Search
  • Follow NativePlanet
Share
» »இந்தமாதிரி கொண்டாட்டமெல்லாமா இந்தியாவுல இருக்கு?

இந்தமாதிரி கொண்டாட்டமெல்லாமா இந்தியாவுல இருக்கு?

By Udhaya

கொண்டாட்டங்களே இல்லாத மாதம் ஒன்றை சொல்லுங்கள். அட அப்படி எதுவுமே இல்லை என்கிறீர்களா. உங்கள் கருத்தின்படியே உண்மை. ஆம். அப்படி எந்த மாதமும் நம்மை கடப்பதில்லை.

இந்தியாவில் எல்லா மாதமும் கொண்டாட்டங்கள் நிறைந்தே காணப்படும். சித்தரைப் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி பெருக்கு, புரட்டாசி என தமிழ் மாதங்களை எடுத்தாலும், ஜனவரி முதல் டிசம்பர் முடிய ஆங்கில மாதங்களை பார்த்தாலும் எந்த மாதமும் விழாக்கள் இல்லாமல் இல்லை. வேண்டுமானால் விழாவுக்கு உங்கள் அலுவலகத்தில் விடுமுறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் விழா ஒவ்வொரு மாதமும் வந்துகொண்டே இருக்கிறது.

தமிழர்களின் விழா, மலையாளிகள் விழா, கன்னடர்களின் கொண்டாட்டம், தெலுங்கர்களின் கொண்டாட்டம் என தென்இந்தியா மட்டுமல்ல வட இந்தியாவும் ஹோலி, தசரா என ஏகப்பட்ட பண்டிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. வாருங்கள் இந்த விழாக்களை கொண்டாடும் இடங்களையும், அங்கு நடக்கும் கொண்டாட்டங்களையும் ஒரு சேர இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

 தீபாவளி

தீபாவளி

தீப ஒளித் திருநாள் எனும் ஒளி பண்டிகை தான் தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் கொண்டாடப்படும் திருவிழா இதுவாகும்.

வீடு முழுவதும் ஒளிகளால் நிரப்பி, பட்டாசுகளும், வண்ண நிற ஒளிப்பிழம்புகளும் தெரிக்க அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை உணர குடும்பமும், உற்றார் உறவினர்களும் மகிழ்ந்திருக்கும் திருவிழா இதுவாகும்.

வீடுகள்தோறும் இனிப்புகள் செய்து பலகாரங்களை பகிர்ந்தளித்து இன்பமாய் சுற்றம் சூழ வாழ ஒளி ஏற்றும் திருவிழா இதுவாகும்.

இந்தியாவில் தீபாவளியை சிறப்பாக கொண்டாட நீங்கள் விரும்பினால் நிச்சயமாக வாரணாசிக்கு செல்லலாம். வாரணாசி ஆரத்தி, கங்கை நதிக் கரை, தீபாவளி என அந்த இடமே அதிரும் வகையில் கொண்டாடப்படும்.

ஜெய்ப்பூரின் கொண்டாட்டங்கள் தீபாவளிக்கு மேலும் அழகு சேர்க்கும்.

அமிர்தசரஸ் தீபாவளி கொண்டாட்டத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா. போய் பாருங்கள் தெரியும்.

Khokarahman

ஹோலி

ஹோலி

இந்த வருடத்துக்கான ஹோலி பண்டிகை மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற்றது. இது மிகவும் சிறப்பான ஒரு தருணங்கள் நிறைந்த பண்டிகையாக அமைந்தது.

இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே ஹோலி சிறப்பாக கொண்டாடப் பட்டு வந்த நிலையில் தென் மாநிலங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிமிர்ந்து வந்து கொண்டாடி களைப்புற்றது.

பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது ஹோலி. முக்கியமாக சென்னை தமிழர்களின் பூமியாக இருந்தாலும், சிலர் கிளர்ச்சி செய்யும் விதமாக பண்டிகைகளை தவறாக பேசினாலும், விழாக்கள் மனிதத்தை வலியுறுத்துபவை. கொண்டாட்டங்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் என அதையும் மீறி வெளி வந்து தமிழர்களே கொண்டாடினது சிறப்பாக இருந்தது.

இனி அடுத்த வருடம் ஹோலி பண்டிகை மார்ச் 20ம் தேதி வருகிறது. அனைவரும் பகைமை மறந்து வண்ணப் பொடிகள் தூவி, ஹோலியைக் கொண்டாடக் காத்திருக்கின்றனர்.

