» »மும்பை - ஃபோட்டோ டூர்!!

மும்பை - ஃபோட்டோ டூர்!!

Written By: Staff

மும்பை இந்தியாவின் உலக நகரம்!

பிரபல எழுத்தாளர், குஷ்வந்த் சிங், மும்பையைப் பற்றி சொல்லும்போது, மும்பை ஒன்றுதான் இந்தியாவின் அசல் நகரம், கொல்கத்தா, சென்னை எல்லாம் பெரிய சைஸ் கிராமங்கள் என்றார்! அவர் சொன்னது ஒரு வகையில் சரிதான்; இன்றும், வெளி நாட்டினருக்கு இந்தியா என்றால் மும்பைதான் முதலில் நினைவிற்கு வரும்.

பொருளாதாரம் விரிவடைந்த பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகத்தான் சென்னையில் பல அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது. அது வரை, தமிழ்ப் படங்களில் காட்டுவது போல, LIC நிறுவனம், அண்ணா மேம்பாலம் மட்டும்தான் சென்னை என்ற நகரத்திற்கு அடையாளம்.

ஆனால், மும்பை அப்படியல்ல 60-70 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து பலதரப்பட்ட மக்கள் வேலை தேடி, வணிகம் செய்து உருவான ஒரு பெரு நகரம். குஜராத்திகள், பார்ஸிகள், யூத‌ர்கள், தமிழர்கள், மலையாளிகள், பீகாரிகள் என்று பன்முகத்தன்மை கொண்ட முதல் இந்திய பெரு நகரம்.

பெருங் கோட்டைகள், மரேன் ட்ரைவ் கடற்கரை சாலையில் போகும் வெளிநாட்டு கார்கள், டபுள் டெக்கர் பேருந்துகள், வானைத் தொடும் கட்டிடங்கள், காற்றுகூட புக முடியாதபடி லட்சம் மக்கள் நெருக்கி கொண்டு பயணிக்கு மின்சார ரயில் என்று மும்பைக்கு பல சிறப்புகள். மும்பை போன்ற பெரு நகர வாழ்க்கையின் வேகத்தில் வாழ்ந்து விட்ட ஒருவர், சென்னையில்கூட அவரால் தாக்குப் பிடிக்க முடியாது என்று பலர் சொல்வதுண்டு.

இப்படி பட்ட சிறப்பான மும்பைக்கு ஒரு ஃபோட்டோ டூர் போகலாம்!!

புகழ்பெற்ற மும்பை தாஜ் ஹோட்டல் -கேட்வே ஆஃப் இந்தியா எதிரே

புகழ்பெற்ற மும்பை தாஜ் ஹோட்டல் -கேட்வே ஆஃப் இந்தியா எதிரே

மும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம்.

மும்பை தாஜ் ஹோட்டல்

மும்பை தாஜ் ஹோட்டல்

பல தமிழ்ப் படங்களில் பார்த்திருப்பீர்கள். மும்பைக்கு ஒரு முக்கிய அடையாளம் இந்தப் புறாக்கள். குறிப்பாக கேட்வே ஆஃப் இந்தியா அருகே பெருந்திரளாக எப்போதும் புறாக்கள் கூட்டம் இருக்கும். அவை ஓன்றாக மேலே பறக்கும் காட்சி தனி அழகு

மும்பைக்கே உரிய சிறப்பு: டபுள் டெக்கர் பேருந்துகள்

மும்பைக்கே உரிய சிறப்பு: டபுள் டெக்கர் பேருந்துகள்

கொலபா முக்கிய சாலை - Colaba Main Bazaar Street

தனியே தன்னந்தனியே - மின்சார ரயில்

தனியே தன்னந்தனியே - மின்சார ரயில்

Photo Courtesy : S.Mahesh

கேட்வே ஆஃப் இந்தியா

கேட்வே ஆஃப் இந்தியா

புறாக்களுக்கு உணவளிக்கும் சுற்றுலா பயணிகள்.

கொலபா - வெளிநாட்டினர் விரும்பி வரும் ஒரு முக்கிய இடம்.

கொலபா - வெளிநாட்டினர் விரும்பி வரும் ஒரு முக்கிய இடம்.

மாமல்லபுரத்தில் உள்ளது போல் நிறைய கலைப்பொருட்கள், பழங்காலத்து கடிகாரங்கள், மன்னர் காலத்து கட்டிடங்கள்; தொப்பி அணிந்த வெளி நாட்டுப் பயணிகள் ; டபுள் டெக்கர் பேருந்துகள் என வேறு உலகத்தில் இருப்பது போன்று ஒரு பிரமை தரரக்கூடிய இடம்.

மரேன் ட்ரைவ் கடற்கரை

மரேன் ட்ரைவ் கடற்கரை

மும்பையின் அட்டகாசமான கடற்கரை - மரேன் ட்ரைவ் கடற்கரை. இதற்கு ராணியின் அட்டிகை என்று செல்லப்பேர் உண்டு. ஒரு ராணியின் அட்டிகை வடிவில், யு வடிவில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.

மரேன் ட்ரைவ் கடற்கரை

மரேன் ட்ரைவ் கடற்கரை

Photo Courtesy : S.Mahesh

மரேன் ட்ரைவ் கடற்கரை

மரேன் ட்ரைவ் கடற்கரை

Photo Courtesy : S.Mahesh

மும்பை CST ரயில் நிலையம்

மும்பை CST ரயில் நிலையம்

மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். நாட்டின் மிக பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புறநகர் மற்றும் வெளியூர் செல்லும் ரயில்கள் என இரண்டு பிரிவாய் இருக்கும் இந்த ரயில் நிலையம் பகலில்கூட மஞ்சள் கொப்பளிக்கும் வெளிச்சத்தோடு மின்னக்கூடியது.

Photo Courtesy : Aaditya Ganapathy