Search
  • Follow NativePlanet
Share
» » கைலாய மலைக்கான சாலை தயாராகிவிட்டது – இனி சிரமமின்றி கைலாய யாத்திரைக்கு செல்லலாம்!

கைலாய மலைக்கான சாலை தயாராகிவிட்டது – இனி சிரமமின்றி கைலாய யாத்திரைக்கு செல்லலாம்!

ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் அம்மை பார்வதியுடன் பூத கணங்கள் சூழ இமயமலையின் கயிலையில் குடி கொண்டுள்ளார் என்பது பல கோடி இந்து மக்களின் நம்பிக்கையாகும். இது நம்பிக்கை மட்டுமின்றி, பல வேதங்களும் புராணங்களும், இதிகாசங்களும் அதைத் தான் கூறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் கயிலாய யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் இது எளிதான யாத்திரை பயணமே அல்ல! மிக மிக மிக சிரமமானது. இதை சற்றே எளிதாக்கும் வகையில், உத்தரகாண்ட்டின் லிபுலேக்கில் இருந்து கைலாஷ் மானசரோவரருக்கான சாலை போடப்பட்டு வருகிறது. இது 2024-ல் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கயிலாயத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான்

திருக்கயிலாயத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான்

எம்பெருமானுக்கு இந்த நாட்டில் எத்தனை ஆயிரம் கோவில்கள் இருந்தாலும், அவரது வீடாகக் கருதப்படுவது அந்த கயிலையே. சிவபெருமான் மலை வடிவில் அங்கு ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாக கூறுகின்றனர். எத்தனையோ பேர் முரண்பாடாக அந்த மலை ஏற முயற்சித்ததாகவும் இன்றளவும் அது எவராலும் செய்து முடிக்கப்படாத காரியமாகவே உள்ளது. கயிலை மலை கோடானுகோடி இந்து மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்துக்கள் மட்டுமின்றி, ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கும் இது புனிதத்தன்மை வாய்ந்த மலையாகும்.

புனித கயிலாய யாத்திரை

புனித கயிலாய யாத்திரை

மிகவும் புனிதத் தன்மை வாய்ந்த இந்த கயிலை மலையை காண வேண்டும் வாழ்வில் ஒருமுறையேனும் கயிலாய யாத்திரை சென்று வரவேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு தானே! ஆனால் அது அவ்வளவு சாமானிய காரியமே அல்ல. இந்த யாத்திரைக்கு செல்ல நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அங்கு நிலவும் குளிர், மோசமான வானிலை ஒரு புறம் இருந்தாலும், பாதையும் அவ்வளவு எளிதாக இருக்காது. கரடு முரடாகவே காணப்படும். ஆனால் இப்பொழுது, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

கடினமான பயணம்

கடினமான பயணம்

இப்பகுதியின் உயரமான இடமும் சவாலான சாலையும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கானது அல்ல. உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியை இணைக்கும் லிபுலேக் கணவாய் கடுமையான வானிலை மற்றும் பயணிக்கத் தகுதியற்ற நிலப்பரப்புகளை எதிர்கொள்கிறது. இதைப் பற்றி கடந்த காலத்தில் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். அதனை எல்லாம் கருத்தில் கொண்டு, 2005 இல், கைலாஷ் மானசரோவர் சாலைக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருப்பினும், இந்த திட்டம் 2018 இல் திருத்தப்பட்டு இப்போது மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

துரிதப்படுத்தப்பட்ட பணிகள்

துரிதப்படுத்தப்பட்ட பணிகள்

இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங், ஏராளமான நீட்டிப்புகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்குள் சாலையின் பணியை முடிக்க அவர்கள் நம்புவதாகவும், இது இந்தியாவின் கடைசி புள்ளி வரை யாத்ரீகர்கள் வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார். எல்லைச் சாலைகள் அமைப்பானது பணியை விரைவுபடுத்தி, எதிர்பார்த்ததை விட முன்னதாகவே பணிகளை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதியாக குறையும் பயண நேரம்

பாதியாக குறையும் பயண நேரம்

இந்த புதிய பாதையில் யாத்ரீகர்கள் பித்தோர்காத் வரை பயணித்து பின்னர் சீன எல்லையில் அமைந்துள்ள லிபுலேக் கணவாய் வரை பயணிக்க வேண்டும். இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், யாத்ரீகர்களின் பயணத்திற்கு பெரிதும் உதவும் என்று அவர் கூறினார், அதாவது யாத்ரீகர்களின் பயண நேரம் கிட்டத்தட்ட ஒரு வாரம் குறையுமாம். இதன் மூலம் பக்தர்கள் சிரமமின்றி வாகனங்களில் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.'

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு கைலாய யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலோ, அல்லது நீங்களே செல்ல விருப்பப்பட்டாலோ இனி எந்த

Read more about: lipulekh pass uttarakhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X