Narender9

தசரா

தசரா

தசரா என்கிற விழா மொத்தத்தில் இந்தியாவின் மூன்று இடங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

உதய்ப்பூர்

மைசூரு

கொல்கத்தா

இந்த மூன்று இடங்களிலும் அவ்வளவு கொண்டாட்டங்களும் குதூகலமும் நிறைந்திருக்கும்.

உதய்ப்பூரைப் பொறுத்த வரையில் இங்கு கொண்டாடப்படும் தசரா மகாநவமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு விஜயதசமி நாளில் கொண்டாட்டங்கள் நடைபெறும். மிகவும் சிறப்பான உதய்ப்பூர் நகர தசரா கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்றதாகும்.

மைசூரு தசரா

மைசூரில் தசரா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். விஜயதசமி நாளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது மகிஷாசூரன் எனும் அரக்கனை சாமுண்டி தேவி கொன்றதன் நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இதன் 408 வது ஆண்டு விழாவாகும்.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே இந்த விழா விஜயநகர பேரரசர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. அவர்களுக்கு பிறகு வந்த ஒடையார் வம்சத்தினர் தசராவை திருவரங்கப்பட்டினத்தில் கொண்டாட ஆரம்பித்தனர்.

Kalyan Kumar

நவராத்திரி

நவராத்திரி

தசரா பண்டிகையை ஒட்டியே வரும் இந்த பண்டிகையும் இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படும் இந்த திருவிழா நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட இடங்கள் என இல்லாமல் இந்தியாவின் எல்லா இடங்களிலும் இந்துக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

Ms Sarah Welch

 கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணர் அவதரித்த நாளாக அவரது பிறந்த நாளன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. எல்லா கோயில்களும், வீடுகளும் கிருஷ்ண ஜெயந்தி விழா அன்று சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வண்ண பூக்களும் வண்ண ஒளி நிறைந்ததுமாக காட்சிதரும். கிருஷ்ணரின் பாதங்கள் வரைந்து மெல்ல அடி எடுத்து அவர் வீட்டினுள் வருவதாக நினைத்து அவருக்கு பூசைகள் செய்து தயாரிக்கப்பட்ட பண்டங்களை பகிர்ந்தளித்து மகிழ்வர்.

Avsnarayan

 பிள்ளையார் சதுர்த்தி

பிள்ளையார் சதுர்த்தி

பிள்ளையார் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கணேச சதுர்த்தி என ஒவ்வொரு பெயர்களால் மற்ற மாநிலங்கள் உட்பட இந்தியாவின் எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது.

மகிப்பெரிய விநாயகர் சிலை வடித்து, பத்து நாள்கள் பூசை செய்து அவரை கடலிலோ, ஆற்றிலோ கரைப்பார்கள். விழாக்கோலம் பூண்டு திகழும் அந்த இடமே விநாயகர் வலம் வருவதாக நினைத்து நெகிழப்படும்.

தோரணங்கள், மாலைகள் கட்டி, விநாயகர் பாடல்கள் ஒலிக்கப்பட்டு கொண்டாட்டமும், மேள தாளங்களும் நிகழ, கடைசி நாளில் விநாயகரை கடலில் கொண்டு கரைப்பார்கள். இது குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும் பொருட்டு கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

Chris

கும்பமேளா

கும்பமேளா

இந்தியாவிலேயே அதிகம் பேர் ஒரு இடத்தில் கூடும் பண்டிகை இதுதான். மகா கும்பமேளா 144வருடங்களுக்கு ஒரு முறையும், பன்னிரெண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை முழு கும் ப மேளா வும், ஆறு ஆண்டு களுக்கு ஒரு முறை அர்த் கும்ப மே ளா வும் கொண்டாடப்படுகிறது.

கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும் சேர்ந்து ஒரு இடத்தில் சங்கமமாகும் திரிவேணி சங்கமத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும் இந்த விழாக்கள் சில ஆண்டு கணக்கில் சில வரைமுறைகளுடன் நடைபெறுகிறது.

Suyash Dwivedi

சிவராத்திரி

சிவராத்திரி

சிவராத்திரி அல்லது மகா சிவராத்திரி என்று அழைக்கப்படும சிவ பெருமானு க்கு உரிய பண் டிகை யாக இந்த சிவ ராத் திரி திரு விழா நடை பெறுகிறது. இதில் இரவு முழுவதும் மக்கள் தங்கள் தூக்கத்தை துறந்து சிவ துதி பாடல் கள் பாடி, சிவனையே நினைத்து தூங்காமல் இருக்கின்றனர். இதனால் சிவனின் அருள் தங்களுக்கு கிடைப்பதாக நம்பிக்கை உண்டு.

