட்டி இஸ்ரேல்' என்றழைக்கப்படுகிறது.
அக்டோபரிலிருந்து இங்கே இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட, அவர்களுடைய நிரந்தர வீடுகளும் இங்கே தென்படுகிறது.
பழனி மலையின் தெற்கு முனையில் இந்த இடமானது காணப்பட, யாரும் கண்டிராத இடமாக உங்கள் விடுமுறையின் கனவினை நினைவாக்கி பயணத்தில் பரவசத்தை அள்ளி தெளிக்கும் என்பதே உண்மை.

San95660

Read more about: travel south india

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more