» »இந்த கோடையில் முதுமலை காடுகளுக்குள் என்னவெல்லாம் பாக்கலாம் தெரியுமா?

இந்த கோடையில் முதுமலை காடுகளுக்குள் என்னவெல்லாம் பாக்கலாம் தெரியுமா?

Written By: Udhaya

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது. நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன.

பந்திப்பூர் தேசிய பூங்கா

பந்திப்பூர் தேசிய பூங்கா


பண்டிபூர், முதுமலை, வயநாட் ஆகிய இம்மூன்றும் சேர்ந்த வனப்பகுதி தென்னிந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய காட்டுயிர் வனப்பிரதேசமாக அமைந்துள்ளது. இதில் உலகப்புகழ் பெற்ற ‘அமைதிப் பள்ளத்தாக்கு' அமைந்துள்ள நீலகிரி உயிரியல் பாதுகாப்புப்பகுதியும் அடங்கும்.


அரிய விலங்குகள்

கபினி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த பண்டிபூர் வனப்பகுதி பல காட்டுவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. சிறுத்தை, காட்டெருமை, பல வகை மான்கள், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், குள்ளநரி போன்றவை இங்கு வாழ்கின்றன. கபினி ஆற்றின் பல துணை ஒடைகளும் அவற்றை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இந்த காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கான உணவுக்கேந்திரமாக விளங்குகின்றன. சில அரிய வகை பறவைகளான கரிச்சான் குருவிகள், காட்டுக்கோழிகள், கௌதாரி, மயில், மயிற்கோழி மற்றும் புறாக்களுடன் பருந்து, வல்லூறு, போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

இயற்கையின் வரப்பிரசாதம்

தாவர வகைகளில் சந்தன மரம் , கருங்காலி மரம் மற்றும் தேக்கு மரங்கள் இந்த வனப்பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன. பெரிய மரங்களும் புதர்க்காடுகளும் நிறைந்து காணப்படும் இந்த வனப்பகுதி இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடமாய் அமைந்துள்ளது. ஊர்வன விலங்குகளில் கரு நாகம், விரியன், சாரை, கட்டு விரியன் மற்றும் பலவிதமான பல்லி வகைகள், பச்சோந்திகள் பண்டிபூர் வனப்பகுதியில் பெருமளவில் வசிக்கின்றன.

எப்படி செல்வது

குறைந்த கட்டணத்தில், நிறைந்த வசதியுடன் கர்நாடக அரசு பேருந்துகள் பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இது தவிர பயணிகள் வேன்கள், சொகுசு கார்கள் போன்றவற்றை பெங்களூர் அல்லது மைசூரிலிருந்து வாடகைக்கு எடுத்தும் செல்லலாம்

PC: Swaminathan

முதுமலை தேசிய பூங்கா

முதுமலை தேசிய பூங்கா


முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும். அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம்.

விலங்குகளும் பறவைகளும்

பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி மற்றும் மறியமான் ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன. அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யாணைகள் இந்த சரணாலயத்தில் அலைந்து திரிகின்றன.

எப்படி செல்லலாம்

கூடலூரில் இருக்கும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தின் அருகே இருக்கிறது. இது உதகமண்டலம்-மைசூர் நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. உதகமண்டலம், மைசூர் மற்றும் அண்டை நகரங்களில் இருந்து முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு பேருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன.

KARTY JazZ

தெப்பக்காடு யானைகள் முகாம்

தெப்பக்காடு யானைகள் முகாம்

1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன.

ஆண்டுதோறும் லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். யானை குறித்த கல்வியை பரப்புவதற்கு இது ஒரு கல்வி நிலையமாகவே செயல்படுகின்றது.

சுற்றுப்புறம் சார்ந்த சுற்றுலாவுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மனித-யானை பகைகளை தீர்த்துக்கொள்ளவும், அந்த மிருகத்தை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த தெப்பக்காடு யானை முகாம் உதவுகின்றது.


எப்போது எப்படி ?

காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

பார்வை நேரம் : காலை 5:30 - மாலை 6:00

நுழைவு கட்டணம் : ரூ. 50

இந்த நகரம் கூடலூரில் இருக்கும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தின் அருகே இருக்கிறது. இது உதகமண்டலம்-மைசூர் நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. உதகமண்டலம், மைசூர் மற்றும் அண்டை நகரங்களில் இருந்து முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு பேருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன. பல கொண்டை ஊசி வளவுகள் இருப்பதால், வண்டி ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

Marcus334

ஊசிமலை வியூபாய்ண்ட்

ஊசிமலை வியூபாய்ண்ட்


இந்த இடம் ஊட்டி அருகே அமைந்துள்ள கூடலூரில் உள்ளது. ஊட்டியிலிருந்து மேற்கில் 50கிமீ தொலைவில் கூடலூரிலிருந்து 8 கிமீ தூரம் வரையில் இருக்கலாம். கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த இடம் உங்களுக்கு 360டிகிரி கோணத்தில் அமைந்து காட்சியை வழங்குகிறது. இங்கிருந்து சுற்றியுள்ள மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு கூம்பு வடிவில் காட்சிதருகிறது. தமிழகத்திலேயே வேறெங்கும் இப்படி ஒரு காட்சியை காணமுடியாது. சின்னப்பூவே மெல்லப் பேசு எனும் படத்தில் இந்த இடத்தை அவ்வளவு அற்புதமாக படம்பிடித்திருப்பார்கள்.

சீதா தேவி கோயில்

கேரள வர்மா பழசி ராஜாவால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோயில் வயநாட்டில் அமைந்துள்ளது. இந்த காடுகள் மிகவும் பரந்து விரிந்துள்ளதால் அவ்வளவு சீக்கிரம் எல்லா இடங்களையும் பார்க்கமுடியாது. எனினும் இந்த கோயில் நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஒரு இடமாக அமைந்துள்ளது. திப்பு சுல்தானின் படை வீரர்கள் இந்த கோயிலை அழித்துவிட்டதாகவும், பின் சீதா தேவியின் அற்புதத்தால் தாமாகவே கட்டிக்கொண்டதாகவும் இந்த கோயில் பல மர்மங்களை உள்ளடக்கியதாகவும் கூறப்படுகிறது.

Raj

 முத்தங்கா காட்டுயிர் சரணாலயம்

முத்தங்கா காட்டுயிர் சரணாலயம்


1973ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த அமைப்பு பாதுகாக்கப்பட்ட காடுகள் பட்டியலில் வரும் பந்திப்பூர் மற்றும் நாகர்கோல் ஆகிய இடங்களுக்கு இடைப் பட்ட பகுதி ஆகும்.
இங்கு நிறைய யானைகள் ஜாலியாக சுற்றி வருவதை காணமுடியும். பறவைகள், பட்டாம்பூச்சிகள் உட்பட பல பூச்சி இனங்கள் கொண்ட இயற்கையின் ஒட்டுமொத்த பல்லுயிர்களும் வாழ்வாதாரமாக விளங்கும் காடுகளில் ஒன்றாகும்.

இங்கு யானைகள், புலிகள், மான் வகைகள், குரங்குகள், பறவைகள் என நிறைய உயிரினங்களைக் காணலாம்.

சஃபாரி

வேன் சஃபாரிக்கு காலை 6.30மணி முதல் 9 மணி வரையிலும், பின் மாலை 3.30மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்லமுடியும்.

யானை சவாரிக்கு காலை 7 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 3.30மணி முதல் 5 மணி வரையிலும் செல்லலாம். பூங்காவானது காலை 7 முதல் மாலை 6 வரை திறந்திருக்கும்.

PC: moorthy

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்