Search
  • Follow NativePlanet
Share
» »காஷ்மீர் தால் ஏரி முதல் கேரளா படகு இல்லம் வரை...இந்தியாவில் அட்டகாசமான படகு சவாரிக்கு ஏற்ற இடங்கள்

காஷ்மீர் தால் ஏரி முதல் கேரளா படகு இல்லம் வரை...இந்தியாவில் அட்டகாசமான படகு சவாரிக்கு ஏற்ற இடங்கள்

இந்தியாவில் அமைதியான உப்பங்களிகள் முதல் உற்சாகமான அதிவேக நதி பயணங்கள் வரை அற்புதமான படகு சவாரி செய்வதற்கு ஏற்ற அற்புதமான பல இடங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள இயற்கை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்க கூடிய ஏழு அழகான புதிய அனுபவத்தை தரக்கூடிய படகு பயணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Most wonderful lake boat rides in India you must know

தால் ஏரி ஷிகாரா சவாரி ஸ்ரீநகர்

இந்தியாவில் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது தால் ஏரி. இதில் ஷிகாரா என்னும் பாரம்பரிய மரப்படகில் அழகிய பனிமூடிய மலைகள் மற்றும் மிதக்கும் தோட்டங்களால் சூழப்பட்ட தால் ஏரியின் அழகினை கண்டு ரசித்தவாறு பயணம் செய்யலாம். இந்த ஏரி காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

கேரளா படகு வீடு

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது படகு வீடு சவாரி ஆகும். ஆலப்புழா மாவட்டத்தில் இந்த படகு வீடு சவாரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரபிக் கடலின் அருகில் அமைந்துள்ள உப்பங்களியான இந்த படகு வீடு சவாரியில் ஓய்வெடுத்தவாரு பசுமையான தென்னந்தோப்புகள் மற்றும் அழகிய கிராமங்களை கண்டு களிக்கலாம்.

Most wonderful lake boat rides in India you must know

கங்கை நதி படகு சவாரி

கங்கை நதியில் அமைந்துள்ள வாரணாசியின் வரலாற்று சிறப்புமிக்க மலைத்தொடர்களையும் கண்டு ரசித்தவாறு பயணம் மேற்கொள்ளலாம்.காலை வேளையில் கங்கை நதியில் சூரிய உதயத்தையும், மாலை வேலையில் கங்கா ஆரத்தியும் படகில் இருந்தவாறு கண்டு மகிழலாம்.

சிலிகா ஏரி

ஆசியாவில் மிகப்பெரிய உவர் நீர் ஏரியா ஆகும். இது ஒடிசா மாநிலத்தின் பூரி கேதார் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் பறந்து காணப்படுகிறது. இங்கு அழிந்து வரும் ஐராவத டால்பின்களின் இருப்பிடமாக சிலிக்கா ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி செய்து அழிந்து வரும் ஐராவத டால்பின்களை கண்டு கழித்தவாறு ஜாலியாய் தீவையும் பார்வையிடலாம். மேலும் இந்த ஏரி யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றது கூடுதல் சிறப்பாகும்.

சுந்தரவன சதுப்பு நில படகு சவாரி

கங்கை பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகள் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கும் பகுதியில் உருவான சதுப்பு நில காடு ஆகும். இது உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடாகும். இந்த சதுப்பு நில காடுகளை கண்டுகளித்தவாறு செல்லும் படகு சவாரியில் பெங்கால் புலிகளையும் காணலாம்.

நர்மதா நதி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ளது இந்த நர்மதா நதி. சூரிய ஒளியால் நிறங்களை மாற்றும் உயரமான வெள்ளை பளிங்கு பாறைகள் வழியாக அதன் அழகினை கண்டு ரசித்தவாறு படகு சவாரி செய்யலாம்.

தெஹ்ரி ஏரி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி அணை இந்தியா மற்றும் உலகின் மிக உயரமான அணையாகும். இந்த அணையில் அதிவேக படகு சவாரி உள்ளது. இந்த படகு சவாரியில் இமயமலையின் அழகினை கண்டு ரசித்தவாறு அதிவேகமாக பயணத்தை அனுபவிக்கலாம்.

More News

    Read more about: boat ride india lake
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+