Search
  • Follow NativePlanet
Share
» »கடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்! இன்றும் அழியாத மர்மம்!

கடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்! இன்றும் அழியாத மர்மம்!

தொழில்நுட்ப வளர்ச்சியில் கட்டிய சிறிய கட்டிடமே அழிந்து போகும் நிலையில், நூற்றாண்டு கடந்து இன்றும் கடல் அழையின் சீற்றத்தால் அழியாத கோட்டை குறித்து தெரியுமா ?

இன்றைய தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் எந்த அளவிற்கு வளர்ந்திருந்தாலும் இயற்கை சீற்றத்திற்கு சற்றும் ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து போவதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். உதாரணத்திற்கு, சாலைகள், காட்டிடங்கள், பாதுகாப்பு அரண்கள் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால், அந்தக் காலத்திலேயே கடலுக்கு நடுவே ஒரு கோட்டையை கட்டி அதில் ஓர் நகரமே இயங்கி வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அவற்றிற்கு எல்லாம் மேலாக இன்றும் அந்தக் கோட்டை கொஞ்சம் கூட சிதிலமடையாமல் அதே கம்பீரத்துடன் வீற்றுள்ளது எத்தகைய வியப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா ?.

16ம் நூற்றாண்டுக் கோட்டை

16ம் நூற்றாண்டுக் கோட்டை


நான்கு புறமும் அரபிக்கடல் சூழ்ந்திருக்க கம்பீரமும், பிரம்மாண்டமும் கொண்ட வரலாற்று மிக்க கோட்டை தான் முருட் ஜஞ்சிராவில் உள்ள கோட்டை. சித்தி ராஜ வம்சத்தினரால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இது தோற்றத்தில் இன்றும் மிரட்டும் தோணியைக் கொண்டுள்ளது. முருட் ஜஞ்சிராவை எதிரிகள் நெருங்கவே முடியாதவாறு வலிமையுடன் கடலில் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோட்டை இக்காலத்து கட்டிடக் கலை நிபுணர்களுக்கு ஓர் சவாலே.

Dr. Raju Kasambe

கோட்டைத்தீவு

கோட்டைத்தீவு


மும்பையிலிருந்து 160 கிலோ மீட்டர் தெற்கே ரைகாத் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து படகில் பயணம் செய்தால் அரபிக்கடலுக்குள் ஓர் பாறையின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த முருத் ஜைஞ்சிரா என்னும் தீவுக் கோட்டையை அடைய முடியும்.

Ninad meshram

கோட்டையின் அமைப்பு

கோட்டையின் அமைப்பு


முருத் கோட்டையின் பிரதான நுழைவு வாயில் ராஜாபுரியை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுவாயிலில் கூட ராஜ வம்சத்தில் தந்திரங்களை பயண்படுத்தியுள்ளனர். அதாவது, படகில் பயணித்து இக்கோட்டையை நோக்கி வரும் போது 10 முதல் சில மீட்டர் அருகில் வந்தால் மட்டுமே கோட்டையின் நுவு வாயில் தெளிவாகத் தெரியும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Gauravketkar

மிரட்டும் பீரங்கிகள்

மிரட்டும் பீரங்கிகள்


இக்கோட்டையை நோக்கி இன்றும் உலக நாடுகள் கவணம் செலுத்தி வரக் காரணம் கோட்டையைச் சுற்றிலும் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு அங்கே இந்தியா, ஐரோப்பா இணைந்து தயாரித்த நெருப்பை வெளியேற்றும் மிகப்பெரிய பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளது தான்.

Sagar Jadhav

கோட்டைக்குள் குட்டி நகரம்

கோட்டைக்குள் குட்டி நகரம்

இந்தியாவிலிருந்து தனித்து விடப்பட்ட தீவாக உள்ள இக்கோட்டையின் உள்ளே அக்காலத்தில் ஓர் குட்டி நகரமே இயங்கி வந்திருப்பது நம்ப முடியாத ஓர் உண்மையாகும். உதாரணமாக, கோட்டையின் உள்ளே நவாப்புகள் தங்குவதற்காக கட்டப்பட்ட இருப்பிடம் இன்றும் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

Mihika Sharma

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


முருட் ஜஞ்சிராவைக் காணவேண்டி நீங்கள் மும்பை பயணம் செய்தீர்கள் என்றால் கூடவே பசைன் கோட்டையைம் கண்டு ரசிக்கத் தவறிவிடாதீர்கள். பசைன் கோட்டை இப்பகுதியில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. பசைன் கடற்கரையை நோக்கியவாறு அமைந்துள்ள பஞ்சலா என்னும் கோட்டையும் முக்கியச் சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nilesh3 str

கரம்பி அணை

கரம்பி அணை


முருட் ஜஞ்சிராவில் பிரசிதிபெற்ற முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று கரம்பி அணை. இரட்டைத் தீவில் அமைந்துள்ள கரம்பி அணை முருட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் நீராதாரமாக உள்ளது.

Nicholas

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+