Pavuluri satishbabu 123

ரக்ச பந்தன்

ரக்ச பந்தன்

சகோதரத்துவத்தின் உண்மையை உணர்த்தும் ரக்ச பந்தன் திருவிழா இந்தியாவில் பெரும்பாலும் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். தமிழகத்தில் முன்னர் இருந்த மாதிரி இல்லாமல் தற்போது இந்த விழாவும் கொண்டாடப்படுகிறது

தன் சகோதரனிடம் பரிசு பொருள் பெற்று இந்த ராக்கி கயிற்றை கையில் கட்டி விளையாடுவர். இது பாசம் நிறைந்த ஒரு சம்பிரதாயமாகவும் பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கி மகிழ்கிறார்கள்.

Narendra Modi

 ராம நவமி

ராம நவமி

ராமர் பிறந்த நாளையும் இந்தியாவில் சில மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவரது பக்தர்கள், ராம கோயில்களில் மிகவும் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்து மகிழ்வார்கள். குடும்பத்தினருடன் ராம கோயிலுக்கு சென்று, ராம பிரானின் அருள் பெற்று திரும்புவார்கள்.

Ganesh Dhamodkar

அஸ்ஸாம் பிஹு திருவிழா

அஸ்ஸாம் பிஹு திருவிழா

அஸ்ஸாமில் கொண்டாடப்படும் பிஹு திருவிழா நம்முடைய பொங்கல் பண்டிகைக்கு ஒப்பானது. அதாவது உழவர்களின் திருவிழாவான பிஹு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் கொரு பிஹு என்ற பெயரில் நம் மாட்டுப் பொங்கல் போலவே மாடுகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.

இரண்டாம் நாளான அஸ்ஸாம் புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து 'பிஹுகீத்' என்ற நாட்டுப்புற பாடல்களை பாடி மனுஹ் பிஹுவை கொண்டாடுகிறார்கள்.

மூன்றாம் நாள் கோசை பிஹு கடவுளுக்கானது. இதைத்தொடர்ந்து சோட் பிஹு, குடும் பிஹு, செனெஹி பிஹு, மேளா பிஹு, சேரா பிஹு என்று அடுத்தடுத்து 7 நாட்கள் சாட் பிஹு என்ற பெயரில் பிஹு திருவிழாவை அஸ்ஸாம் மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கொல்கத்தா துர்கா பூஜா

கொல்கத்தா துர்கா பூஜா

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவையே மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா என்று அழைக்கிறார்கள்.

இவ்விழாவின் போது பல இடங்களில் 'பேண்டல்கள்' (பந்தல்கள்) அமைத்து அதில் அசுரனை வதம் செய்யும் துர்கா சிலை, லட்சுமி சிலை, சரஸ்வதி சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.

இந்த பந்தல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தீம் கொண்டு அமைக்கப்படுவதோடு இரவு முழுவதும் வங்காளிகள் ஒவ்வொரு பந்தலுக்கும் சென்று வழிபாடு செய்வார்கள். மேலும் சிறந்த பந்தல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.

திரிசூர் பூரம் திருவிழா

திரிசூர் பூரம் திருவிழா

திரிசூர் தேக்கின் காடு பகுதியில் ஜன சமுத்திரத்துக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் கேரள மேடம் மாதத்தில் (ஏப்ரல் மத்தியிலிருந்து மே மத்திமம் வரை) குடமாட்டத்துடன் கோலாகலமாக தொங்குகிறது பூரம் திருவிழா.

அப்போது நெற்றிப்பட்டத்துடனும், ஆபரணங்களுடனும் அலங்கரிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட யானைகள் பரமேக்காவு, திருவம்பாடி எனும் இரு அணிகளாக வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதன்பிறகு இந்த யானைகள் திரிச்சூர் நகரம் அல்லது வடக்குநாதன் கோயிலின் மையப்பகுதியை கடந்துச் செல்லும்.

இதைத்தொடர்ந்து நடத்தப்படும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் உலகில் வேறு எங்கும் நடத்தப்படுகின்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகளோடு போட்டியிடக்கூடியவை.

புஷ்கர் திருவிழா

புஷ்கர் திருவிழா

ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் கால்நடை சந்தை உலகப் புகழ் பெற்றது.

இசை, நடனம் என்று ஓட்டகப் பந்தயத்துடன் கோலாகலமாக புஷ்கர் திருவிழா துவங்கும். இதன்பிறகு பானை உடைக்கும் போட்டி, பெரிய மீசை போட்டி, மணப்பெண் போட்டி என்று விமரிசையாக 3 லட்சம் மக்களுடனும், 20,000 ஓட்டகம், குதிரைகள் மற்றும் கால்நடைகளுடனும் புஷ்கர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Read more about: travel mysore udaipur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X